ஓகே கம்பியூட்டர் (வலைத் தொடர்)
ஓகே கம்பியூட்டர் என்பது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஓர் இந்திய அறிவியல் புனைகதை நகைச்சுவை-நாடக தொலைக்காட்சித் தொடராகும். இதனை பூஜா ஷெட்டி மற்றும் நீல் பாகேதர் ஆகியோர் இயக்கினர். இவர்களுடன் ஆனந்த் காந்தியும் திரைக்கதை எழுதினார்.
ஓகே கம்பியூட்டர் | |
---|---|
வகை | அறிவியல் புனைவு நகைச்சுவை நாடகம் |
உருவாக்கம் |
|
எழுத்து |
|
இயக்கம் |
|
நடிப்பு | |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 6 (list of episodes) |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் |
|
படப்பிடிப்பு தளங்கள் | இந்தியா |
தயாரிப்பு நிறுவனங்கள் | மெமேசிஸ் கலாச்சார ஆய்வகம் |
விநியோகம் | ஸ்டார் இந்தியா |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஹாட் ஸ்டார் |
ஒளிபரப்பான காலம் | மார்ச்சு 26, 2021 |
காந்தியும் அவரது குழுவும் இந்த தொடரை மெமேசிஸ் கலாச்சார ஆய்வகம் மூலம் தயாரித்தனர். இந்தத் தொடரில் ராதிகா ஆப்தே, விஜய் வர்மா, ரசிகா துகல், ஜாக்கி ஷிராஃப், கனி குஸ்ருதி, மற்றும் உல்லாஸ் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 20 மார்ச் 2021 முதல் [2] இத்தொடர் ஒளிபரப்பப்பட்டது.
இதன் தலைப்பான ஓகே கம்பியூட்டர் என்பது டக்ளஸ் ஆடம்ஸின் நாவலான தி ஹிட்சிகரின் கைடு டு கேலக்ஸி என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.
சுருக்கம்
தொகுகதைகளம் 2031 ஆண்டு. அப்போதைய இந்தியா உயர்ந்த ஸ்மார்ட் ஹாலோகிராம்கள் மற்றும் ட்ரோன் சூப்பர் ஹைவேக்கள் என தகவல்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. அனைத்து வேலைகளை செய்யவும் இயந்திர மனிதர்கள் உள்ளார்கள். ஒரு நெடுஞ்சாலையில் சுயமாக ஓடக்கூடிய மகிழுந்து விபத்தினை ஏற்படுகிறது. அந்த விபத்தில் ஒரு மனிதன் இறக்கிறார்.
விபத்தினை பற்றி துப்பறிய சாஜன் குண்டு என்ற சைபர் கிரைம் காவலர் வருகிறார். அவருக்கு இயந்திரங்களின் மீது மதிப்பில்லை. அதனால் அவருடன் லட்சுமி சூரி என்ற பெண் காவலரும் இணைந்து கொள்கிறார். இறந்து போன நபர் யார்? தானியங்கி மகிழுந்திற்கு நபரை கொல்ல கட்டளை இட்டது யாரென கண்டறிகிறார்கள்.
