கண்ணையா யோகி
கண்ணையா யோகி என அழைக்கப்பட்ட பண்டிதர் ஜி. கண்ணையா யோகி அவர்கள் (பிறப்பு: 29-05-1882, இறப்பு: 02-12-1990) இந்தியா தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்து 108 ஆண்டுகள் வாழ்ந்த ஓர் இந்து ஆன்மீகவாதியாவார். இவர் இந்தியாவின் சென்னை அம்பத்தூரிலுள்ள ஆத்ம ஞான யோக சபையினை நிறுவி ஆன்மீகப் பணி புரிந்தார்.
பண்டிதர் ஜி. கண்ணையா யோகி | |
---|---|
பிறப்பு | குருசுவாமி கண்ணையா மே 29, 1882 கோயம்புத்தூர், தமிழ்நாடு |
இறப்பு | திசம்பர் 2, 1990 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 108)
இருப்பிடம் | அம்பத்தூர், சென்னை |
மற்ற பெயர்கள் | கண்ணையன், பண்டிதர் கண்ணையா யோகி |
பணி | ஆன்மீக ஆசான், நூலாசிரியர், பண்டிதர் |
அறியப்படுவது | ஆன்மீகம் |
சமயம் | இந்து |
வலைத்தளம் | |
http://kanniahyogi.blogspot.com |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுயோகி ஸ்ரீ கண்ணையா அவர்கள் குருசுவாமி தம்பதியினருக்கு மே 05, 1882 அன்று கோயம்பத்தூரில் பிறந்தார். இவரது தந்தை குருசுவாமி அவர்கள் அப் பிரதேசத்தின் பிரபலமான நாடி ஜோதிடர் ஆவார். சிறு வயதிலேயே கடவுளை காண வேண்டும் என ஏக்கம் கொண்டிருந்தார் கண்னையன் அவர்கள்.
ஆன்மீகக் கல்வி
தொகுகண்ணையா யோகி அவர்களை அவரது ஆறாவது வயதிலேயே சப்தரிஷிகளின் தலைவரான ஸ்ரீ அகத்திய மாமஹரிஷி அவர்கள் ஆட்கொண்டு, நீலமலையிலுள்ள தமது ஆச்சிரமத்திற்கு அழைத்துவந்தார். அங்கு அகத்திய மஹரிஷி மற்றும் புலிப்பாணி மஹரிஷி ஆகியோரால் நான்கு வேதங்கள், 96 தத்துவங்கள், எல்லா மொழிகளின் வடிவ, ஒலி ரகசியங்கள், யந்திர, தந்திர, மந்திரங்கள், ஆய கலைகள் 64, அஷ்டமாசித்திகளின் பெருக்கமான 512 சித்திகள் உட்பட அனைத்துவிதமான ஆன்மீகக் கலைகளும் கற்பிக்கப்பட்டது. அவர் 18 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து ஆன்மீகம் பயின்றார்.
திருமண வாழ்க்கை
தொகு18 ஆண்டுகால ஆன்மீகக் கல்வியின் பின்னர், தமது குருவின் உத்தரவின் பேரில் மீண்டும் கோயம்புத்தூர் திரும்பினார். அங்கு தமது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் முடித்தார். அதன் வாயிலாக இரு குழந்தைகளுக்கு தந்தையுமானார். இவ்வாறான காலகட்டத்தில் தனது தந்தையார் மரணமடைய, அவரது நாடி ஜோதிடப் பணியினைத் தொடர்ந்தார் கண்ணையா. சில காலத்தில தமது துணைவியாரும் இறக்க, தமது குழந்தைகளை பராமரிப்பதற்காக தம் குருவின் உத்தரவின் பேரில் மறுமணமும் புரிந்துகொண்டார்.
பண்டிதர்
தொகுஆசிரியர் தொழிலில் இணைவதற்காக் இவர் பண்டிதர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தார்.
ஆன்மீகப் பணி
தொகுகண்ணையா யோகி அவர்கள் சென்னை அம்மத்தூரில் அமைந்துள்ள ஆத்ம ஞான யோக சபையினை நிறுவினார். இதன்மூலம் அங்கு வரும் பக்தர்களுக்கும் அடியவர்களுக்கும் தமது குருவிடமிருந்து கற்ற ஆன்மீக வித்தைகளை கற்பித்து வரலானார். கண்ணையா யோகி அவர்களது பக்தர்கள் உலக நாடுகள் பலவற்றில் உள்ளார்கள். இவருக்கு சீடர்கள் பலர் இருந்தாலும், முருகேசு சுவாமிகள், றுடொல்ஃப் மற்றும் யோகி ஜனார்த்தனா போன்றவர்கள் மிகப் பிரபலமானவர்கள்.
குரு வந்தனம்
தொகுகண்ணையா யோகி அவர்களின் சிறப்பினைக் கூறும் குரு வந்தனப் பாடல்:
காவி உடுத்திடாமல் கமண்டலம் எடுத்திடாமல்
காட்டிடை அலைந்திடாமல் காணலிடை நலிந்திடாமல்
பூவுலகம் தன்னை சுத்த பொய் என்றும் புகன்றிடாமல்
புறத்தொரு மதத்தினோரைப் புண்பட பேசிடாமல்
சேவைகள் செய்தற்போதும் தெய்வத்தை தெரிவோம் என்று
தெளிவுற காட்டினாய் உன் தினசரி வாழ்கைதன்னால்
தீவினை இருட்டை போக்கி ஜகமெல்லாம்
விளங்கும் ஆன்மிக யோக ஞான தீபமே
ஸ்ரீ கண்ணைய தேவனே போற்றி போற்றி போற்றி
இறப்பு
தொகுகண்ணையா யோகி அவர்கள் 1990-12-02 அன்று இறந்தார்
நூல்கள்
தொகுகண்ணையா யோகி அவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பல கையெழுத்துப் பிரதிகளாகும். பிற்காலத்தில் அவற்றுள் பல அவரது சீடர்களால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. அவ்வாறு வெளியிடப்பட்ட சில நூல்கள்.
- ஆன்மீகப் படைப்புகள் பகுதி 1 (மானச யோகம்)
- ஆன்மீகப் படைப்புகள் பகுதி 2 -பகுதி 11
- ஸ்ரீ காயத்திரி உபாசனா பத்ததி
வெளி இணைப்புகள்
தொகு- Life History of Kanniah Yogi
- http://atmayoga.hpage.com/ பரணிடப்பட்டது 2012-01-26 at the வந்தவழி இயந்திரம்