கரடி கதைகள்

கரடி கதைகள் (Karadi Tales), [4] என்பது இந்தியாவின் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீனமான குழந்தைகள் விரும்பும் நூல்களை வெளியிடும் ஒரு பதிப்பகத்தின் பெயராகும். இது முதன்மையாக பட புத்தகங்கள் மற்றும் ஒலி புத்தகங்களில் கவனம் செலுத்துகிறது. [5] குழந்தைகள் வெளியீட்டு உலகில் இந்திய கலாச்சாரத்திற்கான ஒரு இடத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இது 1996 இல் தொடங்கப்பட்டது. எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோர் ஒரு குழுவாகச் செயல்பட்டு இதனை உருவாக்கினார்கள். இது, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, கரடி கதைகள் தலைப்புகள் தொடர்ந்து இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது. பல தலைப்புகள் 100,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றுள்ளன. பெரும்பாலான தலைப்புகள் 20,000 பிரதிகள் கடந்துவிட்டன. ஒலி புத்தகங்கள், பிரபலங்களின் பட்டியலால் விவரிக்கப்பட்டு, பாரம்பரிய இந்திய ராகங்களில் அமைக்கப்பட்டன. இவை பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன. [6] [7]

கரடி கதைகள் நிறுவனம்
Karadi Tales Company Pvt Ltd.
நிறுவுகை1996
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்சி.பி.விசுவநாத்,
மேலாண்மை இயக்குனர்[1]

நாராயண் பரசுராம்,
படைப்பு இயக்குனர்[2]

சோபியா விசுவநாத்,
Creative Director[3]
தொழில்துறைபதிப்பகம், இணையம், தொலைக்காட்சி, இயங்குபடம்
உற்பத்திகள்பட்டக்கதைகள், ஒலி புத்தகங்கள், பலகை புத்தகங்கள், தொட்டுணர் புத்தகங்கள்
இணையத்தளம்www.karaditales.com

2010 இல், கரடி பாதை கல்வி நிறுவனம் நிறுவப்பட்டது. இது கரடி கதைகளின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.

கருத்து

தொகு

ஒரு கரடி, அதன் வாழ்க்கையிலிருந்து கதைகளைச் சொல்வது போல இதன் உள்ளடக்கங்கள் இருக்கின்றது.

கரடி ஒலி புத்தகத்தில், கரடியின் முதல் குரலாக, பாராட்டப்பட்ட இந்திய நடிகர் நசீருதீன் ஷா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. [8]

தொடர்கள்

தொகு

பட புத்தகங்கள்

தொகு

குழந்தைகளுக்கான கரடி கதைகள் பட புத்தகங்கள், பாலினம், சுற்றுச்சூழல் பற்றிய கதைகள், விலங்குகளின் கதைகள், இந்திய நாட்டுப்புறக் கதைகள், கருணை பற்றிய கதைகள் மற்றும் எண்ணுதல், வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் பற்றிய கருத்து புத்தகங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது.

திறமையான எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இக்கதைகள், வார்லி, கோண்ட் மற்றும் மதுபானி போன்ற இந்திய நாட்டுப்புற கலைகள் உட்பட பல்வேறு பாணிகளில் வண்ணமயமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டுள்ளது. [9]

நாட்டுப்புற கதைகள்

தொகு

இந்தத் தொடரில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாட்டுப்புறக் கதைகள் இடம்பெற்றுள்ளன. பிராந்தியத்தின் விளக்கப்படங்கள் மற்றும் இசை பிரதிநிதிகளுடன், இந்த கதைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் முழுமையான கலாச்சார அனுபவத்தை உருவாக்குகின்றன. ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய நாடுகளிலிருந்து இந்தத் தொடரின் ஆரம்ப நான்கு நாட்டுப்புறக் கதைகள் உஷா உதுப் அவர்களால் விவரிக்கப் பட்டன. இந்த நிறுவனத்தின், சூத்திரதாரர் மற்றும் கதைசொல்லி களம், தற்போது நந்திதா தாஸால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. [8]

இருமொழி பட புத்தகங்கள்

தொகு

குழந்தைகளிடையே பன்மொழி கற்றலை மேம்படுத்துவதற்காக இருமொழிகளான, ஆங்கிலம் / இந்தி மற்றும் ஆங்கிலம் / தமிழ் பதிப்புகளில் உலகம் முழுவதும் இருந்து பிரபலமான புத்தகங்கள் இந்த நிறுவனத்தின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிறந்த விற்பனையாளரான எரிக் கார்லின் எழுதிய 'தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்' புத்தகமும் இதில் அடங்கும்.

