எலெனா மிலாசினா

உருசிய ஊடகவியலாளர்

எலனா வாலெரிவானா மிலாசினா ( Elena Valeryevna Milashina ) (பிறப்பு; 1977) [1][2] நோவயா கெசெட்டா என்ற உருசிய புலனாய்வு பத்திரிகையில் பணிபுரியும் நிருபவராவார். இவர் தனது பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் உரிமைகள் குறித்த இவரது பணிக்காக அமெரிக்க வெளியுறவுச் செயலாளரின் சர்வதேச வீரதீர பெண்கள் விருது பெற்றுள்ளார்.

எலெனா மிலாசினா
Елена Милашина Edit on Wikidata
பிறப்பு1977 Edit on Wikidata
பணிபத்திரிக்கையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர், எழுத்தாளர், investigative journalist edit on wikidata
விருதுகள்International Women of Courage Award, Golden Pen of Russia, Free Media Awards, Redkollegia, honorary doctorate of the Vrije Universiteit Brussel, Journalism as a Profession Edit on Wikidata

மிலாசினா ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனது பணிக்காக பலமுறை அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டில், செச்சினியாவில் ஒரு விசாரணையை புலனறியும்போது இவர் கடுமையாக தாக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

எலெனா மிலாசினா 1977 இல் பிறந்தார். 1994-95 இல், உதவித்தொகை மாணவர் பரிமாற்ற திட்டத்தில் பங்கேற்றார். இது மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் நுழைய இவருக்கு உதவியது. [3]

தொழில் தொகு

1997 ஆம் ஆண்டில், மிலாசினா படிக்கும் போதே நோவயா கெசெட்டாவின் நிருபராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். உருசிய நாட்டைச் சேர்ந்த[4] பெண் பத்திரிகை ஊடகவியலாளர், எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் அன்னா பலிட்கோவ்ஸ்கயா இவரது வழிகாட்டிகளில் ஒருவர். 2001 இல் இவர் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தின் இதழியல் பீடத்தில் பட்டம் பெற்றார்.

மிலாசினாவின் தொழில்முறை ஆர்வமுள்ள பகுதிகளில் ஊழல், வடக்கு காகசஸ் மற்றும் செச்சினியாவில் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக, 2004 பெஸ்லான் பள்ளி முற்றுகை விசாரணை, அன்னா பொலிட்கோவ்ஸ்காயாவின் 2006 படுகொலை, தெற்கு ஒசேஷியாவில் 2008 மோதல், 2009இல் நடால்யா எஸ்டெமிரோவாவின் கடத்தல் மற்றும் கொலை ஆகியவை அடங்கும்.[5] செச்சினியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான துப்புறப்படுத்தல் குறித்தும் இவர் புகார் அளித்துள்ளார். [6]

2006 இல் மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்ட இவரது சக ஊழியர் அன்னா பொலிட்கோவ்ஸ்கயாவின் கொலை வழக்கு விசாரணைகள் மற்றும் வடக்கு காகசஸில் நடந்த நிகழ்வுகள் பற்றிய இவரது சொந்த விசாரணைகளைத் தொடர்ந்தார். [7]

தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொகு

ஏப்ரல் 5, 2012 அதிகாலையில், மிலாசினாவும் மற்றும் அவரது நண்பர் எல்லா அசோயனும், மாஸ்கோவின் பாலாசிகா சுற்றுப்புறத்தில் இரண்டு அறியப்படாத ஆசாமிகளால் தாக்கப்பட்டனர். [8]

பிப்ரவரி 6, 2020 அன்று செச்சினியாவில் உள்ள குரோசுனிக்கு ஒரு விசாரணையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, மிலாசினா மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் மெரினா துப்ரோவினா ஆகியோர் கான்டினென்டல் விடுதியின் வரவேற்பறையில் அடையாளம் தெரியாத பெண்களால் தாக்கப்பட்டனர். [9]

நோவயா கெசெட்டா பிப்ரவரி 8, 2022 அன்று மிலாசினா தனக்கு எதிரான அச்சுறுத்தல்களால் உருசியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அறிவித்தது. [10] [11]

ஜூலை 2023 இல், மிலாசினா மற்றும் சரேமா முசயேவாவின் வழக்கறிஞர் அலெக்சாண்டர் நெமோவ் ஆகியோர், செச்சினியாவில் ஆயுதமேந்திய குழுவால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.[12] தாக்குதல்காரர்கள் மிலாசினாவின் தலையை மொட்டையடித்து பச்சை நிற சாயத்தை பூசினர். இது ஜெலியோங்கா தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. அதே நேரத்தில் இவரை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும், இதைப் பற்றி எந்த கட்டுரையும் எழுத வேண்டாம் என்றும் மெமோரியல் மனித உரிமைகள் அமைப்பு கேட்டுக்கொண்டது. [6] மிலாசினா மற்றும் நெமோவ் ஆகியோர் விமானத்தில் மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மிலாசினா மூளைக் காயம், கைகளில் ஏராளமான எலும்பு முறிவுகள் மற்றும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். [13] [14] [15]

மேற்கோள்கள் தொகு

  1. "First Section Case of Novaya Gazeta and Milashina v. Russia". hudoc.echr.coe.int (in ஆங்கிலம்). 2013-07-08. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  2. "Third Section Case of Novaya Gazeta and Milashina v. Russia". hudoc.echr.coe.int (in ஆங்கிலம்). 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  3. "Школьникам России закрыли Америку". Voice of America (in ரஷியன்). 2014-10-01. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
  4. அன்னா பலிட்கோவ்ஸ்கயா பரணிடப்பட்டது 2019-10-08 at the வந்தவழி இயந்திரம் பிரித்தானிய கலைக் களஞ்சியம்
  5. "Human Rights Watch Honors Top Rights Defender". Human Rights Watch web site. October 7, 2009.
  6. 6.0 6.1 "Russian Journalist, Lawyer Beaten and Hospitalized in Chechnya". 4 July 2023.
  7. "A Call to Ensure Safety of Elena Milashina and Have a Proper Investigation into the Threats against Her – EU-Russia Civil Society Forum" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-02-25. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
  8. "Investigative Journalist Brutally Beaten in Russia". Committee to Protect Journalists web site. April 5, 2012.
  9. "Reporter who exposed Chechen gay purge attacked" (in en-GB). https://www.bbc.com/news/world-europe-51413120. 
  10. "Novaya Gazeta investigative journalist forced to leave Russia". International Press Institute web site. February 14, 2022.
  11. "Russia, Explained Kadyrov vs. Novaya". Novaya Gazeta. February 8, 2022.
  12. "Russian Journalist, Lawyer Beaten and Hospitalized in Chechnya". 4 July 2023."Russian Journalist, Lawyer Beaten and Hospitalized in Chechnya". 4 July 2023.
  13. "Assaulted Russian Reporter Back in Moscow, Condition 'Difficult'". The Moscow Times. 5 July 2023.
  14. "Russian Journalist Vows to Continue Visiting Chechnya After Brutal Attack". The Moscow Times (in ஆங்கிலம்). 2023-07-07. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
  15. "Russia: UN experts dismayed at violent attack against journalist Yelena Milashina and lawyer Alexander Nemov in Grozny". Office of the United Nations High Commissioner for Human Rights (in ஆங்கிலம்). 2023-07-07. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Elena Milashina
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலெனா_மிலாசினா&oldid=3910047" இலிருந்து மீள்விக்கப்பட்டது