கமல்காட்
கமல்காட் (Kamalgad) (தாமரைக் கோட்டை) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள வய் என்னும் ஊரிலுள்ள ஒரு சதுரமான மலைக் கோட்டை ஆகும்.[1]
கமல்காட் கோட்டை | |
---|---|
कमळगड | |
பகுதி: மேற்குத் தொடர்ச்சி மலைகள் | |
சாத்தாரா மாவட்டம், மகாராட்டிரம் | |
கமல்காட் கோட்டை | |
ஆள்கூறுகள் | 17°58′02.2″N 73°44′42.7″E / 17.967278°N 73.745194°E |
வகை | மலைக்க் கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | மகாராஷ்டிர அரசு |
மக்கள் அனுமதி |
உண்டு |
நிலைமை | அழிவுற்ற நிலை |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
கற்கள் |
உயரம் | 4200 அடி. |
அமைவிடம்
தொகுஇது வய்க்கு மேற்கே பத்து மைல் (16 கி. மீ) தொலைவிலும், சாதாராவிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் ஆயத்தொலைவுகள் 18°05 'N, 74°00' E. இது கடல் மட்டத்திலிருந்து 4,511 அடி (1,375 மீ) உயரத்தில் உள்ளது.[2][3]
வரலாறு
தொகுகோட்டையை கட்டியவர் யார் என்று தெரியவில்லை.[4] மராத்தியர் காலத்தில், கமல்காட், பாண்டவ்காட் மற்றும் இப்பகுதியில் உள்ள பிற கோட்டைகள் பிஜாப்பூரைச் சேர்ந்த ஒருவரால் நிர்வகிக்கப்பட்டன[5] மராத்திய மொழியின் இப்போது செயலிழந்த மோடி எழுத்துகளில் எழுதப்பட்ட ஆரம்பகால ஆவணங்கள் கோட்டையை 'கட்டல்காட்' என்று குறிப்பிடுகின்றன.[6] இந்த ஆவணங்கள் குறித்து விரிவான ஆய்வு நடந்து வருகிறது. 1818 ஏப்ரலில், மேஜர் தாட்சர் தலைமையிலான பிரித்தானிய படைக்கு எதிராக கமல்காட் வீழ்ந்தது. ஆங்கிலேயர்களின் கீழ், இது போர்க் கைதிகளை தூக்கிலிட இக்கோட்டைப் பயன்படுத்தப்பட்டது.[7]
முக்கிய அம்சங்கள்
தொகுஇந்தக் கோட்டை 3 முதல் 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு தட்டையான நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளது. இது செங்குத்தான பாறைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த பாறையை ஆபத்தான முறையில் ஏறுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும். முன்னதாக, ஒரு செயற்கை சுரங்கப்பாதை மூலம் அணுகுமுறை இருந்தது. இது பாறையின் அடிவாரத்தில் தொடங்கி மேலே வெளிப்பட்டது. இப்போது இந்த சுரங்கப்பாதை ஒரு பெரிய பாறை விழுந்து மூடப்பட்டது. அது ஒருபோதும் அகற்றப்படவில்லை.[5]
புகைப்படங்கள்
தொகு-
கமல்காட் கோட்டையின் படிகள்
-
நுழைவாயில்
-
கோட்டையின் மேல்பகுதி
-
கமல்காட் கோட்டை
-
நடைபாதை
மகாபலேசுவரர் பீடபூமியின் காட்சி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kapadia, Harish (2004), Trek the Sahyadris, Indus Publications, பார்க்கப்பட்ட நாள் 2009-01-19
- ↑ Satara District Gazette
- ↑ Friends of forts website பரணிடப்பட்டது 2009-04-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Friends of forts website பரணிடப்பட்டது 2009-04-05 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 5.0 5.1 Gazetteer of the Bombay Presidency, Government Central Press, 1885, பார்க்கப்பட்ட நாள் 2009-01-19
- ↑ Description of a Trek to Pandavgad
- ↑ Description of a Trek to Pandavgad