ஏசே சோசங்
ஏசே சோசாங் (Yeshe Choesang) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திபெத்தியப் பத்திரிகையாளரும், புகைப்படக் கலைஞரும், எழுத்தாளருமாவார். இவர் அரசியல், பத்திரிகை சுதந்திரம், வணிகம், மனித உரிமைகள் மற்றும் திபெத் மற்றும் சீனாவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்.
சுயசரிதை
தொகுகிழக்கு திபெத்தின் லித்தாங் பிராந்தியத்தில் 1974 இல் பிறந்த ஏசே சோசாங் , திபெத்திய பத்திரிகையாளரகவும், இந்தியாவின் தரம்சாலாவை தளமாகக் கொண்ட திபெத் போஸ்ட் என்ற செய்தி நிறுவனத்தின் நிறுவனராகவும், அதன் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார்.[1] .
இவர் 1974 ஆகத்து 18 அன்று கிழக்கு திபெத்தில் உள்ள லித்தாங் பிராந்தியத்தில் பிறந்தார். (தற்போது நிர்வாக ரீதியாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஒரு பகுதி). இவர் 1985 இல் இந்தியாவுக்கு தப்பித்து வந்தார்.
கல்வி
தொகு1993 ஆம் ஆண்டில் திபெத்தியப் பண்பாடு மற்றும் மதம் (தி ரிக்னே ரப்ஜாம்) மற்றும் 1995 இல் திபெத்திய கல்வித் துறையின் ஆசிரியர் பயிற்சி வகுப்பை முடித்தார். பௌத்த இயங்கியல் நிறுவனத்தில் (ஐபிடி) திபெத்திய பௌத்த தத்துவத்தில் இளங்கலை முடித்தார்.[2]
2000 ஆம் ஆண்டில், திபெத்திய மற்றும் ஆங்கிலத்தில் திபெத்திய ஆசிரியர்களுக்கான இருமொழி ஆசிரியர் பயிற்சி புத்தகத் தொடரான ஹவ் டு டீச் என்ற ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருந்தார். 4 ஆண்டுகள், பௌத்த இயங்கியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு மையத்தில் (லக்சம் செக்பா) உலக வரலாற்றில் ஆராய்ச்சியாளராக பணியாற்றினார்.[3]
ஊடக வாழ்க்கை
தொகுகடந்த 10 ஆண்டுகளில் சோசங் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவை திபெத் போஸ்ட்,[4] சி.என்.என் ஐ ரிப்போர்ட்,[5] டெலிபரேஷன்,[6] மற்றும் வோர்ல்டு நியூஸ் நெட்வொர்க் ஆகியவற்றால் வெளியிடப்பட்டன .[7]
இவர் "ஒரு நாடுகடத்தப்பட்ட திபெத்தியரின் குரல்: சுதந்திரம் மற்றும் போராட்டத்தின் நம்பிக்கைகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.[8] இவர் இரண்டாவதாக ஒரு புத்தகத்தை எழுதி வருகிறார். ஆனால் தலைப்பு இன்னும் பெயரிடப்படவில்லை.
தர்மசாலாவை தளமாகக் கொண்ட திபெத்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக [9] மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2005 முதல் எல்லைகள் இல்லாத நிருபர்களுக்கான திபெத் நிருபர் ஆவார்.[10]
தர்மசாலாவின் மெக்லியாட் கஞ்சை மையமாகக் கொண்ட தினசரி திபெத்திய செய்தி நிறுவனமான தி திபெத் போஸ்ட் இன்டர்நேஷனல் (டிபிஐ) என்பதை 2007 ஆம் ஆண்டில் சோசாங் நிறுவினார். இது தவிர, அவுட்லுக்திபெத்.காம், சம்பலாபோஸ்ட்.காம் மற்றும் ஐகாசாபோஸ்ட்.காம் போன்ற பல வலைத்தளங்களையும் இவர் நிறுவியுள்ளார். இவரது செய்தி நிறுவனத்தின் (டிபிஐ) அலுவலகம் 11 மே 2008 அன்று தெற்கு டைரோலிய மக்கள் கட்சியின் உறுப்பினரும் இத்தாலியில் தெற்கு டைரோலின் பிராந்திய நாடாளுமன்றத்தின் தலைவருமான பிரான்ஸ் பால் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.[11]
2010 இல், இவர் இந்தியாவில் இமயமலை எழுத்தறிவு அறக்கட்டளையையும் நிறுவினார்.[2]
இவர் திபெத்திய ஊடகங்களையும் கல்வியையும் அமைதியான மற்றும் அகிம்சை முறையில் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். திபெத்திய பத்திரிகையின் எதிர்கால வளர்ச்சியை செயல்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் இவரது அமைப்புகள் செயல்படுகின்றன. திபெத்திய சமூகங்களுக்குள் கருத்து சுதந்திரம் மூலம் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கான முதன்மை குறிக்கோளுடன் இளம் திபெத்திய ஊடகவியலாளர்கள் குழுவை ஒருங்கிணைப்பதன் மூலம், நாடுகடத்தப்பட்ட மற்றும் திபெத்தில் ஆக்கிரமிப்பில் உள்ளனர்.[11]
தி திபெத் போஸ்ட் இன்டர்நேஷனல் உலகெங்கிலும் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடனும், மத்திய திபெத்திய நிர்வாகத்தின் பல்வேறு துறைகளுடனும் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது. அதே நேரத்தில் பல்வேறு திபெத்திய குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளில் தனிநபர்கள் மற்றும் சமூகங்களுடன் கையாள்கிறது.[11]
குறிப்புகள்
தொகு- ↑ "Tibet News - Tibet post International". Tibet post International. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
- ↑ 2.0 2.1 "Outlook Tibet". www.outlooktibet.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
- ↑ "About". பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
- ↑ International, Yeshe Choesang, Tibet Post (16 December 2014). "Everyday is Human Rights Day: A new hope for Tibetans in Tibet? - Tibet post International". பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Genocide in the 20th Century: Massacres in Tibet: 1966-76". CNN iReport. Archived from the original on 24 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-31. பார்க்கப்பட்ட நாள் 2020-12-11.
- ↑ "Yeshe Choesang - WN.COM advanced search". search.wn.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
- ↑ Choesang, Yeshe (10 December 2014). "Voice of An Exiled Tibetan: Hopes of freedom and struggle". Yeshe Choesang. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018 – via Google Books.
- ↑ "about us". Archived from the original on 23 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Plus de dix mille signatures en faveur du réalisateur Dhondup Wangchen
- ↑ 11.0 11.1 11.2 "South Tyrol Parliamentary President inaugurated The Tibet Post International". Archived from the original on 24 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)