கம்பன் விரைவுத் தொடருந்து

தென்னிந்திய ரயில்வே துறையினருக்கு சொந்தமான கம்பன் விரைவு வண்டி தமிழ்நாட்டின் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து காரைக்கால் தொடருந்து நிலையம் வரை தினம்தோறும் இரவு நேரத்தில் இயக்கப்படும் விரைவு தொடருந்தாகும். இந்த தொடருந்து 16175, 16176 ஆகிய எண்களில் இயங்கி வருகிறது. [1][2][3]

சென்னை எக்மோர்- காரைக்கால் கம்பன் விரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைExpress
முதல் சேவை23 ஏப்ரல் 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-04-23)
நடத்துனர்(கள்)தென்னிந்திய ரெயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்16
முடிவுகாரைக்கால் (KIK)
ஓடும் தூரம்361 km (224 mi)
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்16175/16176
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதன வசதி உள்ள ஈரடுக்கு, மூன்றடுக்கு உள்ள பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முன்பதிவில்லாத பொது பெட்டிகள்
இருக்கை வசதிஇல்லை
படுக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்சமையலறைப் பெட்டி இல்லை
காணும் வசதிகள்ஐ.சி.எப் பெட்டிகள்
பொழுதுபோக்கு வசதிகள்வசதி இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge
வேகம்42 km/h (26 mph), including halts
வழிகாட்டுக் குறிப்புப் படம்

பெயர்க்காரணம் தொகு

ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த மிகப்பெரும் கவிஞரான கம்பர் அவர்களின் நினைவாக இந்த தொடருந்திற்கு கம்பன் விரைவு தொடருந்து என பெயரிடப்பட்டுள்ளது. இவரே இராமாயணத்தை முதன்முதல் தமிழில் இயற்றியவர் ஆவார்.

வழித்தடமும் நிறுத்தங்களும் தொகு

தினந்தோறும் சென்னை எழும்பூர், காரைக்கால் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த தொடர்ந்து கீழ்க்கண்ட முக்கிய தொடருந்து நிலையங்களை கடந்து கடந்து இறுதி நிலையை அடைகிறது.

பயணப் பெட்டிகளின் தன்மையும் வடிவமைப்பும் தொகு

  • முதல் வகுப்பு ஈரடுக்கு குளிர்சாதனப் பெட்டி ஒன்று
  • இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இரண்டு
  • முன்பதிவு உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏழு
  • முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் ஆறு
  • அமரும் வசதி கொண்ட சரக்கு பெட்டிகள் இரண்டு
  • எளிதில் இணைக்கவும் அவிழ்க்கவும் கூடிய இரண்டு பெட்டிகள் (slip coaches)
  • இழுவை பெட்டி ஒன்று

என மொத்தம் 21 பெட்டிகளை கொண்டு இந்த கம்பன் விரைவு தொடருந்து அமைக்கப்பட்டுள்ளது சமையலறை பெட்டி வசதி இந்த தொடருந்தில் இல்லை. அதிகபட்சமாக 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த தொடருந்தின் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இழுவை இயந்திரம் தொகு

சென்னை முதல் விழுப்புரம் வரையிலான இருப்புப்பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் வரை ராயபுரம் லோகோ ஷெட் மூலம் பராமரிக்கப்படும் WAP-7 என்ற மின் இழுவை எந்திரத்தின் மூலம் இயக்கப்படுகிறது . விழுப்புரம் முதல் காரைக்கால் நிலையம் வரை பொன்மலையில் லோகோ ஷெட் மூலம் பராமரிக்கப்படும் WDM 3A என்ற டீசல் இழுவை எந்திரத்தின் மூலம் மூலம் இயக்கப்படுகிறது.


பெட்டிகள் பகிர்ந்தளிப்பு தொகு

கம்பன் விரைவு தொடருந்து பெட்டிகள் 16187, 16188 ஆகிய எண்களில் இயக்கப்படும் டீ கார்டன் விரைவு தொடருந்து, 56385/ 56386 என்ற எண்களில் இயக்கப்படும் எர்ணாகுளம் கோட்டயம் பயணிகள் தொடருந்து ஆகிய இரண்டு தொடருந்துகளுடன் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

வண்டி எண் 16175 தொகு

'கம்பன் விரைவு தொடருந்து வண்டியானது சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தினந்தோறும் மாலை 10.00 மணிக்கு இயக்கப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் சந்திப்பு, கடலூர் துறைமுகம் சந்திப்பு, சிதம்பரம்,சீர்காழி, மயிலாடுதுறை சந்திப்பு, பேராளம் சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, நாகப்பட்டினம் சந்திப்பு என 14 நிறுத்தங்களையும் 85 நிலையங்களையும் கடக்க மணிக்கு 42 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 8 மணி 25 நிமிடங்கள் பயணித்து காரைக்கால் நிலையத்தை மறுநாள் காலை 06.25 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 361 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் செங்கல்பட்டு முதல் விழுப்புரம் நிலையம் வரையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[4]

வண்டி எண் 16176 தொகு

மறுமார்க்கமாக 16176 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது காரைக்கால் நிலையத்திலிருந்து தினந்தோறும் மாலை 09.00 மணிக்கு இயக்கப்பட்டு 14 நிறுத்தங்களையும் 85 நிலையங்களையும் கடக்க மணிக்கு 44 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 8 மணி 15 நிமிடங்கள் பயணித்து சென்னை எழும்பூர் நிலையத்தை மறுநாள் காலை 05.15 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 361 கிலோ மீட்டர் ஆகும் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வரை இதன் பயணத்தின் போது இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Ayyappan, V (2 December 2015). "Railways cancel 17 trains due to floods in Chennai". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/chennai/Railways-cancel-17-trains-due-to-floods-in-Chennai/articleshow/50009753.cms. பார்த்த நாள்: 6 June 2018. 
  2. Chennai rain: Southern Railway cancels 12 trains leaving Egmore
  3. CANCELLATION OF TRAIN SERVICES ON 01.12.2015
  4. "Kamban Express".
  5. "Kamban Express".