கன்னங்குறிச்சி

கன்னங்குறிச்சி (ஆங்கிலம்:Kannankurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

கன்னங்குறிச்சி
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

19,765 (2011)

3,801/km2 (9,845/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.20 சதுர கிலோமீட்டர்கள் (2.01 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kannankurichi

சேலம் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சி ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ளது. 1930 முதல் 1980 வரை உள்ள காலத்தில் திரைப்படம் எடுப்பதற்கு பிரபலமான கோட்டையாக திகழ்ந்த "மார்டன் தியேட்டர்" இப்பகுதியில் உள்ளது. மேலும் சுமார் 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் "காப்பி கியூரிங் ஒர்க்ஸ்" நிறுவனம் அமைந்துள்ளது. நீர்வள ஆதாரமாக "புதுஏரி மற்றும் மூக்கனேரி" என இரண்டு ஏரிகள் கன்னங்குறிச்சியில் அமையப்பெற்றுள்ளது.

அமைவிடம்

தொகு

கன்னங்குறிச்சி பேரூராட்சி சேலத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

5.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சேலம் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,022 வீடுகளும், 19,765 மக்கள்தொகையும், கொண்டது.[5]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. கன்னங்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
  5. Kannankurichi Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னங்குறிச்சி&oldid=2742291" இலிருந்து மீள்விக்கப்பட்டது