ஔசெப்பச்சன்

இந்திய சையமைப்பாளர்

மேச்செரி லூயிசு ஔசெப்பச்சன் (பிறப்பு 13 செப்டம்பர் 1955), ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார்.[1] இவர் ஏராளமான திரைப்பட ஒலிப்பதிவு தொகுப்புகளுக்கும், பின்னணி பாடல்களுக்காகவும் தேசிய விருது, பிலிம்பேர் விருது, கேரள மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றவர். இவர் மலையாளத்தில் இந்திய இசையின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

ஔசெப்பச்சன்
இயற்பெயர்மேச்செரி லூயிசு ஔசெப்பச்சன்
பிறப்பு13 செப்டம்பர் 1955 (1955-09-13) (அகவை 68)
பிறப்பிடம்ஒல்லூர், திருச்சூர், கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட இசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், இசை நடத்துநர், இசைத் தயாரிப்பாளர், நிகழ்ச்சி அமைப்பாளர்
இசைக்கருவி(கள்)வயலின்
இசைத்துறையில்1978 – தற்போது வரை

சுயசரிதை

தொகு

13 செப்டம்பர் 1955 இல் மேச்சேரி லூயிசு - மாதிரி பலியக்காரா ஆகியோருக்கு கேரளாவின் திருச்சூரில் ஒல்லூரில் பிறந்தார். [2] இவர் தனது முறையான கல்வியை திருச்சூர் புனித தோமையா கல்லூரியில் முடித்தார். இசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தனது கல்வியை முடித்த பின்னர், ஒரு சிறந்த வயலின் கலைஞராக மாறினார். "வாய்ஸ் ஆஃப் திருச்சூர்" உள்ளிட்ட சில இசை குழுக்களில் வயலின் கலைஞராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் புகழ்பெற்ற பின்னணி பாடகி பி. மாதுரியின் இசை நிகழ்ச்சிகளில் வயலின் கலைஞராக வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இவர் இசை அமைப்பாளர் பவவூர் ஜி. தேவராஜன் மாஸ்டரின் கீழ் வயலின் கலைஞரானார். [2] பின்னர் இவர் சென்னைக்குச் சென்றார். அங்கு மலையாளப் படங்களின் பெரும்பாலான பதிவு வேலைகள் செய்யப்பட்டன.

தொழில்

தொகு

திரையுலகில் ஈனம் என்ற திரைப்படதிற்காக இவர் முதன் முதலில் பின்னணி இசை அமைத்தார். இவர் ஆரவம் (1979) படத்திற்கு கூடுதல் பின்னணி இசையமைத்தார். அதில் இவர் வயலின் வாசிப்பவராகவும் நடித்திருந்தார். இருப்பினும் இயக்குநர் பரதன் இயக்கிய காதோடு காத்தோரம் (1985), இவரது அறிமுகமாக கருதப்படுகிறது. இந்தப் படத்தில் இவரது வயலின் இசை வெகுவாக பாரட்டப்பட்டது.[2] பின்னர் இவர் 120 படங்களுக்கு மேல் இசையமைத்தார்.[3] வி.கே.பிரகாஷ் இயக்கிய வர்த்தகமற்ற இந்திப் படமான பிரீக்கி சக்ராவுக்கான பாடல்களையும் இவர் இசையமைத்தார். மேலும் பல இந்திப் படங்களுக்கான பின்னணி இசையையும், குறிப்பாக பிரியதர்ஷன் இயக்கிய படங்களுக்கு இசையமைத்தார். இவரது திரைப்படம் அல்லாத பாடல்களில் ஓனபூதலம், வசந்தகீதங்கள், பல கிறிஸ்தவ பக்தி பாடல்கள் போன்ற பிரபலமான இசைத் தொகுப்புகளும் உள்ளன. இசை இயக்கம் தவிர, இவர் ஏஷ்யாநெட்டின் ஐடியா ஸ்டார் சிங்கர் 2008 என்ற நிகழ்ச்சியிலும், கைரளி தொலைக்காட்சியின் கந்தர்வ சங்கீதம் 2012 என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார்.[4]

விருதுகள்

தொகு

1987 இல் உன்னிகளே ஒரு கத பறையம் திரைப்படத்திற்காக இவருக்கு முதல் மாநில விருது கிடைத்தது. இவரது முதல் தேசிய விருது 2007ஆம் ஆண்டில் பிரபல இயக்குநர் சியாமபிரசாத்தின் ஒரே கடல் படத்திற்காக கிடைத்தது. இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சுபபந்துவராலி இராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளன. நாதன் என்ற படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான மாநில விருது கிடைத்தது. புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பலர் இவருடைய சீடர்களாக இருந்தனர். இதில் ஏ. ஆர். ரகுமான், வித்தியாசாகர், ஹாரிஸ் ஜயராஜ் போன்றோர் அடங்குவர். இசையமைப்பாளர் கோபி சுந்தர் இவரது உதவியாளர், பின்னணி பாடகர் பிராங்கோ சைமன் இவரது மருமகன்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ouseppachan". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
  2. 2.0 2.1 2.2 weblokam.com – Profile பரணிடப்பட்டது 2008-01-08 at the வந்தவழி இயந்திரம்
  3. IMDb – Profile
  4. "Eligible for Best Score, Names From Hollywood and Malayalam=http://carpetbagger.blogs.nytimes.com/2011/12/23/eligible-for-best-score-names-from-hollywood-and-malayalam/". {{cite web}}: Missing or empty |url= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔசெப்பச்சன்&oldid=3237499" இலிருந்து மீள்விக்கப்பட்டது