ஐசோபுரோப்பைல் குளோரைடு
ஐசோபுரோப்பைல் குளோரைடு (Isopropyl chloride) என்பது C3H7Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளோரோடைமெத்தில்மெத்தேன், 2-புரோப்பைல் குளோரைடு, இரண்டாம்நிலை-புரோப்பைல் குளோரைடு அல்லது 2- குளோரோபுரோப்பேன் போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்றும் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய வேதியியல் சேர்மமாகவும் உள்ளது. ஐசோபுரோப்பைல் ஆல்ககாலுடன் அடர் ஐதரோகுளோரிக் அமிலத்தையும் துத்தநாகக் குளோரைடையும் சேர்த்து மீள்வினைக்கு உட்படுத்தினால் ஐசோபுரோப்பைல் குளோரைடு உருவாகிறது[1].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோபுரோப்பேன்
| |||
வேறு பெயர்கள்
குளோரோமெத்தில்மெத்தேன், ஐசோபுரோப்பைல் குளோரைடு, 2-புரோப்பைல் குளோரைடு, இரண்டாம் நிலை-புரோப்பைல் குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
75-29-6 | |||
ChemSpider | 6121 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6361 | ||
வே.ந.வி.ப எண் | TX4410000 | ||
| |||
பண்புகள் | |||
C3H7Cl | |||
வாய்ப்பாட்டு எடை | 78.5413 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.862 | ||
உருகுநிலை | −117.18 °C (−178.92 °F; 155.97 K) | ||
கொதிநிலை | 35.74 °C (96.33 °F; 308.89 K) | ||
0.334 கி/100 மி.லி 12.5 °செ இல் | |||
எத்தனால்-இல் கரைதிறன் | முழுவதும் கலக்கும் | ||
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | முழுவதும் கலக்கும் | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3811 | ||
பிசுக்குமை | 4.05 cP 0 °செ இல்C 3.589 cP 20 °செ இல் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | சாத்தியமுள்ள சடுதிமாற்றி. உட்செலுத்துவதும் தோலில் படுவதும் தீங்கு. | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
R-சொற்றொடர்கள் | R11 R20 R21 R22 | ||
S-சொற்றொடர்கள் | S9 S29 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | −32 °C (−26 °F; 241 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கட்டமைப்பின்படி ஐசோபுரோப்பைல் குளோரைடு ஒரு கரிமக்குளோரின், இரண்டாம்நிலை ஆலோ ஆல்க்கேன் சேர்மமாகும். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஆலோ ஆல்க்கேனில், குளோரின் பதிலிகளுடன் பிணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுவின் சகபிணைப்பைச் சூழ்ந்து இரண்டு C-C பிணைப்புகள் காணப்படுவதை பார்க்கமுடிகிறது. முதல்நிலை (1°) ஆலோ ஆல்க்கேனுக்கு உதாரணமான 1-குளோரோபுரோப்பேன் என்ற உள்கட்டமைப்பு மாற்றியனை ஒப்பிடுகையில், குளோரின் பிணைந்துள்ள கார்பன் அணு ஒரேயொரு C-C பிணைப்பை மட்டுமே கொண்டுள்ளது.
ஒர் ஆய்வக வினைப்பொருளாக ஐசோபுரோப்பைல் குளோரைடுடன் ஆல்ககாலிக் பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து சூடாக்கினால் ஐதரசன் ஆலைடு நீக்க வினையினால் புரோப்பீன் உருவாகிறது. எனினும், பொட்டாசியம் ஐதராக்சைடுடன் புரியும் வினையானது அணுக்கவர் பதிலீட்டு வினையுடன் போட்டியிடுகிறது. ஏனெனில் OH− வலிமையான, இடத்தங்கலில்லாத அணுக்கவரி அயனியாகும். எனவே பொட்டாசியம் மூன்றாம்நிலை பியூட்டாக்சைடு ஒரு சிறந்த வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ann Smith, Patricia E. Heckelman (2001). "The Merck Index". An Encyclopedia of Chemicals, Drugs, and Biologicals (Thirteenth). Ed. Maryadele J. O'Nei. Whitehouse Station, NJ: Merck & Co., Inc.. 932.