கம்போடியாவின் தேசிய அருங்காட்சியகம்

கம்போடியாவின் நோம் பென்னில் உள்ள தொல்லியல் , வரலாற்று, கலை அருங்காட்சியகம்.

கம்போடியாவின் தேசிய அருங்காட்சியகம் (National Museum of Cambodia) என்பது கம்போடியாவின் கலாச்சார வரலாற்றின் மிகப்பெரிய அருங்காட்சியகமும் நாட்டின் முன்னணி வரலாற்று மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகமுமாகும். இது கம்போடியாவின் தலைநகரான நோம் பென்னில் அமைந்துள்ளது.[1]

கம்போடியாவின் தேசிய அருங்காட்சியகம்
សារមន្ទីរជាតិ
தேசிய அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில்
Map
நிறுவப்பட்டது1920கள்
அமைவிடம்பிரே ஆங் இங் சாலை (13), நோம் பென்
வகைகலை, தொல்லியல், வரலாறு
இயக்குனர்சாய் விசோத்
வலைத்தளம்National Museum Website

கண்ணோட்டம்

தொகு

இந்த அருங்காட்சியகத்தில் சிற்பம், கெமர் மட்பாண்டங்கள், வெண்கலங்கள், இனவியல் பொருட்கள் உட்பட உலகின் மிகப்பெரிய கெமர் கலை சேகரிப்புகள் உள்ளன. இதன் சேகரிப்பில் 14,000க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் முதல் கெமர் பேரரசுக்கு முன்னும், பின்னும், அதற்குப் பின்னரும், அதன் உயரத்தில் தாய்லாந்தில் இருந்து இன்றைய கம்போடியா முழுவதும், தெற்கு வியட்நாம் வரை பரவியது.

கம்போடியாவின் தேசிய அருங்காட்சியகம் மத்திய நோம் பென்னில் உள்ள பிரே ஆங் இங் சாலை 13 இல், அரண்மனையின் வடக்கேயும், வேல் பிரீக் மேன் சதுக்கத்தின் மேற்குப் பக்கமாகவும் அமைந்துள்ளது. வளாகத்திற்கு பார்வையாளர்களின் நுழைவாயில் தெருக்கள் 13 மற்றும் 178ன் மூலையில் உள்ளது. அருங்காட்சியகத்தின் மேற்குப் பகுதியில் அரச கழக நுண்கலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் கம்போடிய கலாச்சாரம் மற்றும் நுண்கலை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. கெமர் கோயில் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்ட அருங்காட்சியக கட்டிடங்கள் 1917-1924க்கும் இடையில் கட்டப்பட்டன. அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக 1920இல் திறக்கப்பட்டது. மேலும் இது 1968இல் புதுப்பிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கம்போடியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு, புரிதல் மற்றும் பாராட்டுதலை ஊக்குவிக்கிறது. அதன் பார்வையாளர்களுக்கு கல்வி மற்றும் ஊக்கத்தையும் அளிக்கிறது.[2]

வரலாறு

தொகு
 
தொழுநோயாளி மன்னன் எனப்பட்ட முதலாம் யசோவர்மனின் கல் சிலை
 
அருங்காட்சியகத்தின் முற்றம்

வரலாற்றாசிரியரும், கண்காணிப்பாளரும், எழுத்தாளருமான ஜார்ஜ் கிரோஸ்லியர் (1887-1945), பாரம்பரிய கம்போடிய கலைகள் மற்றும் கைவினைகளில் ஆர்வத்தின் மறுமலர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் சக்தியாக இருந்தார். மேலும், இன்று பாரம்பரியக் கட்டிடக்கலையாக இருக்கும் இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர். மேலும் இது அருங்காட்சியக அளவு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக குடியேற்றவிய பார்வையில் மறுபரிசீலனை செய்யப்பட்டது.

புதிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் 1917 ஆகஸ்ட் 15 அன்று நாட்டப்பட்டது. ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, முடிக்கப்பட்ட அருங்காட்சியகம் கம்போடியப் புத்தாண்டின் போது 1920 ஏப்ரல் 13 அன்று கம்போடிய அரசன், பிரான்சுவா-மரியஸ் பாடோயின், ஆட்சிப் பிரதிநிதியும் கம்போடிய கலைகளின் இயக்குநரும், அருங்காட்சியகத்தின் பாதுகாவலருமான எம். கிரோஸ்லியர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

 
கல்லாலான பிள்ளையார் சிலை
 
அருங்காட்சியகத்தின் உட்புறம்

புகைப்படத் தொகுப்பு

தொகு

உசாத்துணை

தொகு
  • Jessup, Helen Ibbitson, et al. (2006). Masterpieces of the National Museum of Cambodia. Norfolk, CT: Friends of Khmer Culture. 112 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99950-836-0-1, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99950-836-0-4
  • Khun, Samen (4th ed., revised 2013). The New Guide to the National Museum—Phnom Penh. Phnom Penh, Cambodia: Ariyathoar. 203 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99963-799-2-5 (for availability, email: museum_cam@camnet.com.kh)
  • Lenzi, Iola (2004). Museums of Southeast Asia. Singapore: Archipelago Press. pp. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-4068-96-9.

ஆதாரங்கள்

தொகு
  1. Brew, Melanie (2008-12-17). "I want to move to ... Chey Chumneas, Phnom Penh". பார்க்கப்பட்ட நாள் 2020-05-13.
  2. "Museum History". www.cambodiamuseum.info. Archived from the original on 2016-05-03. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
National Museum of Cambodia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.