நடிகர்கள்
தொகு- சாஜன் குண்டாக விஜய் வர்மா
- லக்ஷ்மி சூரியாக ராதிகா ஆப்தே
- மோனலிசா பாலாக கனி குஸ்ருதி
- அஜீப்பாக உல்லாஸ் மோகன்
- அஜீப்பின் குரலாக நீல் பாகேதர்
- புஷ்பக் ஷாகுராக ஜாக்கி ஷிராஃப்
- அஷ்பாக் ஆலியாவாக சாரங் சதாயே
- டி.சி.பி டி.சி.பியாக விபா சிபர்
- த்ரிஷா சிங்காக ரத்னபாலி பட்டாச்சார்ஜி
- ரசிகாவாக டுகால் சடோஷி மோண்டல்
- நைகல் பாட்வாலாக அலோக் உல்பத்
தயாரிப்பு
தொகுபூஜா ஷெட்டி, நீல் பகேதர் மற்றும் ஆனந்த் காந்தி ஆகியோர் மூன்று ஆண்டுகளாக கதையை எழுதினார்கள். இவர்களின் குழு ஏழு ஆண்டுகள் இந்தக் கதைக்காக பணியாற்றியது. அதில் நான்கு வருடங்கள் திரைகதையை உருவாக்க செலவிட்டனர். இக்கதையில் விளையாட்டு, தொழில்நுட்பம், பிரபஞ்ச தொடர்ச்சி, இயந்திரங்கள், அனிமேசன் என எல்லாவற்றையும் உள்ளடக்கினர்.[3][4][5]
கோவிட்-19 தொற்றுநோய்க்காக பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் 2020 மார்ச் மாதத்திற்குள் இந்த அணி பெரும்பாலான தொடர்களை படமாக்கியது, மேலும் 2020 ஏப்ரலில், முதன்மை நடிக உறுப்பினர்களான ராதிகா ஆப்தே மற்றும் விஜய் வர்மா ஆகியோர் இத்தொடரில் இருப்பதை செய்தியாக வெளியிட்டனர்.[6] பொதுமுடக்கம் கட்டுப்பாடுகள் காரணமாக தாமதமாகவே படபிடிப்புக்கு பிந்தைய வேலைகளில் ஈடுபட்டனர்.[7] கனமான அனிமேசன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை தொடர் கொண்டிருப்பதால், பிந்தைய தயாரிப்புக்காக குழு நான்கு மாதங்கள் செலவிட்டது.[8] பிப்ரவரி 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், குழு தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை முடித்தது.
வெளியீடு
தொகுஇந்தத் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் அதிகாரிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது, அதன் விநியோக உரிமைகளுக்கு இறுதியில் ஒப்புக்கொண்டனர்.[8][9] மார்ச் 8, 2021 அன்று, தொடரின் முதல் சுவரொட்டி சமூக ஊடக தளங்கள் மூலம் வெளியிடப்பட்டது,[10] அதைத் தொடர்ந்து டிரெய்லர் 10 மார்ச் 2021 இல் வெளியிடப்பட்டது.[11][12] இந்தத் தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 26 மார்ச் 2021 அன்று இந்தியில் வெளியிடப்பட்டது. மேலும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியிடப்பட்டது.[13]
வரவேற்பு மற்றும் விமர்சனம்
தொகுஎன்.டி.டி.வி.யின் சாய்பால் சாட்டர்ஜி இந்தத் தொடருக்கு மதிப்பெண்ணாக ஐந்திற்கு மூன்றைக் கொடுத்தார். அவர் "ஓகே கம்ப்யூட்டர், ஆறு அத்தியாயங்களால் ஆனது. ஒவ்வொன்றும் சுமார் 40 நிமிடங்கள் ஓடக்கூடியது. இது ஒரு நீட்டிக்கப்பட்ட வினோதமான நகைச்சுவைத் தொடராகும். சீரற்றதாகவும் எப்போதும் புதிரான தாகவும் இத்தொடர் உள்ளது. " எனத் தெரிவித்தார்.[14] ஸ்கோர்ல்.இன் வலைதள நந்தினி ராமநாத் கூறுகையில், " ஓகே கம்பியூட்டர் ஆச்சிரியமானது. இதில் தானியங்கி இயந்திரங்களின் போராட்டங்கள், வீட்டில் மென்பொருள் மற்றும் வன்பொருள்கள் என மனித நுண்ணறிவை விட சிறந்தது எதுவும் இல்லை." என்கிறார்.[15]
இந்துஸ்தான் டைம்ஸின் ரோஹன் நஹார் "அனைத்து வகையான பார்வையாளர்களையும் அந்நியப்படுத்தும் காட்சிகளை கொண்டுள்ள இத்தொடர், தனது துருப்பு அட்டைப் போன்ற ஜாக்கி செராப் நடிகரை வீணடித்திருக்கிறார்கள்." என்று கூறினார்.[16] தி இந்தியன் எக்ஸ்பிரஸின் ஏக்தா மாலிக் ஐந்து நட்சத்திரங்களில் மூன்று நட்சத்திரங்களை இத்தொடருக்கு வழங்கினார், "அறிவியல் புனைகதை விரும்புவோருக்கு கூட, இந்த விஜய் வர்மா-ராதிகா ஆப்தே நடித்தது சிலவற்றைப் பழக்கப்படுத்தும். ஆனால் அது மதிப்புக்குரியது. " [17] ஃபர்ஸ்ட் போஸ்டின் பிரதீப் மேனன் ஐந்திற்கு மூன்று நட்சத்திரங்களை தந்தார். அவர் " ஓகே கம்ப்யூட்டர் இன்னும் பெரிதாக பிடிக்கவில்லை, ஏனென்றால் நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சில பஞ்ச்லைன்கள் மிகவும் சிறப்பானவை, மிகவும் நுட்பமானவை, அவை அங்கு இருப்பதை நீங்கள் கவனிப்பதற்கு முன்பு அவை உங்களை கடந்து போய்விடும். இது மீண்டும் மீண்டும் பார்க்கப்படுவதன் மூலம் பாராட்டப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி; ஏனென்றால், முதல் தடவையாக நீங்கள் பார்க்கும் பொழுது இதனை சரியாக உணராமல் போகலாம். " என்றார்.[18]
