கரிஷ்மா தன்னா
கரிஷ்மா தன்னா (Karishma Tanna) 1983 டிசம்பர் 21 அன்று பிறந்த[1][3][4] ஒரு இந்திய திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர நடிகர் ஆவார். "குயின்கி சாஸ் பி கபி பாகு தி" , "நாகர்ஜுனா - ஏக் யோதா" மற்றும் "கயமத் கி ராத்" ஆகியவற்றில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர், 2014 இல் "பிக் பாஸ்" நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் இரண்டாமிடத்திலும் வந்துள்ளார். மேலும், "சாரா நாச்கே டிக்கா" (2008), "நாக் பாலியே" (2015) மற்றும் "ஜாலக் டிக்லா ஜா" போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
கரிஷ்மா தன்னா | |
---|---|
2017இல் கரிஷ்மா தன்னா | |
பிறப்பு | 21 திசம்பர் 1983[1] மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | நடிகர் விளம்பர நடிகர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். |
செயற்பாட்டுக் காலம் | 2001 முதல் தற்போது வரை |
துணைவர் | உபேன் பட்டேல் (2014-2016)[2] |
இவரது பாலிவுட் அறிமுகமான "கிராண்ட் மஸ்தி"க்கு பிறகு, டினா & லோலோ படத்தில் நடித்துள்ளார்.[5] அத்துடன் சஞ்சய் தத்தின் வாழ்க்கைத் திரைப்படமான' "சஞ்சூ", என்பதில் ரன்பீர் கபூருக்கு இணையாக நடித்துள்ளார்.[6] கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஏக்தா கபூரின் நாகினி 3 தொடரில்"நாகின் ரூகி" என்ற வேடத்தில் நடித்துள்ளார். ஸ்டார் பிளஸ்ஸில் ஒளிபரப்பான "கயாமத் கி ராத்" என்ற தொடரில் கௌரி / வைதேகி என்ற முன்னணி வேடங்களில் நடித்துள்ளார்.
சொந்த வாழ்க்கை
தொகுதன்னா குஜராத்திய குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளார்.[3] இவரது தாயாருடன் வாழ்கிறார் இவரது தந்தை அக்டோபர் 2012 இல் இறந்தார்[7] 2014 ஆம் ஆண்டில் நடிகர் உபேன் படேலை தன்னா "பிக் பாஸ்" வீட்டிற்குள் சந்தித்தார், பின்னர் அவர்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.[8][9] பிறகு, 2016 ல், அவர்கள் பிரிந்தனர்.[10]
தொழில்
தொகுதொலைக்காட்சி (2000 முதல் தற்போது வரை)
தொகுபாலாஜி டெலிபிலிம்ஸாரின் நெடுந்தொடரான "குயின்கி சாஸ் பி கபி பாகு தி" என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்புத் தொழிலை துவங்கினார்.[11] அத்தொடரில் (ஜூலை 2000 முதல் 2008 நவம்பர் வரை), இவர் இந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.[12][13] பாலாஜி டெலிபிலிம்ஸ் நாடக தயாரிப்பான " கஹி டூ மிலேங்கே" (நவம்பர் 2002 -2003 என்ற தொடரிலும் நடித்துள்ளார்..[14] "கோய் தில் மெயின் கே" (டிசம்பர் 2003 - பிப்ரவரி 2005) என்ற தொலைக்காட்சித் தொடரில் கிருத்திகா என்ற வேடத்தில் நடித்தார்.[15]
2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பப்பட்ட ஒரு மாயாஜால தொலைக்காட்சி நிகழ்ச்சியான "இந்தியாவின் மேஜிக் ஸ்டார்" என்பதில் பங்கேற்றார்.[16][17] "பால் வீர்" என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "ராணி பாரி" என்ற பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.[18] செப்டம்பர் 2014 இல் "கலர்" தொலைக்காட்சி நடத்திய பிரபலமான சர்ச்சைக்குரிய "பிக்பாஸ் 8 " நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளராகத் திகழ்ந்த தன்னா, அந்த வீட்டில் 4 மாதங்கள் கழித்து ஒரு இறுதிப் போட்டியாளராகவும் , இரண்டாவது இடத்திலும் வந்தார்.[19][20][21][22][23]
படங்களில் அறிமுகம் (2005 முதல் தற்போது வரை)
தொகுதன்னா "தோஸ்தி: பிரன்ட்ஸ் பாரெவெர்" என்ற பாலிவுட் படத்தில் "நந்தினி தப்பார் "என்ற பாத்திரத்தில் டிசம்பர் 2005இல் அறிமுகமானார். கன்னடத் திரையுலகில் "ஐ ஆம் சாரி மாத் பன்னி பிரீத்சோனா" என்ற படத்தின் மூலம் "சேத்தனா" பெயர் கொண்ட வேடத்தில் அறிமுகமானார். இப்படம் ஜூன் 2011இல் வெளிவந்தது.[24] செப்டம்பர் 2013 இல், "கிராண்ட் மஸ்தி" என்ற ஒரு பாலிவுட் பாலியல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இது 2004இல் வெளிவந்த "மஸ்தி" படத்தின் தொடர்ச்சியாகும்.[25] மேலும், "ஸ்டேபிரீ", "லைப்பாய்" (சோப்) மற்றும் "நிர்மா" உட்பட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் தன்னா நடித்துள்ளார்.[26]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Karishma Tanna Turns 31". International Business Times. 21 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
- ↑ "Karishma Tanna, Upen Patel get engaged on sets of 'Nach Baliye 7'". mid-day (in ஆங்கிலம்).
