ஏ. சீமா (A. Seema) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய விஞ்ஞானி ஆவார். அணிந்தவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் குறிக்கும் மார்பகக்கச்சுவை உருவாக்கிய ஒரு குழுவை இவர் வழிநடத்தினார்.

ஏ. சீமா
A. Seema
Dr A Seema getting the Nari Shakti Puraskar (cropped).jpg
பிறப்புகோழிக்கோடு
தேசியம்இந்தியா
கல்விஎம்.டெக், மற்றும் முனைவர் பட்டம்
பணிவிஞ்ஞானி
பணியகம்மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொருளியல் மையம்
அறியப்படுவதுமார்பகப் புற்றுநோயை சுட்டிக்காட்டும் கருவி உருவாக்கம்

பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்ததற்காக இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான நாரி சக்தி புரசுகார் விருதும், அறிவியல் துறையால் நிறுவப்பட்ட மகளிர் மேம்பாட்டுக்கான தேசிய விருதும் இவருடைய குழு உருவாக்கிய மார்பக புற்றுநோயை கண்டறிய அணியக்கூடிய சாதனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த உள்ளாடை வணிக மேம்பாட்டிற்காக அனுப்பப்பட்ட பிறகு, இவர் மற்றும் இவருடைய குழுவினரின் பணிக்காக 2019 ஆம் ஆண்டு இவருக்கு நாரி சக்தி புரசுகார் பரிசு வழங்கப்பட்டது.

வாழ்க்கைதொகு

சீமா இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள பெரிய நகரமான கோழிக்கோட்டில் இருந்து வந்தவராவார். முனைவர் பட்டம் பெறுவதற்கு முன்பு இவர் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெறப் படித்தார். அதன் பிறகு, கேரளாவில் மின்னணு தொழில்நுட்பத்திற்கான பொருட்களுக்கான மையம் என்ற பொது நிதியுதவி பெற்ற ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். [1]

ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது என்பதைக் கண்டறிய எக்சு-கதிர் இயந்திரத்தை விட சிறியதான ஒரு சாதனத்தைக் கண்டுபிடிக்க. [2] பொறுப்பேற்ற மலபார் புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த ஓர் அணியை இவர் வழிநடத்தினார். அவர்கள் உருவாக்கிய சாதனம் விளையாட்டு வீராங்கனைகள் அணியும் மார்பகக் கச்சை போல தோற்றமளிக்கிறது. ஒரு நோயறிதலைப் பெற சிறிது நேரம் அணிந்து கொண்டால் போதும். மார்பக ஊடுகதிர்ப்படம் சோதனைக்குச் சமர்ப்பிப்பதை விட சாதனம் மிகவும் எளிதானது. இது மட்டுமல்லாமல், புதிய சாதனத்திற்கு செயல்முறையை கண்காணிக்க கதிரியக்க நிபுணர் உதவியும் தேவையில்லை. [1] புதிய சாதனம் பதினைந்து வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கூட பயன்படுத்தப்படலாம் என்ற நன்மையும் உள்ளது. உடல் வடிவம் ஒரு பிரச்சனை இல்லை மற்றும் சாதனம் சுமார் $ 450 செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [2]

மார்பக ஊடுகதிர் பரிசோதனை போன்ற முறைகள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் கதிர்வீச்சின் காரணமாக 40 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு அறிவுறுத்தப்படுவதில்லை. மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் சோதனையை அனைவரும் மேற்கொள்ள அணுகும் நோக்கத்துடன் ஒரு விளையாட்டு கச்சையை ஒத்த இந்த மலிவு விலை சாதனம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணும் சொந்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகம் எவரும் அதைப் பயன்படுத்தும் வகையில் அனைத்து அளவுகளிலும் வாங்கிக் கொள்ளலாம்.

கச்சையை ஒரு பெண் 15 முதல் 30 நிமிடங்கள் மட்டும் அணிந்தால் போதும். மார்பகங்கள் ஒரு வெப்ப சுயவிவர வடிவத்தைக் கொண்டுள்ளன. சாதனத்தில் உட்பொதிக்கப்பட்ட வெப்ப உணரிகள் மார்பக மேற்பரப்பின் வெப்பநிலையை வரைபடமாக்கி, வெவ்வேறு வெப்பநிலைகளுக்கு வண்ண குறியீட்டுடன் இருபரிமாண வெப்பப் படத்தை உருவாக்கும். வெப்பப் படத்தின் நிற மாறுபாட்டின் அடிப்படையில் அசாதாரணங்களைக் கண்டறியலாம்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிய நாரி சக்தி புரசுகார் மூலம் சீமா அங்கீகரிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையான ராசுடிரபதி பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றதால் விருது பெறுவதற்காக சீமா புது டெல்லி சென்றார். மூன்று குழுக்களைச் சேர்ந்த மொத்தம் 41 பெண்கள் விருது பெற்றனர். [3] மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி விழாவில் இருந்தார். அதன் பிறகு விருது பெற்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். [4]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 thomas, elizabeth (2019-05-12). "Guts and glory!". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2021-01-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "This Kerala Scientist Won The Nari Shakti Puraskar For Devising A Bra To Detect Breast Cancer". IndiaTimes (in ஆங்கிலம்). 2019-03-17. 2021-01-11 அன்று பார்க்கப்பட்டது.
  3. P, Ambika; Mar 8, it / TNN /; 2019; Ist, 23:03. "From masons, barbers to creators of forests and sustainable homes, nari shakti takes charge". The Times of India (in ஆங்கிலம்). 2021-01-07 அன்று பார்க்கப்பட்டது.
  4. Mohammed, Irfan (2019-03-20). "India president confers Manju with Nari Shakti Puraskar award". Saudigazette (in English). 2021-01-09 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சீமா&oldid=3400310" இருந்து மீள்விக்கப்பட்டது