ஐரோப்பியப் பஞ்சுருட்டான்
ஈ பிடிப்பான் இனவகைச் சிறுபறவை
ஐரோப்பிய ஈ பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மீரோபிடே
|
பேரினம்: | |
இனம்: | மீ. அப்பியாசுடர்
|
இருசொற் பெயரீடு | |
மீரோப்சு அப்பியாசுடர் லினேயசு, 1758 | |
மீரோப்சு அப்பியாசுடர் பரம்பல் |
ஐரோப்பிய ஈ பிடிப்பான் (European Bee-eater, மீரோப்சு அப்பியாசுடர்) அல்லது ஐரோப்பிய பஞ்சுருட்டான் என்பது ஈபிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பறவையினமாகும். தென் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஈக்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் காடுகளிலும் காணப்படும். இவை வால் பகுதியையும் சேர்த்துப் பொதுவாக 27 முதல் 29 செ.மீ. நீளம் இருக்கும். மேற்புறம் பழுப்பு மற்றும் மஞ்சள் வண்னமும் சிறகுகள் பச்சையாகவும் அலகு கறுத்த நிறத்திலும் காணப்படும். இவை பனிக்காலத்தில் ஆப்பிரிக்கா வழியாக இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளுக்கு வலசை செல்கின்றன.
படங்கள்
தொகு-
அஞ்சல் தலையில்
-
ஐரோப்பிய பஞ்சுருட்டானின் படம் (யோவான் கவுட்)
-
காணொலியில் ஐரோப்பிய பஞ்சுருட்டான்
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Merops apiaster". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- European bee-eater videos, photos & sounds on the Internet Bird Collection
- European bee-eater species text in The Atlas of Southern African Birds.
- Audio recordings of European bee-eater on Xeno-canto.
- Guêpier d'Europe Merops apiaster - European Bee-eater—Photos at Oiseaux.net
- Feathers of European bee-eater (Merops apiaster) பரணிடப்பட்டது 2018-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Ageing and sexing by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze பரணிடப்பட்டது 2016-11-08 at the வந்தவழி இயந்திரம் (PDF; 5.4 MB)