ஐரீன் சூறாவளி (2011)

ஐரீன் சூறாவளி (Hurricane Irene) என்பது அமெரிக்காவின் கிழக்கு கரையோரபிரதேசங்களுக்கூடாக நகர்ந்து 2011 ஆகத்து இறுதிப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்திய சூறாவளியைக் குறிக்கும். அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய 'ஐரீன்" எனப்பெயரிடப்பட்ட இந்த சூறாவளி 1985ல் அமெரிக்காவைத்தாக்கிய, "க்ளோரியா' சூறாவளிக்குப் பின் பாரிய சூறாவளியாகக் கொள்ளப்படுகின்றது. ‘ஐரீன்’ சூறாவளி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தை ஆகத்து 27ம் திகதி தாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 960 கிலோமீற்றர் விட்டம் கொண்ட இந்த ‘ஐரீன்’ சூறாவளி மணித்தியாலத்திற்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் நகருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு பிரதேச நகரங்களுக்கு பாரிய சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.[2][3]

ஐரீன் சூறாவளி
Hurricane Irene
Category 3 major hurricane (SSHWS/NWS)
தெற்கு பகாமசில் ஐரீன் சூறாவளி (ஆகத்து 24)
தொடக்கம்ஆகத்து 20, 2011
மறைவுஆகத்து 29, 2011
உயர் காற்று1-நிமிட நீடிப்பு: 120 mph (195 கிமீ/ம)
தாழ் அமுக்கம்942 பார் (hPa); 27.82 inHg
இறப்புகள்21 நேரடி, 6 மறைமுகம்[1]
சேதம்$10.1 பில்லியன் (2011 US$)
பாதிப்புப் பகுதிகள்சிறிய அண்டிலிசு, புவெர்ட்டோ ரிக்கோ, டொமினிக்கன் குடியரசு, எயிட்டி, கூபா, துர்கசு கைகோசு தீவுகள், பகாமாசு, புளோரிடா, தென் கரொலைனா, வட கரொலைனா, வெர்ஜீனியா, மேரிலாந்து, டெலவெயர், பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, நியூயார்க், கனெடிகட், ரோட் தீவு, கிழக்கு கனடா
2011 அத்திலாந்திக் சூறாவளிப் பருவம்-இன் ஒரு பகுதி

முன் எச்சரிக்கை

தொகு

புயல் தாக்குவதற்கு முன்னதாகவே பாதுகாப்பு கருதி அரசு திறந்துள்ள மையங்களுக்குச் செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீடுகளில் மின்சார விநியோகம் நின்றுவிடும் என்பதால் முன்கூட்டியே உணவு தயாரித்து கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறும், மருந்து - மாத்திரைகளை பத்திரப்படுத்தி எடுத்துக் கொள்ளுமாறும், பேட்டரி, டார்ச் லைட்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அரசு கேட்டுக் கொண்டது.

அட்லாண்டிக் பருவம்

தொகு

வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், சூறாவளிகள் அடிக்கடி உருவாவது வழக்கம். இந்த சூறாவளிகள் உருவாகும் காலகட்டம், "அட்லாண்டிக் பருவம்' என அழைக்கப்படுகிறது. இந்தாண்டில் இப்பருவம், 2011 சூன் 1ம் தேதி ஆரம்பமாகி, நவம்பர் 30ம் தேதியோடு முடிவடைகிறது.

வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை

தொகு

சூறாவளியில்,'3'ம் எண் நிலை என்பது மிகப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது. இதற்கிடையில் கடந்த இரு நாட்களில், "ஐரீன்' வீரியம் குறைந்து, '1'ம் எண் நிலையை எட்டியது. எனினும்,"அதன் வேகம் மணிக்கு 150 கி.மீ., தூரம் இருக்கும். அதன் விளைவு 150 கி.மீ., சுற்றளவில் எதிரொலிக்கும். சூறாவளி வீசும் பகுதிகளில், இடியுடன் கூடிய பலத்த மழை, அதனால் கடும் வெள்ளப் பெருக்கு போன்றவை ஏற்படும்' எனவும், வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.[4]அமெரிக்காவின் கிழக்குக் கடலோர மாநிலங்களை ஐரீன் என்ற சூறாவளி ஆகத்து 27 அதிகாலை தாக்கியது. மணிக்கு 80 மைல் வேகத்தில் அடிக்கத் தொடங்கிய சூறாவளிக் காற்று கரையைத் தொட்டதும் 75 மைல் வேகத்துக்குத் தணிந்தது.

