கயாரா கின்ஹன்னா ராய்
கயாரா கின்ஹன்னா ராய் (Kayyara Kinhanna Rai) ( ஜூன் 8, 1915 – ஆகஸ்ட் 9, 2015) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், ஆசிரியர் மற்றும் விவசாயி ஆவார்.[1][2][3][4][5][6]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுராய், ஜூன் 8, 1915 அன்று துக்கப்பா மற்றும் தெயக்க ராய் ஆகியோருக்கு பிறந்தார். ராய் முதலில் கன்னடத்தை பள்ளியில் கற்றுக்கொண்டார். பின்னர் அவர் தனது கையால் எழுதப்பட்ட, முதல் பத்திரிகையான சுஷீலாவை தனது 12 வயதில் வெளியிட்டார். மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட அவர் இந்தியாவின் சுதந்திர இயக்கத்திலும் பங்கேற்றார். இந்த காலகட்டத்தில் இவர் யுனியக்கா என்பவரை மணந்தார். மேலும் இவர்களுக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர்.
தொழில்
தொகுராய், மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பத்திரிகைத் துறையிலும் ஈடுபட்ட இவர் தனது எழுத்துக்களை சுவாபிமானா, மெட்ராஸ் மெயில் மற்றும் தி இந்து போன்ற செய்தித்தாள்களுக்கு வழங்கினார். இவர் 1969 இல் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றார்.[7] இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் கவிஞர், நாடகம், இலக்கணம் மற்றும் குழந்தைகள் பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது புகழ்பெற்ற கவிதைகளில் ஸ்ரீமுகம் ஐக்கியகானம், புனர்னவம், சேதனம் மற்றும் கோரகம் போன்றவை அடங்கும். இவர், கன்னடக் கவிஞரான கோவிந்த பை யின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். அவரது மற்ற முக்கியமான படைப்புகள் மலையாள சாகித்ய சாரித்ரே ( மலையாள இலக்கிய வரலாறு), இது பி.கே. பரமேஸ்வரன் நாயர் [8] மற்றும் சாகித்ய துருஷ்டி ஆகியோரின் அசல் படைப்பின் மொழிபெயர்ப்பாகும். இவருக்கு 2005 இல் மங்களூர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[9] மங்களூரில் நடைபெற்ற 66 வது அகில கன்னட இலக்கிய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அவரது சில கவிதைகள், கன்னடத் திரைப்படத்தில், திரைப்பாடல்களாக பயன்படுத்தப்பட்டன. அத் திரைப்படத்தின் பெயர் பதுவாரளி பாண்டவரு ( கன்னடம்: ಪಡುವಾರಳ್ಳಿ ಪಾಂಡವರು) ஆகும். இதை புட்டண்ணா கனகல் இயக்கியுள்ளார். 1980 இல் கசர்கோட்டில் கேரள சட்டப்பேரவைக்கான தேர்தலுக்காகவும் இவர் நின்றார். ஆனால் வெற்றிபெறவில்லை.[10]
ராய் ஒரு தீவிர விவசாயியாகவும் இருந்தார், மேலும் பாக்கு, இரப்பர் மற்றும் நெல் சாகுபடியில் தீவிரமாக இருந்தார்.
பிற்கால வாழ்வு
தொகுகாசர்கோடு மாவட்டத்தை கர்நாடகாவில் இணைப்பதற்கான பிரச்சாரகராக ராய் இருந்தார். அவரது முக்கிய இலக்குகளில் ஒன்று (சந்திரகிரி நதியின் வடக்குப்பகுதியில்) கர்நாடகத்துடன், காசர்கோடு மாவட்டத்தின் வடக்கு பகுதியை இணைப்பதாகும். இது மகாஜன் குழு அறிக்கையினை செயல்படுத்த எடுத்த முயற்சி ஆகும்.[11] இந்த இலக்கை அடைய 2002 ஆம் ஆண்டில் காசர்கோடு இணைப்பு நடவடிக்கை கவுன்சிலை (காசர்கோடு விலினீகரன கிரியா சமிதி) நிறுவினார். இந்த சபையின் குறிக்கோள்களை விவரிக்கும் ராய் , மாவட்டத்தில் உள்ள மொழியியல் சிறுபான்மையினர் மலையாளிகளுக்கோ அல்லது கேரள மாநிலத்துக்கோ எதிரானவர்கள் அல்ல எனவும், ஆனால் நீதி மகாஜன் ஆணைய அறிக்கையை அமல்படுத்தக் கோருகின்றனர் எனவும் விவாதித்தார். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்குப் பதிலாக இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், சி. அச்சுதா மேனன் மற்றும் பட்டம் தானு பிள்ளை போன்றோர் இது குறித்து பேசியுள்ளனர். [12]
ராய், கள்ளகலியாவிலுள்ள தனது இல்லத்தில், வயது மூப்பின் காரணமாக, தன் 100வது வயதில் இயற்கை மரணம் அடைந்தார். கள்ளகலியா எனப்படும் பகுதி, படியட்கா என்னுமிடத்தில் உள்ளது. இது, கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விருதுகள்
தொகுராய் பெற்ற சில விருதுகள் மற்றும் கௌரவங்கள் பின்வருமாறு:
- கர்நாடக சாகித்ய அகாதமி விருது - 1969
- சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது - 1969
- மணிப்பால் அகாதமி உயர் கல்வி நிறுவனம் வழங்கிய கௌரவ உறுப்பினர் விருது (1970) .
