கஞ்சஞ்சுங்கா விரைவுவண்டி

கஞ்சஞ்சுங்கா விரைவுவண்டி, இந்திய இரயில்வே இயக்கும் விரைவுவண்டியாகும். முதலில் இது ஹவுராவில் இருந்து புது ஜல்பாய்குரி வரை சென்று திரும்பியது. இதன் வழித்தடம் நீட்டிக்கப்பட்டு, இந்த வண்டி குவாஹாட்டி சந்திப்பு வரை சென்று திரும்பியது. பின்னர், சியால்தா என்ற இடத்தில் இருந்து சில்சார் வரை சென்று திரும்பியது.[1] தற்போது அகர்த்தலாவுக்கும் கோல்கத்தாவில் உள்ள சியல்தாவுக்கும் இடையே இயக்கப்படுகிறது.[2] ஒவ்வொரு சனியன்றும், செவ்வாயன்றும் காலை 5:15 மணிக்கு அகர்த்தலாவில் இருந்து கிளம்பி, ஞாயிறன்றும், புதனன்றும் மாலை 7:25 மணிக்கு சியல்தாவை வந்தடையும். பின்னர், சியல்தாவில் இருந்து ஒவ்வொரு ஞாயிறன்றும், வியாழனன்றும், காலை 6:35 மணிக்கு கிளம்பி, திங்களன்றும், வெள்ளியன்றும் இரவு 9:00 மணிக்கு அகர்த்தலாவுக்கு வந்தடையும்.[2]

இந்த வண்டி வாரம் மும்முறை இயக்கப்படுகிறது. இமயமலைத் தொடரில் உள்ள கஞ்சன்சுங்கா மலையின் பெயர் இந்த வண்டிக்கு சூட்டப்பட்டுள்ளது.[1]

நிறுத்தங்கள்

தொகு

கிட்டத்தட்ட 1556 கி.மீ தொலைவை 38 மணிநேரத்தில் கடக்கிறது இந்த வண்டி 38 நிலையங்களில் நின்று செல்கிறது.[2] இவற்றில் முக்கியமான நிலையங்களை கீழே காணலாம்.

சான்றுகள்

தொகு