போர்டு புத்தகங்கள்

தொகு

குழந்தைகளுக்கான கரடி கதைகள் போர்டு புத்தகங்கள், துணிவுமிக்க பக்கங்கள், முக்கியமான கருத்துக்கள் மற்றும் துடிப்பான விளக்கப்படங்களை வழங்குகின்றன. அவர்களுக்கு இதுவரை ஒரு மழை நாள் என்று ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. [10]

ஒலி புத்தகங்கள்

தொகு

கரடி கதைகள் புராணம்

தொகு

கரடி கதைகள், தெய்வங்கள் மற்றும் அரக்கர்கள், மன்னர்கள் மற்றும் இராணிகளின் உலகத்தை உயிர்ப்பிக்கிறது. இந்திய புராணங்களின் கதைகள், விருது வென்ற மற்றும் புகழ்பெற்ற திரைப்பட, நாடக ஆளுமை கிரிஷ் கர்னாட், என்பவரால் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது. இதில், இவர், கரடி மற்றும் சூத்திரதார் வேடத்தில் நடித்துள்ளார். திரைக்கதை, பாடல் மற்றும் இயக்கம் சோபா விஸ்வநாத் செய்துள்ளார். குழந்தைகளை கலையுடன் தொடர்புகொள்வதற்காக தோட்டா தரணி தனது தனித்துவமான பாணியைச் செய்துள்ளார். கலையைப் போலவே, இசையும் குழந்தைத்தனமான பாடல்கள் வடிவமைப்பிலிருந்து விலகி இந்திய அழகியலை ஒருங்கிணைக்கிறது. பாராட்டப்பட்ட குழுவாக விளங்கும், 'திரி பிரதர்ஸ் & எ வயலின்' குழு, ஒலி புத்தகங்களுக்கான பாடல்களையும் பின்னணி இசையையும் உருவாக்கியுள்ளது.

மொழிபெயர்ப்பு உரிமைகள்

தொகு

கரடி கதைகள் பட புத்தகங்கள் உலகெங்கிலும் மொழிபெயர்ப்பு உரிமைகளை விற்றுள்ளன, தாய்லாந்து, சீனா, பஹாசா, ஜெர்மன், பிரஞ்சு, ஜப்பான், போர்த்துகீசியம், இத்தாலியன், நேபாளி மற்றும் எசுபானிஷ் மொழிகளில் பதிப்புகள் உள்ளன. [11]

மேற்கோள்கள்

தொகு
  1. "News Today - An English evening daily published from Chennai". Newstodaynet.com. 2010-01-13. Archived from the original on 27 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-07-22.
  2. "Narayan Parasuram | Narayan Parasuram Profile". SiliconIndia. 2011-05-18. பார்க்கப்பட்ட நாள் 2011-07-22.
  3. "Archived copy". Archived from the original on 3 May 2009. பார்க்கப்பட்ட நாள் 5 March 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Karadi Tales". karadi Tales.
  5. "Karadi Tales Shop Page". Karadi Tales.
  6. "About Us". Karadi Tales (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  7. "Artistes". Karadi Tales (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  8. 8.0 8.1 "Bookshelf - Karadi Tales - The Art of Story-telling for Children". India Travelogue. பார்க்கப்பட்ட நாள் 2011-07-22.
  9. "Picture Books". Karadi Tales (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.
  10. "Board Books". Karadi Tales (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.
  11. "FOREIGN RIGHTS". Karadi Tales (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Catalogues". Karadi Tales (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரடி_கதைகள்&oldid=3238428" இலிருந்து மீள்விக்கப்பட்டது