எமிலியோ அகுயினால்டோ

எமிலியோ ஃபமி அகுயினால்டோ (Emilio Famy Aguinaldo) [c] (22 மார்ச்சு 1869[d] – 6 பெப்ரவரி 1964) அலுவல்முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர் (1899-1901) ஆவார். இவர் எசுப்பானியாவிற்கு எதிராக பிலிப்பீனியப் படைத்துறையை வழிநடத்தியதுடன் பிந்தைய பிலிப்பீனியப் புரட்சியிலும் (1896-1897) முக்கியப் பங்காற்றினார். 1898 ஆம் ஆண்டு நடந்த எசுப்பானிய அமெரிக்கப் போரை முன்னின்று நடத்தியதுடன் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் (1899-1901) காலகட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எதிராக போராடினார். இப்போரில் 1901 இல் தோல்வியுற்று இவரது ஆட்சி முடிவிற்கு வந்தது.

மாண்புமிகு
புரட்சித் தலைவர்
எமிலியோ ஃபமி அகுயினால்டோ
குவிசோன் சேவை சிலுவை, பிஎல்எச்
முதல் பிலிப்பீனியக் குடியரசுத் தலைவர்
முதலாவது பிலிப்பைன் குடியரசின் அரசுத்தலைவர்
மீயுயர் அரசின் தலைவர்
பியாக்-ன-பாதோவின் தலைவர்
சர்வாதிகாரி
புரட்சிகர அரசின் தலைவர்
பதவியில்
23 சனவரி 1897[a] – 1 ஏப்ரல் 1901[b]
பிரதமர்
  • அபொலினாரியோ மாபினி
  • (21 சன – 7 மே 1899)
  • பெத்ரோ பேடர்னோ
  • (7 மே – 13 நவ 1899)
Vice Presidentமாரியானோ திரியசு (1897)
பின்னவர்பதவி இல்லாதாயிற்று
மானுவல் எல். குவிசோன்
(பொதுநலவாயத்தின் தலைவராக)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1869-03-22)22 மார்ச்சு 1869
கவித்
எசுப்பானியக் கிழக்கிந்தியா (தற்போது கவித், கெவைட், பிலிப்பீன்சு)
இறப்பு6 பெப்ரவரி 1964(1964-02-06) (அகவை 94)
குவிசோன் நகரம், பிலிப்பீன்சு
இளைப்பாறுமிடம்அகுயினால்டோ புனிதவிடம், கவித், கெவைட், பிலிப்பீன்சு
அரசியல் கட்சிகதிபுனன்
தேசிய சோசலிசக் கட்சி
துணைவர்கள்
  • இலாரியா அகுயினால்டோ (1896–1921)
  • மாரியா அகோன்சில்லோ (1930–1963)
பிள்ளைகள்
  • கார்மென் அகுயினால்டோ மெலன்சியோ
  • எமிலியோ அகுயினால்டோ, இளை.
  • மரியா அகுயினால்டோ போப்லெட்
  • கிறிஸ்டினா அகுயினால்டோ சன்டே
  • மிகுவல் அகுயினால்டோ
முன்னாள் கல்லூரிகாலேசியோ டி சான் யுவான் டி லெட்ரான்
தொழில்படைவீரர், மேலாளர், ஆசிரியர், புரட்சியாளர்
கையெழுத்து

1935 ஆம் ஆண்டில் அகுயினால்டோ பிலிப்பீன்சு பொதுநலவாயத்திற்கான தலைவர் தேர்தலில் மானுவல் எல். குவிசோனுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 1941 இல் சப்பானியர்களின் ஆக்கிரமிப்பின்போது புதிய ஆட்சியாளர்களுடன் ஒத்துழைத்தார்; அமெரிக்கப் படைகளையும் பிலிப்பினோ படைகளையும் சரணடைய வானொலியில் கோரிக்கை விடுத்தார். அமெரிக்கர்களின் மீள்வருகைக்குப் பிறகு இவர் தேசத்துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்; பின்னர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

குறிப்புகள்

தொகு
  1. 23 January 1899 was the date of Aguinaldo's inauguration as President of the First Philippine Republic. Previously, he held positions as President of a Revolutionary Government from 22 March 1897 to 1 November 1897, President of the Biak-na-Bato Republic from 2 November 1897 to 15 December 1897, Head of a Dictatorial Government from 24 May 1898 to 22 June 1898, and President of another Revolutionary Government from 23 June 1898 to 22 January 1897.[1]
  2. 1 April 1901 was the date of Aguinaldo's capture by American forces.[2]
  3. In the Philippine "Declaration of Independence" his matronymic is given as Fami.[3](p185 Appendix A)
  4. Most sources, including the National Historical Commission of the Philippines, support a 22 March birthdate.[4][5](p6)[6](p129)[7] Some sources give other dates.[8][9]

மேற்சான்றுகள்

தொகு
  1. "Emilio Aguinaldo". Presidential Museum and Library. Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2015-02-17.
  2. "First Philippine President Emilio F. Aguinaldo 46th Death Anniversary". Manila Bulletin Publishing Corporation. 5 February 2011. http://www.mb.com.ph/articles/302726/first-philippine-president-emilio-f-aguinaldo-47th-death-anniversary#.UP_pMx03uVI. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Guevara, Sulpicio, ed. (1972) [1898]. The laws of the first Philippine Republic (the laws of Malolos) 1898–1899. English translation by Sulpicio Guevara. Manila: National Historical Commission of the Philippines. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9715380557. இணையக் கணினி நூலக மைய எண் 715140.
  4. "EMILIO F. AGUINALDO (1869–1964)" (PDF). nhi.gov.ph. Archived from the original (PDF) on 2011-11-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07. {{cite web}}: External link in |publisher= (help)
  5. DYAL, Donald H; CARPENTER, Brian B; THOMAS, Mark A (1996). [extract Historical Dictionary of the Spanish American War] (Digital library). Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-28852-4. {{cite book}}: Check |url= value (help); Unknown parameter |lastauthoramp= ignored (help)
  6. OOI, Keat Gin, ed. (2004). Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor (3 vols). Santa Barbara: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1576077702. இணையக் கணினி நூலக மைய எண் 646857823.
  7. The year of birth on his death certificate was incorrectly typed as 1809.
    "Philippines, Civil Registration (Local), 1888-1983," index and images, FamilySearch (https://familysearch.org/pal:/MM9.3.1/TH-1971-27184-32236-46?cc=1410394&wc=9Z7H-JWG:25272501,114827101,25271303,25290201 : accessed May 2, 2014), Metropolitan Manila > Quezon City > Death certificates > 1964; citing National Census and Statistics Office, Manila.
  8. "Gen. Emilio Aguinaldo (1869–1964)". aboutph.com. {{cite web}}: External link in |publisher= (help)
  9. TUROT, Henri (1900). Les hommes de révolution Aguinaldo et les Philippins (in French). préface par Jean Jaures; translated by Mitchell Abidor. Paris: Librairie Léopold Cerf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1146599917. இணையக் கணினி நூலக மைய எண் 838009722. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலியோ_அகுயினால்டோ&oldid=4087272" இலிருந்து மீள்விக்கப்பட்டது