எம். கிருட்டிணன் நாயர் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

திவான் பகதூர் சர் மன்னாத் கிருட்டிணன் நாயர் (Sir Mannath Krishnan Nair) (1870-1938) இவர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். நீதிக் கட்சியின் சார்பில், தமிழ்நாடு சட்ட மேலவையின் உறுப்பினராகவும், காலனித்துவ கால சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். திருவிதாங்கூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பின்னர் 1914 முதல் 1920 வரை திருவிதாங்கூர் திவானாகவும் பணியாற்றினார்.

கிருட்டிணன் நாயர்
இந்தியப் பேரரசின் ஒழுங்கு
சென்னை ஆளுநரின் செயற்குழுவின் சட்ட உறுப்பினர்
பதவியில்
1928–1933
பிரதமர்ப. சுப்பராயன்,
முனுசாமி நாயுடு,
பொபிலி அரசர்
ஆளுநர்ஜார்ஜ் கோசென், 2 வது விஸ்கவுன்ட் கோசென்
முன்னையவர்சே. ப. இராமசுவாமி
திருவிதாங்கூரின் திவான்
பதவியில்
1914 மே 11 – 1920 சூலை 7
ஆட்சியாளர்மூலம் திருநாள்
முன்னையவர்பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி
பின்னவர்டி. இராகவய்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1870
இறப்பு1938
மலபார் மாவட்டம்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை

தொகு

கிருட்டிணன் நாயர் சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்களான மன்னாத் குடும்பத்தில் 1870 இல் பிறந்தார் [1]. கிருட்டிணன் நாயர் மலபார் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பையும், கொல்கத்தா அரசு கல்லூரி மற்றும் சென்னை கிருத்துவக் கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றார். கிருட்டிணன் நாயர் ஒரு வழக்கறிஞராக சேருவதற்கு முன்பு சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

இளம் வயதில், இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து அதன் கூட்டங்களில் பங்கேற்றார். [2] இவர் 1904 இல் தமிழ்நாடு சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1904 முதல் 1910 வரை அதன் உறுப்பினராக பணியாற்றினார். [1]

இவரது மகன்கள் இருவரும் ஆட்சிப்பணியில் இருந்தனர். மூத்த மகன் பி. ஏ. மேனன், பல நாடுகளில், இந்தியாவின் தூதராக இருந்தார். இரண்டாவது மகன், பி.எம். மேனனும் இந்திய அரசின் செயலாளராக இருந்தார். இவரது மகள் சென்னை மாகாணத்தில் அரசின் செயலாளராக இருந்த அப்பு நாயர் என்பவரை மணந்தார். இவர்களது மகள் ஆட்சிப்பணி அதிகாரியான பி. கோவிந்தன் நாயரை மணந்தார்.

திருவிதாங்கூரின் திவான்

தொகு

கிருட்டிணன் நாயர் 1914 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரின் திவானாக நியமிக்கப்பட்டார். இவருக்குப் பிறகு பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி பதவிக்கு வந்தார். [3] கிருட்டிணன் நாயர் 1914 முதல் 1920 வரை திருவிதாங்கூரின் திவானாக பணியாற்றினார்.

நீதிக் கட்சி

தொகு

1920 ஆம் ஆண்டில், நாயர் நீதிக் கட்சியில் சேர்ந்து 1920 [4] மற்றும் 1923 தேர்தல்களில் வெற்றி பெற்றார். பிந்தையது 1922 மோப்லா கலவரத்தைத் தொடர்ந்து மலபார் மாவட்டத்தில் வகுப்புவாத சூழ்நிலையை மையப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.  

அப்போதைய சென்னை ஆளுநராக இருந்த கோசென் பிரபு சைமன் கமிஷனுக்கு எதிராக நீதிக் கட்சி சுயாட்சிக் கட்சியுடன் கைகோர்த்தபோது, நீதிக் கட்சியைக் கவரும் பொருட்டு, அப்போது நீதிக்கட்சி உறுப்பினராக இருந்த கிருட்டிணன் நாயரை தனது சட்ட உறுப்பினராக நியமித்தார். [5] [6] சட்ட உறுப்பினராக, முத்துலட்சுமி ரெட்டி நிறைவேற்றிய தேவதாசி மசோதாவுக்கு கிருட்டிணன் நாயர் ஆதரவு தெரிவித்தார். [7]

இறப்பு

தொகு

கிருட்டிணன் நாயர் 1938 இல் இறந்தார். [8]

மரியாதை

தொகு

1930 சனவரியில், கிருட்டிணன் நாயர் இந்தியப் பேரரசின் ஒழுங்கு கௌரவாமான நைட் கமாண்டராக நியமிக்கப்பட்டார் .

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 The International who's who, Volume 2004. Europa Publications Ltd. 1938. p. 838.
  2. M. Gangadhara Menon (1989). Malabar Rebellion, 1921-1922. Vohra Publishers & Distributors. p. 84.
  3. "Indian Princely States K - W". worldstatesmen.
  4. Malabar Rebellion, 1921-1922. Vohra Publishers & Distributors. 1989. p. 84.
  5. Encyclopaedia of Political Parties. Anmol Publications PVT. LTD. 2002. p. 192.
  6. The press in Tamil Nadu and the struggle for freedom, 1917-1937. Mittal Publications. 1988. p. 116.
  7. Charisma and commitment in South Asian history. Orient Blackswan. p. 350.
  8. Delhi School of Economics (1977). The Indian economic and social history review, Volume 14. Vikas Publishing House. p. 261.