கம்போடியாவின் புவியியல்

கம்போடியாவின் புவியியல் (Geography of Cambodia) என்பது கம்போடிய நாட்டின் புவியியல் கூறுகளை விரிவாக அலசி அறிகின்ற ஒரு பகுதியாகும். தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பகுதியில் காணப்படுகின்ற நாடுகளில் ஒன்று கம்போடியாவாகும். தாய்லாந்து , லாவோசு, வியட்நாம் தாய்லாந்து வளைகுடா முதலான நாடுகள் கம்போடியாவிற்கு எல்லைகளாக உள்ளன. 181,035 கி.மீ2 அல்லது 69,898 சதுர மைல்கள் கம்போடியாவின் பரப்பளவு ஆகும். இந்தோ இமாலய வெப்ப மண்டலப் பகுதியிலும்[1] இந்தோ சீன நேர வலையத்திலும் கம்போடியா அமைந்துள்ளது[2].

கம்போடியாவின் புவியியல்
கண்டம்ஆசியா
பகுதிதென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்13°00′N 105°00′E / 13.000°N 105.000°E / 13.000; 105.000
பரப்பளவுதரவரிசை 90th
 • மொத்தம்181,035 km2 (69,898 sq mi)
 • நிலம்97.50%
 • நீர்2.50%
கரையோரம்443 km (275 mi)
எல்லைகள்2,530 km (1,572 mi)
லாவோஸ் 555 km (345 mi)
தாய்லாந்து 817 km (508 mi)
வியட்நாம் 1,158 km (720 mi)
அதியுயர் புள்ளிPhnom Aural
1,810 m (5,938 அடி)
தாழ் புள்ளிதாய்லாந்து வளைகுடா
0 m (0 அடி)
மிக நீண்ட ஆறுமேக்கொங் ஆறு
486 km (302 mi)
பெரிய ஆறுதொன்லே சாப்
16,000 km2 (6,178 sq mi)
கம்போடியா இட அமைவியல்

தொன்லே சாப் வளைகுடா , மேகொங் ஆற்று வடிநிலங்கள் மற்றும் பாசாக் ஆற்றுச் சமவெளி உள்ளடங்கிய தாழ் பகுதி மத்திய சமவெளிகள் கம்போடியாவின் முக்கியப் புவியியல் தோற்றங்களாகும். வடக்கு, கிழக்கு, தென்மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளன. மத்திய தாழ்நிலங்கள் தென்கிழக்கில் வியட்நாம் வரை நீண்டுள்ளன. நாட்டின் தெற்கு மற்றும் தென் மேற்கு திசைகள் 443 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை தாய்லாந்து வளைகுடா வரையிலும் காணப்படுகிறது. கணிசமான மாங்குரோவ் வகை சதுப்பு நிலங்கள், தீபகற்பங்களால் இப்பகுதியை அடையாளப்படுத்துகின்றன, கம்போடிய கடல் எல்லைக்குள் ஐம்பதுக்கும் மேற்பட்ட தீவுகள் காணப்படுகின்றன. கடல் மட்டத்திற்கு மேல் 1810 மீட்டர் உயரமுள்ள (5,938 அடி) புனோம் ஆரல் என்ற மிக உயரமான சிகரம் இங்கு காணப்படுகிறது[3][4][5].

நிலப்பகுதியானது கம்போடியாவில் உள்ள மிக நீளமான, 486 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேகொங் ஆற்றினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விரிவான நீரோட்டங்கள், கொந்தளிப்பான பிரிவுகள் மற்றும் லாவோசின் ஆழமில்லாத நீட்சிகள் ஆகியனவற்றைக் கடந்த பிறகு மேகொங் ஆறு சிடெங் திரெங் மாகாணத்தில் நகருக்குள் நுழைகிறது. இங்கு ஆண்டு முழுவதும் அமைதியாகவும் பயணிக்கக் கூடிய வகையிலும் தாழ்நிலங்களில் அகன்றும் காணப்படுகிறது. மத்திய கம்போடியாவைச் சுற்றியுள்ள நன்செய் நிலங்களுக்கு மேகொங் ஆறு தண்ணீர் வழங்குகிறது மற்றும் தொன்லே சாப் ஏரியின் பருவகால இயல்பை கடுமையாக பாதிக்கிறது[6][7].

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தாழ்நிலங்களில் வசிக்கின்றனர், மேகொங் ஆறு ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப் பெருக்கின் போது அதிகமான அளவில் வண்டல் மண்ணை படியச்செய்து விவசாய நிலங்களை மிகவும் வளமாக்குகிறது. காடழிப்பும் அதிகமான சுரண்டலுமே சமீப காலமாக கம்போடியாவை பெரிதும் பாதித்து வருகிறது. காடுகள், தாழ் மலைத்தொடர்கள் மற்றும் உள்ளூர் சூழல்- அமைப்புப் பகுதிகள் இன்னும் தங்கள் இயற்கை ஆற்றலைத் தக்க வைத்து அருகிலுள்ள தென்கிழக்கு ஆசியாவின் நிலப்பகுதிகளுக்கும் காடுகளுக்கும் வாழ்வளிக்கின்றன. விரைவான மக்கள்தொகை வளர்ச்சி, கட்டுப்பாடற்ற உலகமயமாக்கல் மற்றும் சரியான தொடர்ச்சியற்ற நிர்வாகம் போன்ற காரணங்களால் பல தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கம்போடியாவில் குவிந்தும் பெருகியும் வருகின்றன.[8][9][10]

