ஐலாகாண்டி
ஐலாகாண்டி (Hailakandi), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் தெற்கில் அமைந்த மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டத்தில் அமைந்த ஐலாகாண்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் கோட்டத் தலைமையிடமான சில்சார் நகரத்திற்கு தென்மேற்கில் 35.8 கிலோ மீட்டரும்; கவுகாத்திக்கு தென்கிழக்கே 310.8 கிலோ மீட்டரும்; தேஜ்பூருக்கு தெற்கில் 373.9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
ஐலாகாண்டி Hailakandi | |
---|---|
நகரம் | |
அசாம் மாநிலத்தின் ஐலாகாண்டி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°41′N 92°34′E / 24.68°N 92.57°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
கோட்டம் | மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு |
மாவட்டம் | ஐலாகாண்டி |
நிறுவிய ஆண்டு | 1 அக்டோபர் 1989 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஐலாகாண்டி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,327 km2 (512 sq mi) |
ஏற்றம் | 21 m (69 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 33,637 |
• அடர்த்தி | 497/km2 (1,290/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமிய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 788155 |
தொலைபேசி குறியீடு | 91 - (0) 03844 |
வாகனப் பதிவு | AS-24 |
பிற மொழிகள் | வங்காள மொழி |
இணையதளம் | hailakandi |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 16 வார்டுகளும், 7,000 வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 33,637 ஆகும். அதில் ஆண்கள் 16,843 மற்றும் பெண்கள் 16,794 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.84% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 92.08% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 67.26%, இசுலாமியர் 31.77%, கிறித்தவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.74% ஆகவுள்ளனர். [1]
போக்குவரத்து
தொகுஐலாகாண்டி தொடருந்து நிலையம், சில்சார் நகரத்துடன் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.[2]