குறிப்புகள்
தொகு
- ↑ Arora, Akhil (2021-02-28). "Watch the Trailer for Anand Gandhi's OK Computer, Out March 26 on Hotstar". NDTV Gadgets 360. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ Shekhar, Mimansa (2021-03-09). "OK Computer trailer: Vijay Varma investigates a murder committed by a car". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ "Anand Gandhi: 'What would Charlie Chaplin, Jacques Tati or Govinda do?'". Mintlounge (in ஆங்கிலம்). 2021-03-23. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ Barve, Ameya (2021-03-10). "'Ok Computer' is the beginning of conversation on AI: Anand Gandhi". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "With Ok Computer, on Disney+ Hotstar, Anand Gandhi wants to upgrade pop culture in India". GQ India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ World, Republic (2020-04-15). "Vijay Varma to collaborate with Radhika Apte for a Sci-fi comedy web series? Details here". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ "Anand Gandhi's upcoming series OK Computer starring Radhika Apte and Vijay Varma gets ready". www.indulgexpress.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ 8.0 8.1 Hungama, Bollywood (2021-02-18). ""Welcome to the future!", says Anand Gandhi by announcing the release of his upcoming project- OK Computer! : Bollywood News - Bollywood Hungama" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "OK Computer to premiere on Disney Plus Hotstar". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "Vijay Varma reveals first look of new Disney Plus Hotstar series OK Computer: 'Proud of India's first sci-fi comedy'". The Indian Express (in ஆங்கிலம்). 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ The Hindu Net Desk (2021-03-10). "'OK Computer' trailer: Can AI commit a crime?". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ "OK Computer trailer: Vijay Varma investigates a murder committed by a car". The Indian Express (in ஆங்கிலம்). 2021-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ vishalingale (2021-03-26). "OK Computer and 6 other movies & shows on Disney+ Hotstar you can watch without a premium subscription". GQ India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "OK Computer Review: A Futuristic Fable, Starring Radhika Apte, Vijay Varma And Jackie Shroff, Is Insanely Inventive". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ Ramnath, Nandini. "'OK Computer' review: Artificial intelligence meets human bumbling". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "OK Computer review: Hotstar's new comedy is too alienating to attract an audience, wastes a wonderful Jackie Shroff". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-03-26. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "OK Computer review: Vijay Varma series is an acquired taste but worth the effort". The Indian Express (in ஆங்கிலம்). 2021-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
- ↑ "Ok Computer review: Disney+ Hotstar VIP show is a sci-fi comic whodunnit that dials up the whimsy - Entertainment News, Firstpost". Firstpost. 2021-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.