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் வெப்பமண்டல புல்வெளி மண்டலத்திற்குள் காணப்படுவதால், தெற்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகள் குளிர் காலத்திற்கு முன்னும் பின்னும் நிலையான மழையைப் பெறுகின்றன. தென் மேற்கு பருவமழை இந்த கிழக்குக்கோடி விளிம்புப் பகுதிகளின் நிலையைத் தீர்மானிக்கிறது. இப்பகுதிகள் வெப்பமண்டல பருவமழை காலநிலைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. நாடு முழுவதும் ஒப்பீட்டளவில் சம நீளம் கொண்ட இரண்டு பருவங்கள் காணப்படுகின்றன. வெப்பம் மற்றும் ஈரப்பதம் இரண்டும் பொதுவாக ஆண்டு முழுவதும் அதிகமாகவும் சீராகவும் காணப்படுகிறது.[11]

நிலவியல் வளர்ச்சி

தொகு

கோண்ட்வானா நிலப்பகுதியின் இடம் சரிந்த கண்ட தொகுதியாக தென்கிழக்கு ஆசியா காணப்படுகிறது. இத்தொகுதியில் தென் சீனா, இந்தோசீனா, தித்திவாங்சா மலைத்தொடர் மற்றும் மேற்கு பர்மா நிலத்தொகுதிகள் உள்ளங்கியுள்ளன. இப்பகுதிகள் தொல் ஊழிக்காலம் மற்றும் இடை உயிர் ஊழிக்கால சகாப்தத்தில் இணைந்து தென்கிழக்கு ஆசியக் கண்டப்பகுதியாக உருவாகியிருக்கலாம்.[12]

கார்பனிபெரசு காலம் அதாவது நிலக்கரி காலத்தில்[13] தென்-கிழக்கு ஆசியாவில் நிகழ்ந்த இந்தோ-சினியன் பகுதிகளின் மோதலால் நடப்பிலுள்ள தென் சீனா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் மண்ணியல் அமைப்பு உருவானதாக உறுதிப்படுத்தப்படுகிறது. டிரையாசிக் யுகத்தில் நிகழ்ந்த இந்தோ சீன விரிவாக்கம், பிளவுபட்ட வளைகுடாக்கள் உருவாதல் மற்றும் நில அமிழ்வுகள் முதலியனவற்றைத் தொடர்ந்து இந்தோ_சினியன் மலையாக்கச் செயல்முறை நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது [14][15][16]

மேற்கோள்கள்

தொகு
  1. "Land and Resource of Cambodia". Ministry of Rural Development. January 26, 2009. Archived from the original on நவம்பர் 27, 2016. பார்க்கப்பட்ட நாள் June 1, 2015.
  2. "ICT – Indochina Time (Standard Time)". Time and Date AS. பார்க்கப்பட்ட நாள் October 28, 2015.
  3. "Cambodia Study Area" (PDF). Regional Resource Centre for Asia and the Pacific(RRC.AP). பார்க்கப்பட்ட நாள் May 13, 2015.
  4. "Cambodia Environment Outlook - NATURAL AND ENVIRONMENTAL RESOURCES - Geography and Climate" (PDF). United Nations Environment Programme. Archived from the original (PDF) on ஜூலை 27, 2011. பார்க்கப்பட்ட நாள் May 17, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Cambodia". Google Books. பார்க்கப்பட்ட நாள் October 31, 2015.
  6. "Information Resources - Southern Part". Mekong River Commission. May 11, 2015. Archived from the original on மே 12, 2015. பார்க்கப்பட்ட நாள் May 14, 2015.
  7. "World Geographical Dictionary On Cambodia six distinct terrestrial eco‐regions in Cambodia have been recognized" (PDF). Water Hazard and Risk management. May 31, 2013. பார்க்கப்பட்ட நாள் June 26, 2015.
  8. "Rain Forests of the World". Lizas Reef. பார்க்கப்பட்ட நாள் May 13, 2015.
  9. "Environmental issues in Cambodia". Rainforests Mongabay. August 15, 2014. பார்க்கப்பட்ட நாள் May 13, 2015.
  10. "Officials Unable to Explain Mystery Ships". The Cambodia Daily. November 6, 2015. Archived from the original on ஜூன் 23, 2018. பார்க்கப்பட்ட நாள் November 6, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. Climate and Weather. Tourism of Cambodia. பார்க்கப்பட்ட நாள் May 18, 2015.
  12. "Late Palaeozoic and Mesozoic Ecosystems in SE Asia". Google Books. பார்க்கப்பட்ட நாள் May 13, 2015.
  13. "Late Palaeozoic–Early Mesozoic geological features of South China: Response to the Indosinian collision events in Southeast Asia" (PDF). Inria France. பார்க்கப்பட்ட நாள் May 13, 2015.
  14. The Geology of Thailand. பார்க்கப்பட்ட நாள் May 13, 2015. {{cite book}}: |website= ignored (help)
  15. "The Indo-Asian continental collision: A 3-D viscous model" (PDF). University of Missouri. Archived from the original (PDF) on ஏப்ரல் 2, 2015. பார்க்கப்பட்ட நாள் May 13, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. "Note sur la géologie du Cambodge et du Bas-Laos". Jubilothèque. Archived from the original on ஏப்ரல் 2, 2015. பார்க்கப்பட்ட நாள் May 13, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)