மெமோரியல் (சமூகம்)

உருசிய வரலாற்று மற்றும் மனித உரிமைகள் சங்கம்

மெமோரியல் (Memorial) என்பது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது, ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற குற்றங்களை ஆய்வு செய்வதற்கு உருசியாவில் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பாகும்.[1][2] பின்னர், சோவியத் காலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் அதன் ஆராய்ச்சியின் நோக்கத்தை விரிவுபடுத்தியது.

மெமோரியல்
Мемориал
உருவாக்கம்சனவரி 28, 1989 (1989-01-28)
வகைஇலாப நோக்கற்ற அமைப்பு
அரசு சார்பற்ற அமைப்பு
நோக்கம்மனித உரிமைக் குழுமம்
தலைமையகம்மாஸ்கோ, உருசியா
சேவைகள்மனித உரிமை மீறல்கள் மற்றும் பிற குற்றங்களை ஆய்வு செய்தல்
இணைத் தலைவர்
யான் ராசின்சிகி
அமைப்பின் தலைவர்
அலெக்சாண்டர் செர்காசோவ்
முக்கிய நபர்கள்
பட்டியல்
விருது(கள்)
பட்டியல்
வலைத்தளம்Memorial International (in English)
Memorial Human Rights Centre (in English)

பின்னணி

தொகு

2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உருசியாவில் அது கலைக்கப்படுவதற்கு முன்பு, ஸ்டாலினின் சகாப்தத்தில், நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்ட மெமோரியல் இன்டர்நேஷனல் என்ற அமைப்பும், மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்யும் மெமோரியல் மனித உரிமைகள் மையம் என இரண்டு தனித்தனி சட்ட நிறுவனங்களைக் கொண்டிருந்தது. இது குறிப்பாக, நவீன உருசியாவிலும் அதைச் சுற்றியுள்ள மோதல் மண்டலங்களிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.[3] டிசம்பர் 2021 நிலவரப்படி, ஒரு ஒற்றையாட்சி அமைப்பைக் காட்டிலும் ஒரு இயக்கம், உருசியாவில் 50க்கும் மேற்பட்ட அமைப்புகளையும், கஜகஸ்தான், உக்ரைன், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் பிரான்சு உள்ளிட்ட பிற நாடுகளில் 11 அமைப்புகளையும் கொண்டிருந்தது.[4] இணைக்கப்பட்ட குழுக்களின் கவனம் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபட்டதாக இருந்தாலும், மனித உரிமைகள், கடந்த காலத்தை ஆவணப்படுத்துதல், இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் அரசியல் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நாட்களைக் குறிக்கும் ஒரே மாதிரியான கவலைகளை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.[5]

பணிகள்

தொகு

1980 களின் பிற்பகுதியில் பெரெஸ்ட்ரோயிகா ஆண்டுகளில், 20 ஆம் நூற்றாண்டில் சோவியத் ஒன்றியத்தில் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை ஆவணப்படுத்தவும், 1930கள் முதல் 1950களின் முற்பகுதி வரை ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் போது அதன் உச்சத்தை எட்டிய விளாடிமிர் லெனினின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சோவியத்தின் கட்டாய தொழிலாளர் முகாம்களுக்குப் பொறுப்பான அரசு நிறுவனமான குலாக் மற்றும் அவர்களது குடும்பங்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவவும் இந்த மெமோரியல் சமூகம் தோன்றியது.[6] 1987 மற்றும் 1990 க்கு இடையில், சோவியத் ஒன்றியம் உடையாமல் இருந்தபோது, சமூகத்தின் 23 கிளைகள் நிறுவப்பட்டன. [7] சோவியத் ஒன்றியம் சரிந்தபோது, உக்ரைனில் உள்ள மெமோரியலின் கிளைகள் உருசிய வலையமைப்புகளுடன் இணைந்திருந்தன. வடமேற்கு மற்றும் மத்திய உருசியாவில் உள்ள மெமோரியலின் பழமையான கிளைகளில் சில, யூரல்ஸ் மற்றும் சைபீரியா பின்னர் சுயாதீன உள்ளூர் ஆராய்ச்சியை ஆவணப்படுத்தும் வலைத்தளங்களை உருவாக்கி, தங்கள் பிராந்தியத்தில் சோவியத் ஆட்சியின் குற்றங்களை வெளியிட்டன.

அதிகாரத்தின் தலையீடு

தொகு

ஜூலை 2012 இல் உருசிய வெளிநாட்டு முகவர் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மெமோரியல் அரசாங்கத்தால் அதிக அழுத்தத்திற்கு ஆளானது. 21 ஜூலை 2014 அன்று, மெமோரியல் மனித உரிமைகள் மையம் நீதி அமைச்சகத்தால் "வெளிநாட்டு முகவராக" அறிவிக்கப்பட்டது. இது நவம்பர் 2015 இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெமோரியலில் உள்ள ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்திற்கும், 4 அக்டோபர் 2016 அன்று சர்வதேச மெமோரியல் சமூகத்திற்கும் நீட்டிக்கப்பட்டது. [8] 28 டிசம்பர் 2021 அன்று, வெளிநாட்டு முகவர் சட்டத்தை மீறியதற்காக சர்வதேச மெமோரியல் சமூகத்தை மூடுவதற்கு உருசியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. [9] [10] சமூகத்தின் வழக்கறிஞர் ஒருவர் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறினார். [11]

