தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட திண்டிவனம் வட்டத்தின், மரக்காணம் ஒன்றியத்தில் கர்ணாவூர் கிராமம் அமைந்துள்ளது[4]. இது ஜக்காம்பேட்டை[5] ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும். திண்டிவனத்திலிருந்து தெற்கே 3 கிமீ தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் கிழக்கே இறையானூர் கிராமமும், மேற்கே ஜக்காம்பேட்டை கிராமமும், தெற்கே மூர்த்திப்பேட்டை கிராமமும் உள்ளது.

கர்ணாவூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்கே உள்ள மாணவர்கள் திண்டிவனத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் உழவுத் தொழிலையே நம்பி வாழ்கிறார்கள். சிலர் நகரத்தில் கூலி வேலைக்கு செல்கின்றனர். படித்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்கள் பலர் சென்னைக்கு வேலைக்கு செல்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணாவூர்&oldid=3547946" இலிருந்து மீள்விக்கப்பட்டது