சிதம்பரம் தொடருந்து நிலையம்
சிதம்பரம் தொடருந்து நிலையம் (Chidambaram railway station, நிலையக் குறியீடு:CDM) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது தென்னக இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. சிதம்பரம் தொடருந்து நிலையம் சென்னை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருப்பதி, வாரணாசி, மும்பை போன்ற பல நகரங்களை இணைக்கிறது.
சிதம்பரம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே பீடர் ரோடு, அண்ணாமலை நகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°23′28″N 79°42′12″E / 11.3912°N 79.7034°E | ||||
ஏற்றம் | 6 மீட்டர்கள் (20 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
இணைப்புக்கள் | பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | CDM | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
இடம் மற்றும் அமைப்பு
தொகுசிதம்பரம் தொடருந்து நிலையம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது. இதன் மிக அருகாமையில் சிதம்பரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் 175 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.
இரயில் தடங்கள்
தொகுதஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற இடங்களுடன் சென்னையை இணைக்கும் முக்கிய தொடருந்து நிலையமாக அமைந்துள்ளது.