மெமோரியல் மனித உரிமைகள் மையம் 29 டிசம்பர் 2021 அன்று மாஸ்கோ நகர நீதிமன்றத்தால் மூட உத்தரவிட்டது. இது வெளிநாட்டு முகவர் சட்டத்தை மீறுவதாகவும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும் அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். அதே நாளில், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம், வழக்கின் முடிவு நிலுவையில் உள்ள மெமோரியலை வலுக்கட்டாயமாக கலைப்பதை நிறுத்துமாறு உருசியாவிற்கு அறிவுறுத்தும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. [12]

29 டிசம்பர் 2021 அன்று, உருசியாவில் ஒரு சட்டப்பூர்வ நிறுவனமான எச்ஆர்சி மெமோரியல் மூடப்பட்டது. மேலும், "வெளிநாட்டு முகவர்" சட்டத்தை மீறியதாக மாஸ்கோ நகர நீதிமன்றத்தால் கலைக்கப்பட்டது. [13] ஏப்ரல் 5, 2022 அன்று, உருசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கலைப்பை உறுதி செய்தது. [14] [15] மெமோரியலின் சில மனித உரிமை நடவடிக்கைகள் உருசியாவில் தொடர்ந்தன. [16] மெமோரியல் மற்ற நாடுகளில் இயங்கி வருகிறது. குறிப்பாக ஜெர்மனியில் அதன் பழமையான மற்றும் மிகப்பெரிய உருசியா அல்லாத அத்தியாயம் உள்ளது.

விருது

தொகு

உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான குடிமை உரிமைகளுக்கான மையம் மற்றும் பெலருசின் ஆர்வலர் அலெசு பிலியாத்சுக்கி ஆகியோருடன் இணைந்து, "போர்க்குற்றங்கள், அதிகார துஷ்பிரயோகம், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆவணங்கள்" ஆகியவற்றில் அவர்களின் முயற்சிகளுக்காக அக்டோபர் 2022 இல், மெமோரியல் அந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது [17]

மேற்கோள்கள்

தொகு
  1. Chernova, Anna; Berlinger, Joshua (28 December 2021). "Russian court shuts down human rights group Memorial International". CNN. https://www.cnn.com/2021/12/28/europe/memorial-international-russia-intl/index.html. 
  2. Osborn, Andrew; Antonov, Mikhail (29 December 2021). "Russia shuts Memorial Human Rights Centre in 'one-two punch'". Reuters. https://www.reuters.com/world/europe/moscow-court-shuts-down-russias-memorial-human-rights-centre-2021-12-29/. 
  3. Chernova, Anna; Guy, Jack. "Russian court shuts down Memorial Human Rights Center, day after sister group ordered closed". CNN. https://edition.cnn.com/2021/12/29/europe/memorial-human-right-moscow-court-intl/index.html. 
  4. "Memorial – Structure and organisations". memo.ru. பார்க்கப்பட்ட நாள் 29 December 2021.
  5. International Memorial website, www.memo.ru, accessed 28 December 2021
  6. "MEMORIAL Charter". Archived from the original on 6 September 2006. பார்க்கப்பட்ட நாள் 11 January 2018.
  7. "Structure and organisation" (2018) Memorial website, www.memo.ru
  8. "The Register of foreign agent NGOs" பரணிடப்பட்டது 2016-01-12 at the வந்தவழி இயந்திரம் unro.minjust.ru, Russian Federation Ministry of Justice (in Russian), accessed 28 December 2021
  9. Nechepurenko, Ivan (28 December 2021). "Russian Court Orders Prominent Human Rights Group to Shut". The New York Times. https://www.nytimes.com/2021/12/28/world/europe/russia-memorial-human-rights.html. 
  10. "Russian court shuts down human rights group Memorial International". CNN. https://edition.cnn.com/2021/12/28/europe/memorial-international-russia-intl/index.html. 
  11. Roth, Andrews (28 December 2021). "Russian court orders closure of country's oldest human rights group". தி கார்டியன். https://www.theguardian.com/world/2021/dec/28/russian-court-memorial-human-rights-group-closure. 
  12. Friedman, Ingrid Burke (30 December 2021). "As Russia shutters respected NGOs, European Court of Human Rights intervenes". Jurist. https://www.jurist.org/news/2021/12/as-russia-shutters-respected-ngos-european-court-of-human-rights-intervenes/. 
  13. "Russia: Dissolution of Human Rights Center "Memorial" confirmed in…" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
  14. "The Organization Has Been Liquidated by a Court Decision". பார்க்கப்பட்ட நாள் 5 April 2022.
  15. "Historic Russian Human Rights Center Closes, Warns of "Return to the Totalitarian Past"". https://edition.cnn.com/europe/live-news/ukraine-russia-putin-news-04-05-22/h_898a98f6feb1ec357775a6d70b434940. 
  16. "«Мемориал» после ликвидации объявил о старте нового проекта" (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
  17. "Live Updates: Nobel Peace Prize Is Awarded to Rights Advocates in Ukraine, Russia and Belarus" (in en-US). https://www.nytimes.com/live/2022/10/07/world/nobel-peace-prize. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெமோரியல்_(சமூகம்)&oldid=4108665" இலிருந்து மீள்விக்கப்பட்டது