கருப்புக் கொண்டை பட்டாணிக் குருவி

கருப்புக் கொண்டை பட்டாணிக் குருவி
உத்தராகண்டம் அல்மோரா மாவட்டம் பைன்செரில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரிபரசு
இனம்:
பெ. அட்டர்
துணையினம்:
மெலனோலோபசு
இருசொற் பெயரீடு
பெரிபரசு அட்டர்
வேறு பெயர்கள்
  • பெரிபாரசு மெலனோபோசு

கருப்புக் கொண்டை பட்டாணிக் குருவி (Black-crested tit) என்பது புள்ளி இறகு பட்டாணிக் குருவி என்றும் அழைக்கப்படுவது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும்.[1] இது முன்பு ஒரு சிற்றினமாக இருந்தது. ஆனால் இப்போது நிலக்கரி பட்டாணிக் குருவியின் துணையினமாகப் பரவலாகக் கருதப்படுகிறது.[2]

பரவலும் வாழிடமும்

தொகு

கருப்புக் கொண்டை பட்டாணிக் குருவி இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதிகளில் உள்ள ஊசியிலைக் காடுகள் மற்றும் மிதவெப்பக் காடுகளில், முக்கியமாக இமயமலை, ஆப்கானித்தான், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் பாக்கித்தான் முழுவதும் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல்

தொகு

கருப்புக் கொண்டை பட்டாணிக் குருவி முன்பு நிலக்கரி பட்டாணிக் குருவியின் நெருக்கமாகத் தொடர்புடைய சொந்த இனமாகக் கருதப்பட்டது. ஆனால் இவை இரண்டும் இப்போது ஒத்த குரல்கள் மற்றும் நடத்தையின் அடிப்படையில் பரவலாக ஒத்த இனமாகக் கருதப்படுகின்றன. இது மேற்கு நேபாளத்தில் உள்ள நிலக்கரி பட்டாணிக் குருவி துணையினமான பெ. அ. எமோடியசுடன் ஒன்றிணைக்கப்படுகிறது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு