எலிஸ்

கிரேக்கத்தின் மேற்கு கிரேக்க பிராந்தியத்தின் மூன்று பிராந்திய அலகுகளில் ஒன்று

எலிஸ் அல்லது இலியா (Elis அல்லது Ilia, கிரேக்கம்: Ηλεία‎, இலியா ) என்பது கிரேக்கத்தின் பெலொப்பொனேசியா தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதி. இது மேற்கு கிரேக்கத்தின் நவீன பிராந்தியத்தின் பிராந்திய அலகாக நிர்வகிக்கப்படுகிறது. இதன் தலைநகரம் பைர்கோஸ் . 2011 வரை இது இதே பிரதேசத்தை உள்ளடக்கிய எலிஸ் மாகாணமாக இருந்தது.

எலிஸ்
Περιφερειακή ενότητα
Ηλείας
பிராந்திய அலகு
எலிஸ் நகராட்சிகள்
எலிஸ் நகராட்சிகள்
கிரேக்கத்தில் எலிசின் அமைவிடம்
கிரேக்கத்தில் எலிசின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°40′N 21°30′E / 37.667°N 21.500°E / 37.667; 21.500
Countryகிரேக்கம்
பிராந்தியம்மேற்கு கிரேக்கம்
தலைநகரம்பைரகோஸ்
பரப்பளவு
 • மொத்தம்2,618 km2 (1,011 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,59,300
 • அடர்த்தி61/km2 (160/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (EET)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
27x xx
தொலைபேசி குறியீடு262x0
ஐஎசுஓ 3166 குறியீடுGR-14
வாகனப் பதிவுΗΑ
இணையதளம்www.pde.gov.gr/gr/

நவீன பிராந்திய அலகு பாரம்பரிய காலத்தின் பண்டைய எலிசுடன் கிட்டத்தட்ட ஒத்துள்ளது. கிமு 776 இல் தொடங்கிய பண்டைய ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெயர் பெற்ற எலிஸ், எபிடலியன் மற்றும் ஒலிம்பியா நகரங்களின் பழங்கால இடிபாடுகள் இங்கே உள்ளன.

நிலவியல்

தொகு

எலிசின் வடக்குப் புள்ளி 38° 06'N, மேற்கே 22° 12′E, தெற்கே 37°,18′N, கிழக்கே 21°  54′E. ஆகும். இந்த பிராந்தியம் வடக்கிலிருந்து தெற்கு வரை 100 km (62 mi) நீளமாகவும், கிழக்கிலிருந்து மேற்குவரை சுமார் 55 km (34 mi) நீகம் கொண்டுள்ளது.

நவீன பிராந்திய அலகு பண்டைய எலிசுடன் முழுமையாக ஒத்துப்போகவில்லை: லம்பியா பண்டைய ஆர்காடியாவைச் சேர்ந்தது, மேலும் கலோக்ரியா இப்போது அக்கீயாவின் ஒரு பகுதியாக உள்ளது.

பிராந்தியத்தின் மிக நீளமான ஆறு அல்ஃபியோஸ் ஆகும் . மற்ற ஆறுகள் எரிமந்தோஸ், பினியோஸ், நெடா ஆகும். அல்ஃபியோஸ், பினியோஸ், நெடா ஆகிய ஆறுகள் எலிசில் உள்ள அயோனியன் கடலில் பாய்கின்றன. மாகாணத்தில் 1% க்கும் குறைவான நீர் திறந்த வெளியில் உள்ளது. பெரும்பாலானவை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள செயற்கை நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளில் காணப்படுகின்றன. பினியோஸ் அணை வடக்கு எலிசுக்கு தண்ணீர் வழங்குகிறது. தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல, ஏனெனில் அதில் சில அசுத்தங்கள் உள்ளன. ஒலிம்பியா மற்றும் கிரெஸ்டெனாவிற்கு அருகிலுள்ள அல்ஃபியோஸ் ஆற்றில் உள்ள இரண்டாவது, சிறிய நீர்த்தேக்கம் பைர்கோசுக்கு தண்ணீரை வழங்குகிறது.

பிராந்திய அலகின் கிழக்குப் பகுதி வனப்பகுதியாகும், தெற்கில் பெரும்பாலும் பைன் மரங்கள் உள்ளன. ஃபோலோய் மற்றும் கிழக்கு எலிசின் மலைத்தொடர்களில் பாதுகாக்கபட்ட வனப் பகுதிகள் உள்ளன. வடக்கில் பைன் மரங்களைக் கொண்ட ஸ்ட்ரோஃபிலியா காடு உள்ளது. மலைத் தொடர்களில் மோவ்ரி (சுமார் 720 மீ அல்லது 2,400 அடி), திவ்ரி (சுமார் 1500 மீ), மின்தே (சுமார் 1100 மீ) ஆகிய மைகள் உள்ளன.

