என் தம்பி

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் தம்பி (En Thambi) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, மற்றும் பலரும் இணைந்து நடித்திருந்தனர்.

என் தம்பி
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புகே. பாலாஜி
கதைஜகபதி பிக்சர்ஸ் (கதை இலாக்கா) ஏ.எல்.நாராயணன் (பாசம் சிவக்கும் - நாவலின் தழுவல்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜாதேவி
ஒளிப்பதிவுதம்பு
படத்தொகுப்புபி.கந்தசாமி
விநியோகம்சுஜாதா பிக்சா்ஸ்
வெளியீடுசூன் 7, 1968
நீளம்4353 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்


சிவாஜி கணேசன் இந்த நேரத்தில் தொடர்ந்து ஊட்டி வரை உறவு (1967), என் தம்பி (1968), தங்கசுரங்கம் (1969) போன்ற மூன்று திரைப்படங்களில் நடித்தார்.[1] இந்த மூன்று திரைப்படங்களில் சிவாஜி கணேசன் உருவ முக சாயல் ஒற்றுமையாக இருக்கும்.

நடிகர்கள் தொகு

படத்தின் குறிப்புகள் தொகு

இந்த படத்தில் சிவாஜி கணேசன் மிகவும் அழகாகவும் ஸ்லிம்மாகவும் நடித்திருந்தார். மேலும் சிவாஜிகணேசன் அவர்களுடன் முதலில் ஜோடியாக இணைந்து நடித்தவர் கே. ஆர். விஜயா அவர்கள் பின்பு இந்த படத்தில் கடைசி பாடலாக வரும் தட்டட்டும் கை தழுவட்டும் என்ற பாடல் காட்சியில் நடிக்கும் போது சிவாஜி சாட்டையால் ஆடும் போது அடிப்பது போல் இருந்தது. இந்த காட்சியில் கே.ஆர்.விஜயா அவர்கள் வேறு நடிகையை வைத்து எடுத்து கொள்ளுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆன கே. பாலாஜியிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். பின்பு இந்த படத்தை கைவிடும் தருவாயில் பாலாஜியும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரும் இருந்தபோது கதாசிரியர் ஜாவர் சீதாராமன் அவர்கள் இந்த படம் தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஆஸ்த்திரபரலு திரைப்படம். இதை தமிழிலும் எடுத்தால் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கூறினார். இருந்தபோதிலும் படத்தில் நடிகை பிரச்சனையை ஜாவர் சீதாராமன் அவர்கள் கே.பாலாஜி உடன் இணைந்து நடிகை சரோஜா தேவி அவர்களை முடிவு செய்தார் ஆனால் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் திருமணத்திற்குப் பிறகு சரோஜாதேவி அவர்கள் உடல் குண்டாகவும், பருமனாகவும் இருந்ததால் காட்சியில் அவர் நடித்தால் சரியாக வருமா என்று கேட்டவுடன் அதற்கு அந்த கதைமேதை ஜாவர் சீதாராமன் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஷாட்பெல்ட் என்ற பெல்ட்டை சரோஜாதேவியின் வயிற்றில் அணிந்து ஒல்லியாக இருப்பதை போன்று உடல் தேகத்துடன் சரோஜாதேவியை நடிக்க வைத்தார் ஜாவர் சீதாராமன் அவர்கள் பின்பு அந்த படமும் தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் காட்சியும் முழுமையாக காட்சி படமாக்கப்பட்டு படம் வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் ஜாவர் சீதாராமன் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சரோஜாதேவிக்கு தந்தை வேடத்தில் நடித்தார் என் தம்பி படத்தில்

மேற்கோள்கள் தொகு

  1. "filmography p13". nadigarthilagam.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_தம்பி&oldid=3899057" இலிருந்து மீள்விக்கப்பட்டது