கனகாசலபதி கோயில், கனககிரி

இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள இந்து கோவில்

கனகாசலபதி கோயில் (Kanakachalapathi Temple) என்பது திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோவிலாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கொப்பள் மாவட்டத்தின் கங்காவதி வட்டத்திலுள்ள கனககிரி நகரில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் "சுவர்ணகிரி" ("தங்கமலை") என்று அழைக்கப்பட்ட கனககிரி கொப்பளிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், பெங்களூர் நகரத்திற்கு வடக்கே 380 கி.மீ தொலைவிலும், பெல்காம் நகரத்திற்கு கிழக்கே 200 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கனகாசலபதி கோயில்
கனகாசலபதி கோயில் (பொ.ச.16ஆம் நூற்றாண்டு)
கனகாசலபதி கோயில் (பொ.ச.16ஆம் நூற்றாண்டு)
கனகாசலபதி கோயில் is located in கருநாடகம்
கனகாசலபதி கோயில்
கனகாசலபதி கோயில்
கர்நாடகாவில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°33′N 76°24′E / 15.550°N 76.400°E / 15.550; 76.400
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்கொப்பள்
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
583283
அருகிலுள்ள நகரம்கங்காவதி
இணையதளம்www.kanakagiri.in
கொப்பாள் மாவட்டத்தில் கனககிரியில் உள்ள பிரதான நுழைவாயிலிருந்து கனகாசலபதி கோயிலின் காட்சி

பின்னணி

தொகு

கனககிரி அதன் தற்போதைய பெயரை அங்கு தவம் செய்த இந்து துறவியான கனக முனியிடமிருந்து பெறப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொப்பள் நகரம், பண்டைய கல்வெட்டுகளில் கோபனா என்று அழைக்கப்பட்டது. இதன் அருகிலுள்ள கிராமங்களான பாலிகுண்டு மற்றும் கவிமாதா ஆகிய இடங்களில் பேரரசர் அசோகரின் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது. மௌரியப் பேரரசு முடிவுக்கு வந்த பின்னர் தக்காணத்தின் பல ஆட்சி பகுதிகள் குறிப்பிடத்தக்க வம்சாவளியினரின் கைகளிலிருந்து சாதவாகனர்களிடமும், மேலை கங்கர்களிடமும், போசளர்களிடமும், சாளுக்கியர்களிடமும் சென்றது. முதலாம் அமோகவர்சனால் (பொ.ச. 814-878) எழுதப்பட்ட ஆரம்பகால கன்னட இலக்கியமான 'கவிராஜமர்கா' என்ற நூலில், 'விதித மகா கோபனா நகரம்' என்ற வாக்கியத்தில் கொப்பாளைப் பற்றி குறிப்பிடுகிறார். [1][2]

கோயில் அமைப்பு

தொகு

கனகாசலபதி கோயில் விஜயநகரக் கட்டிடக்கலைக்கும் திராவிடக் கட்டிடக்கலைக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். இது இந்திய தொல்பொருள் துறையின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். [1][3] இக்கோயில் ஆளும் நிலப்பிரபுக்களான பாளையக்காரர்கள் அல்லது நாயக்கர்களால் கட்டப்பட்டது. கோயில் வளாகத்தில் விசாலமான மண்டபம், பிரம்மாண்டமான யாளி தூண்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூன்று நுழைவாயில்களில் நன்கு கட்டப்பட்ட கோபுரங்கள் காணப்படுகின்றன கோயிலில் உள்ள சிற்பங்களில் புராண உருவங்களும், கறுப்புக் கல்லில் மன்னர்களும், இராணிகளும் அடங்குவர். கோயிலின் பிரபலத்தை ஒரு உள்ளூர் பழமொழி இவ்வாறு கூறுகிறது: "கண்கள் உள்ளவர்கள் கனககிரியையும், கால்கள் உள்ளவர்கள் அம்பியையும் பார்க்க வேண்டும்." பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், பங்குனி பருவத்தில், கோயிலில் "கனகாசலபதி திருவிழா" என்ற பிரபலமான திருவிழா நடைபெற்கிறது. [1][2]

புகைப்படங்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Koppal". Karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  2. 2.0 2.1 "Places of Interest in Koppal district". Department of Tourism, Government of Karnataka. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  3. "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.