பிராந்தியத்தின் நிலப்பகுதியில் மூன்றில் ஒரு பங்கு வளமானவை. மீதமுள்ளவை குன்றுகள் மற்றும் பயிர்களுக்கு ஏற்றவை அல்ல. பிராந்தியத்தில் சதுப்பு நிலப் பரப்பு 1-1.5% ஆகும். சதுப்பு நிலப்பகுதிகள் குறிப்பாக சமிகோ பகுதியில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை விவசாய நோக்கங்களுக்காக மாற்றப்பட்டுள்ளன. 10 கிமீ² (4 சதுர மைல்) நிலப்பகுதி மட்டுமே சதுப்பு நிலமாக பாதுகாக்கப்படுகிறது.

கிமு 776 இல் தொடங்கிய பண்டைய ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெயர் பெற்ற எலிஸ், எபிடலியன் மற்றும் ஒலிம்பியாவின் பழங்கால இடிபாடுகள் இங்கே உள்ளன. ஒலிம்பியாவின் வரலாறு தொடர்பான சிலைகள் கொண்ட ஒரு அருங்காட்சியகம் உள்ளது. மற்றொரு அருங்காட்சியகம் எலிசில் உள்ளது, ஆனால் அது மிகவும் சிறியது.

காலநிலை

தொகு

எலிஸ் நடுநிலக்கடல் சார் வானிலையைக் கொண்டுள்ளது, வெப்பம் மிகுந்த கோடைக்காலம் உள்ளது. 40 °C மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மலைப்பகுதியில் குளிர்ச்சியாக இருக்கும், மேலும் குளிர்காலத்தில் மலையை பனி மூடுகிறது. கிழக்கு பெலோபொன்னீஸை விட எலிஸ் அதிக ஈரப்பதம் கொண்டது.

இயற்கை பேரழிவுகள்

தொகு

எலிஸ் பிராந்தியம் நில நடுக்கவியல் மண்டலத்தில் அமைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இப்பகுதியைத் தாக்கிய சில குறிப்பிடத்தக்க பூகம்பங்கள்:

  • 1909: சாவரியில் நிலநடுக்கம்
  • 1910: வர்தோலோமியோவில் நிலநடுக்கம்
  • 1920: கைலினியில் நிலநடுக்கம்
  • 1953: அயோனியன் பூகம்பம், எலிசில் சிறிய அளவில் சேதம்
  • 2008: ஜூன் 8 பெலோபொன்னீஸ் நிலநடுக்கம், 2 இறப்புகள்;[1] லெச்சைனா, அமலியாடா, வர்தோலோமியோ ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்ததாக பதிவாகியுள்ளது.

2002-2003 காலக்கட்டிதல் ஏற்பட்ட பெருமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் கிராமங்கள் அழிக்கப்பட்டன. அதனால் சில பாலங்களும், சாலைகளும் துண்டிக்கப்பட்டன. 2008 பிப்ரவரியில் ஏற்பட்ட, பனிப்பொழிவினால் மனோலாடா, நியா மனோலாடா , கூனூபேலியில் வேளாண் பயிர்களை அழித்தன.

2007 ஆகத்தில், ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான இறப்புகளும், பாரிய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பேரழிவும் ஏற்பட்டது. மாகாணத்தின் இறுதி எண்ணிக்கையின்படி: 45 பேர் இறந்தனர், 100,000 பேர் பாதிக்கப்பட்டனர்[தெளிவுபடுத்துக] தீயினால் 3,500 பேர் வீடுகளை இழந்தனர், 25,000 விலங்குகள் இறந்தன, 8,500 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் எரிந்தன, 2,300 ஹெக்டேர் விளைநிலங்கள் எரிந்தன.[2] ஒலிம்பியாவின் தொல்லியல் தளம் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளானது ஆனால் சேதமடையவில்லை.

நிர்வாகம்

தொகு

இந்த பிராந்திய அலகானது 7 நகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை (தகவல் பெட்டியில் உள்ள வரைபடத்தில் உள்ள எண்):[3]

  • பண்டைய ஒலிம்பியா (4)
  • ஆந்த்ராவிட-கில்லினி (6)
  • ஆண்ட்ரிட்சைனா-கிரெஸ்டெனா (3)
  • இலிடா (2)
  • பினியோஸ் (7)
  • பைர்கோஸ் (1)
  • சகாரோ (5)

2011 சீர்திருத்தம்

தொகு

2011 கல்லிக்ராடிஸ் அரசாங்க சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, எலிஸ் என்ற பிராந்திய அலகு முன்னாள் மாகாணமான எலிஸிலிருந்து உருவாக்கப்பட்டது ( கிரேக்கம்: Νομός Ηλείας‎ Νομός ) தற்போதைய பிராந்திய அலகின் இதே பிரதேசத்தை இந்த மாகாணம் கொண்டிருந்தது. அதே நேரத்தில், கீழே உள்ள அட்டவணையின்படி, நகராட்சிகள் மறுசீரமைக்கப்பட்டன.[3]

