கரையை தொடாத அலைகள்

பி. மாதவன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கரையைத் தொடாத அலைகள் இயக்குனர் பி. மாதவன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அருண், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது.

கரையைத் தொடாத அலைகள்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புஅருண் பிரசாத் மூவீஸ்
இசைசந்திரபோஸ்
நடிப்புஅருண்
இளவரசி
மனோரமா
வி. கே. ராமசாமி
கங்கா
கே. ஆர். விஜயா

கவுண்டமணி

செந்தில்
வெளியீடு1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நேரம் தவறுவதாலும், பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது எத்தகைய விளைவுகளைக் கொண்டு வரும் என்பதைக் காட்டும் கதை. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் கதாநாயகன் , எதிலும் நேரம் கடைபிடிப்பதில்லை. இதனால் பெற வேண்டிய வேலையை இழக்கிறான். சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாததால் காதலியையும் இழக்கிறான். இறுதியில் தன்னைக் காதலிக்கும் ஒரு பெண்ணை மணமுடிக்க எண்ணுகிறான். அவன் எண்ணம் நிறைவேறியதா என்று செல்லும் கதையின் முடிவு .

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. http://en.600024.com/movie/karaiyai-thodadha-alaigal/ பரணிடப்பட்டது 2011-06-01 at the வந்தவழி இயந்திரம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கரையை_தொடாத_அலைகள்&oldid=3825575" இலிருந்து மீள்விக்கப்பட்டது