- ↑ 3.0 3.1 "TV's leggy lass Karishma Tanna turns a year older". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
- ↑ "TV Hottie Karishma Tanna Turns 32". News World India. 21 December 2015. Archived from the original on 21 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Karishma Tanna, Sunny Leone's film to release in 2016". The Indian Express. IANS. 29 December 2015. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
- ↑ "Karishma Tanna to be seen in Sanjay Dutt's biopic opposite Ranbir Kapoor - Times of India". The Times of India. http://m.timesofindia.com/tv/news/hindi/karishma-tanna-to-be-seen-in-sanjay-dutts-biopic-opposite-ranbir-kapoor/articleshow/57690334.cms.
- ↑ Mishra, Rashmi (17 December 2014). "Bigg Boss 8: Karishma Tanna finds support from Twitterati after Puneet Issar's daughter make outrageous comment!". India.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-13.
- ↑ "Karishma Tanna, Upen Patel get engaged on sets of 'Nach Baliye 7'". Mid Day. 13 May 2015. பார்க்கப்பட்ட நாள் 10 May 2016.
- ↑ "Of course marriage is on the cards: Upen and Karishma". Hindustan Times. 3 December 2015. பார்க்கப்பட்ட நாள் 28 April 2016.
- ↑ "Sometimes Two Wonderful People Are Not Meant To Be Together, Says Karishma Tanna". indiatimes.com. 31 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.
- ↑ "Bigg Boss 8: Karishma Tanna Says She Wants Overcome Fear of Vulnerability". Press Trust Of India. NDTV. 23 September 2014. http://movies.ndtv.com/television/bigg-boss-8-karishma-tanna-says-she-wants-overcome-fear-of-vulnerability-669757. பார்த்த நாள்: 9 October 2014.
- ↑ "#BiggBoss8: Karishma Tanna says she's not a jobless actor". DNA Webdesk. DNA. 22 September 2014. http://www.dnaindia.com/entertainment/report-biggboss8-karishma-tanna-says-she-s-not-a-jobless-actor-2020805. பார்த்த நாள்: 9 October 2014.
- ↑ Pandey, Geeta (2 May 2014). "Indian soap operas: Family affairs". BBC. http://www.bbc.com/culture/story/20140502-family-affair-indian-soap-operas. பார்த்த நாள்: 9 October 2014.
- ↑ "Sahara launches Balaji soap 'Kahin To Milenge'". Indiantelevision.com. © 2001- 2005 Indian Television Dot Com Pvt Ltd. Archived from the original on 18 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 October 2014.
- ↑ "Sony to debut Balaji's next 'Kkoi Dil Mein Hai'". indiantelevision.org.in. MUMBAI: Indian Television Dot Com Pvt Ltd. 29 November 2003. Archived from the original on 18 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
- ↑ Rodrigues, Collin (29 September 2011). "Karishma Tanna to be in a bold video". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 2 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141202071028/http://www.hindustantimes.com/entertainment/music/karishma-tanna-to-be-in-a-bold-video/article1-750772.aspx. பார்த்த நாள்: 26 November 2014.
- ↑ "International magician Franz Harary on Magic Star". Screen. The Indian Express. 22 July 2010. http://archive.indianexpress.com/news/international-magician-franz-harary-on-magic-star/649344/. பார்த்த நாள்: 26 November 2014.
- ↑ Maheshwri, Neha (14 April 2013). "After Karishma, now Shama quits Baal Veer". TNN. The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/tv/news/After-Karishma-now-Shama-quits-Baal-Veer/articleshow/19527679.cms. பார்த்த நாள்: 9 October 2014.
- ↑ Jhurani, Aarti (17 September 2014). "A rundown on Bigg Boss and what Salman Khan has in store with season eight's aviation theme". Thenational.ae. The National. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
- ↑ "Bigg Boss 8: Karishma Tanna Says She Wants Overcome Fear of Vulnerability". PTI. NDTV Convergence Limited 2014.. 23 September 2014. http://movies.ndtv.com/television/bigg-boss-8-karishma-tanna-says-she-wants-overcome-fear-of-vulnerability-669757. பார்த்த நாள்: 10 October 2014.
- ↑ "Bigg Boss 8: See how Karishma Tanna will take the style file up by a notch in the Bigg Boss House". daily.bhaskar.com. 21 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-09-21.
- ↑ "Bigg Boss 8: Karishma Tanna's controversies". timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2015.
- ↑ "Bigg Boss 8: My feelings for Upen were real says Karishma Tanna". பார்க்கப்பட்ட நாள் 2 February 2015.
- ↑ "Kannada Review: Refreshing movie 'I'm Sorry...'". in.com. IANS on IBN live on in.com. Archived from the original on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 9 October 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Mehta, Ankita (6 October 2013). "Box Office Collection: 'Grand Masti' Becomes First Adult Comedy Film to Surpass ₹100 Crore Mark in India". Ibtimes.co.in. International Business Times. பார்க்கப்பட்ட நாள் 9 October 2014.
- ↑ "Bigg Boss 8: See how Karishma Tanna will take the style file up by a notch in the Bigg Boss House". DB Corp ltd. 21 September 2014. பார்க்கப்பட்ட நாள் 25 October 2014.