ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம்
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1MDB) என்பது மேம்பாட்டு வியூகம் வகுக்கும் நிறுவனமும், மலேசிய அரசு அமைப்புமாகும்.[1] நாட்டின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான வியூகத்தை உருவாக்குவதற்காகவும், உலகளாவிய பங்குதாரர்களை பெறவும், அன்னிய நேரடி முதலீட்டைநாட்டிற்கு கொண்டுவருவதும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.[2] இந்நிறுவனம் தற்போது நாட்டின் முக்கிய திட்டங்களான துன் ரசாக் எக்சேஞ்ச் மற்றும் அதன் துணை நிறுவனமான பந்தார் மலேசிய மற்றும் மூன்று மின் உற்பத்தி நிறுவனங்களை வாங்கியுள்ளது.
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2008 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
முதன்மை நபர்கள் | நஜீப் ரசாக் |
தொழில்துறை | முதலீட்டு வியூகம். |
வருமானம் | வெளியிடப்படவில்லை |
உரிமையாளர்கள் | மலேசிய அரசு |
இணையத்தளம் | http://www.1mdb.com.my/ |
2015ல், இந்நிறுவனம் தொடர்பான செய்திகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகளில் வெளிவரத்துவங்கின. குறிப்பாக அமெரிக்க வால் ஸ்டிரீட் பத்திரிக்கையில் பிரதமர் நஜீப் ரசாகின் சொந்த வங்கி கணக்கிலும் அவரது நெருங்கியவர்களின் கணக்குகளில் இந்நிறுவனத்தின் பணம் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நிறும ஆளுகை
தொகு1MDB மூன்றடுக்கு சரிபார்த்தல் மற்றும் சமநிலைக்குழு அமைப்பை கொண்டுள்ளது அதில் அறிவுரைக்குழு, இயக்குனர் குழுமம் மற்றும் மூத்த மேலாண்மைக் குழு ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. அறிவுரைக்குழுவின் தலைவராக மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் இருக்கிறார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Us What we do". http://1mdb.com.my. http://1mdb.com.my/about-us/what-we-do.
- ↑ "Building a brighter Malaysia". http://www.graduan.com. http://www.graduan.com/article/view/128. பார்த்த நாள்: 2015-07-19.
- ↑ "We will forge strategic global partnership to spur FDI". http://1mdb.com.my. 14 December 2009. http://1mdb.com.my/news-coverage/we-will-forge-strategic-global-partnership-to-spur-fdi.