அவசர நிலை

தொகு

"ஐரீன்' சூறாவளி, அமெரிக்கக் கிழக்கு கடற்கரையோரமாக பயணித்து, நியூயார்க் அருகில் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு கரோலினா, விர்ஜினியா, மேரிலேண்ட், டெலாவேர், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் கனடிக்கட் ஆகிய 7 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயோர்க்கில் கடந்த இரு தசாப்தங்களில் முதல் தடவையாக சூறாவளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.[5][6]சுமார் 8 இலட்சம் மக்கள் வசிக்கும் நியூயோர்க் நகரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் பேரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.[7]

பராக் ஒபாமா விடுத்துள்ள அறிக்கை

தொகு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில்,"இது வரலாறு காணாத சூறாவளி; அதனால், மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

விமான நிலையங்கள் மூடப்பட்டன

தொகு

நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஆகத்து 29 வரை 8337 விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. [8] நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து வசதிகளும் மூடப்பட்டு உள்ளன. 468 சுரங்க ரெயில் பாதை நிலையங்கள், 840 மைல் நீளத்துக்கு உள்ள ரெயில் பாதைகள் மூடப்பட்டு உள்ளன. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.[9]

40 பேர் உயிரழப்பு

தொகு

ஐரின் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 மாநிலங்களில் 43 ஆக உயர்ந்துள்ளது. இப் புயலால் நியூயோர்க், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கன மழை மற்றும் காற்றால் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். [10] [11] ஐரீன் சூறாவளியால் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 7 பில்லியன் டொலர் அளவில் காப்புறுதி கோரப்படும் என அமெரிக்க நுகர்வோர் சம்மேளனம் கணக்கிட்டுள்ளது. [12]

வெள்ளம் பெருக்கெடுத்தது

தொகு

அமெரிக்காவின் நியுயோர்க் நகரை "ஐரீன்' ஆகத்து 28 இல் சூறாவளி தாக்கியது. நகரை நெருங்கி வரும்போது அதன் வேகம் மிகவும் குறைந்து விட்டதால் பாதிப்பு பெருமளவு இல்லை என்றாலும், கனத்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Irene’s Damage: Deaths, Flooding, Power Losses State-by-State"
  2. Some Areas Flooded As A Weakened Irene Passes Through City பரணிடப்பட்டது 2011-11-26 at the வந்தவழி இயந்திரம், ஆகத்து 28, 2011
  3. அமெரிக்காவில் 'ஐரீன்' சூறாவளி பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம், வீரகேசரி, ஆகத்து 28, 2011
  4. அமெரிக்காவை மிரட்டும் "ஐரீன்' சூறாவளி : 7 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம், தினமலர், ஆகத்து 28, 2011
  5. அமெரிக்காவை சுழற்றியடிக்கும் ஐரீன் புயல்- நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் அவசரநிலை பரணிடப்பட்டது 2011-09-25 at the வந்தவழி இயந்திரம், தட்ஸ்தமிழ், ஆகத்து 28, 2011
  6. Hurricane Irene Buffets The Big Apple As It Passes Through City [தொடர்பிழந்த இணைப்பு],
  7. TROPICAL STORM IRENE ADVISORY[தொடர்பிழந்த இணைப்பு], 13 News, ஆகத்து 28, 2011
  8. அமெரிக்காவில் 'ஐரீன்' சூறாவளி பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்,
  9. அமெரிக்காவை "ஐரீன்" மிரட்டும் புயல் : 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர் பரணிடப்பட்டது 2011-12-14 at the வந்தவழி இயந்திரம், தமிழ்குறிஞ்சி, ஆகத்து 28, 2011
  10. Flooding begins as Tropical Storm Irene lashes New York City, CNN, ஆகத்து 28, 2011
  11. ஐரின் புயல்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு , தினமலர், ஆகத்து 29, 2011
  12. ஐரீன் சூறாவளி:அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு பரணிடப்பட்டது 2012-01-28 at the வந்தவழி இயந்திரம்,ஆகத்து 31, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரீன்_சூறாவளி_(2011)&oldid=3833144" இலிருந்து மீள்விக்கப்பட்டது