புதிய நகராட்சி பழைய நகராட்சிகள் தலைமையகம்
பண்டைய ஒலிம்பியா
( ஆர்க்கியா ஒலிம்பியா )
ஆர்க்கியா ஒலிம்பியா ஆர்க்கியா ஒலிம்பியா
லம்பியா
லசியோனா
ஃபோலோய்
ஆந்திரவிட-கில்லினி ஆந்திரவிட லெச்சைனா
வூப்ராசியா
காஸ்ட்ரோ-கில்லினி
லெச்சைனா
ஆண்ட்ரிட்சைனா-கிரெஸ்டெனா ஆண்ட்ரிட்சைனா கிரெஸ்டெனா
அலிஃபெரா
ஸ்கில்லோண்டா
இலிடா அமலியாடா அமலியாடா
பினியா
பினியோஸ் காஸ்டோனி காஸ்டோனி
கவசிலா
வர்தோலோமியோ
திராகானோ
பைரகோஸ் பைரகோஸ் பைரகோஸ்
வோல்காஸ்
இர்டனோஸ்
ஓலேனி
ஜகாரோ ஜகாரோ ஜகாரோ
ஃபிகேலியா

மாகாணங்கள்

தொகு

2006 க்கு முன், எலிஸ் எலிஸ் மாகாணம் மற்றும் ஒலிம்பியா மாகாணம் என இரண்டு மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. எலிஸ் மாகாணத்தில் ஹாலோ அல்லது லோலேண்ட் எலிஸ் மற்றும் பிசாட்டிஸின் வடக்குப் பகுதி இருந்தன. இது இரண்டு மாகாணங்களில் பரப்பளவில் மிகச்சிறியது, ஆனால் அதிக மக்கள்தொகை கொண்டது. மாகாண தலைமையகம் பைர்கோஸ் ஆகும். ஒலிம்பியா மாகாணத்தின் பெரும்பகுதியாக பிசாடிஸ் மற்றும் டிரிஃபிலியா ஆகியவை இருந்தன. அதன் தலைநகரம் மலைகளில் உள்ள ஆண்ட்ரிட்சைனா ஆகும். கிரெஸ்டெனா மற்றும் சகாரோ ஆகியவை மாகாணத்தின் மிகப்பெரிய நகரங்களாகும்.

மக்கள் தொகை

தொகு

எலிஸ் பெலோபொன்னீசின் அக்கேயா மற்றும் மெசினியாவுக்கு அடுத்து மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்திய அலகாகும். 70% முதல் 75% வரையிலான மக்கள் மலைகளை அடுத்த வளமான நிலங்களில் வாழ்கின்றனர்.

ஆண்டு மக்கள் தொகை
1940 186,945 [4]
1961 188,861 [5]
1981 217,371 [6]
2001 193,288 [7]
2011 159,300 [8]

பண்டைய எலிசின் மக்கள்தொகை (கிமு 1000-1 முதல்) 5,000 முதல் 10,000 வரை இருந்தது. அது கிமு 1 இல் 10,000 அல்லது 20,000 ஐ எட்டியது.[சான்று தேவை] மக்கள் தொகை 1981 இல் 217,000 ஐ எட்டியது, ஆனால் அதன் பின்னர் குறைந்து வருகிறது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 10,000 க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மிகப்பெரிய நகரமாக பைர்கோஸ் ஆனது, மேலும் 1980 களின் பிற்பகுதியில் 20,000 க்கும் அதிகமாக இருந்தது. தென்கிழக்கு மற்றும் கிழக்கில் மக்கள் தொகை குறைந்து வரும் அதே வேளையில் வடமேற்கில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

குறிப்புகள்

தொகு
  1. "Two killed by large Greek quake". பிபிசி. 2008-06-08. பார்க்கப்பட்ட நாள் 2008-06-08.
  2. newspaper "TA NEA"; September 3, 2007
  3. 3.0 3.1 "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text". Government Gazette.
  4. "Detailed census results 1940" (PDF). (47 MB)
  5. "Detailed census results 1961" (PDF). (35 MB)
  6. "Detailed census results 1981" (PDF). (13 MB) (in கிரேக்கம்)
  7. "Detailed census results 2001" (PDF). (39 MB) (in கிரேக்கம் and ஆங்கில மொழி)
  8. Detailed census results 2011 பரணிடப்பட்டது திசம்பர் 25, 2013 at the வந்தவழி இயந்திரம் (in கிரேக்கம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிஸ்&oldid=3774957" இலிருந்து மீள்விக்கப்பட்டது