- தலைவர் - 67 வது அகில பாரத கன்னட இலக்கிய மாநாடு 1998 இல் மங்களூரில் நடைபெற்றது [4]
- இலக்கியத்தில் பெஜாவர் விருது - 2004
- அல்வாவின் நுடிஸ்ரி விருது - 2005
- ஆதர்ஷ ரத்னா விருது - 2006
- நடோஜா (மாநில ஆசிரியர்) விருது - 2006 [13]
- கர்நாடக எக்கிகாரனா (ஒருங்கிணைப்பு) விருது - 2007
- கன்னட இலக்கிய மன்றத்தின் கௌரவ உறுப்பினர் - 2009 [14]
- முதலாவது கர்நாடக காடினாட ரத்னா விருது [6]
- பம்பா விருது.
குறிப்புகள்
தொகு- ↑ "Kayyara Kinhanna Rai | World Tuluvas Network". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ Kayyar Kinhanna Rai – Rediff Pages
- ↑ "Kayyara Kinhanna Rai Felicitated by Vatal Nagaraj | News – The Dakshin Times". Archived from the original on 2013-04-10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ 4.0 4.1 "Kayyara Kinhanna Rai to be felicitated on June 8". The Hindu (Chennai, India). 6 June 2009 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411022429/http://www.hindu.com/2009/06/06/stories/2009060656550500.htm.
- ↑ "Kasargod: Sahitya Sammelan Invitation Handed Over to Poet, Dr Kayyara". Archived from the original on 2016-01-20. பார்க்கப்பட்ட நாள் 2020-01-08.
- ↑ 6.0 6.1 "Kasaragod meet to discuss border issues". The Hindu (Chennai, India). 31 July 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/kasaragod-meet-to-discuss-border-issues/article543948.ece.
- ↑ Awards presented to Kayyara Kinyanna Rai are mentioned by Staff Correspondent (25 January 2005). "Honorary doctorates for Sheni, Rai, Sathyu". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050406185045/http://www.hindu.com/2005/01/25/stories/2005012502470300.htm. பார்த்த நாள்: 18 April 2007.
- ↑ [1]சாகித்திய அகாதமி, Eng Flying Dolls By Various
- ↑ "Three stalwarts conferred with doctorates". Online Edition of the Deccan Herald, dated 25 January 2005. 2005, The Printers (Mysore) Private Ltd. Archived from the original on 13 September 2005. பார்க்கப்பட்ட நாள் 18 April 2007.
- ↑ "Statistical Report on the General Election, 1980 to the Legislative Assembly of Kerala" (PDF). Online Webpage of the Election Commission of India. Election Commission of India, New Delhi. Archived from the original (PDF) on 29 May 2005. பார்க்கப்பட்ட நாள் 19 April 2007.
- ↑ Decaan Herald News Service. "Political move on Mahajan Report sought". Online Edition of the Deccan Herald. 2005, The Printers (Mysore) Private Ltd. Archived from the original on 31 March 2006. பார்க்கப்பட்ட நாள் 19 April 2007.
- ↑ Formation of Kasargod Merger Action Council is mentioned by "Demand to implement Mahajan panel report". 2006, The Hindu இம் மூலத்தில் இருந்து 4 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/65uXsBoSI?url=http://www.hindu.com/2004/05/06/stories/2004050610690400.htm. பார்த்த நாள்: 19 April 2007.
- ↑ "Nadoja for Kinhanna Rai, Sarojini Mahishi, Ham. Pa. Na., two others" இம் மூலத்தில் இருந்து 7 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070707072331/http://www.hindu.com/2006/11/26/stories/2006112618510100.htm. பார்த்த நாள்: 15 December 2010.
- ↑ "Kinhanna Rai to receive fellowship". http://timesofindia.indiatimes.com/articleshow/4625587.cms.
வெளி இணைப்புகள்
தொகு- An interview recorded with Kayyar Kinhanna Rai பரணிடப்பட்டது 2016-03-08 at the வந்தவழி இயந்திரம் by Sampada on 13 January 2010.
- Hannu maaruvavana haadu (Nanjanagudina Rasabaale) – Famous Kannada poem by Kayyar Kinhanna Rai பரணிடப்பட்டது 2017-04-29 at the வந்தவழி இயந்திரம்.
- Karavaliya Mahakavi Kayyara – a writeup on Kayyara பரணிடப்பட்டது 2013-08-24 at Archive.today.