கலங்கரைவிளக்கம் மெற்றோ நிலையம்
கலங்கரைவிளக்கம் மெற்றோ நிலையம் (Lighthouse metro station) என்பது சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையமாகும். இந்த நிலையம் சென்னை மெட்ரோவின் 4வது பாதையில் உள்ள 30 நிலையங்களில் ஒன்றாகும். இது இப்பாதையில் உள்ள 12 நிலத்தடி நிலையங்களில் ஒன்றாகும். இது கலங்கரை விளக்கம் மற்றும் பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ இடையே உள்ள முனைய நிலையம் ஆகும். இந்த நிலையம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதிகளுக்குச் சேவையாற்றும் நிலையமாகும்.
சென்னை மெட்ரோ நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | காமராசர் சாலை, மைலாப்பூர், சென்னை, தமிழ்நாடு | ||||||||||
உரிமம் | சென்னை மெட்ரோ | ||||||||||
இயக்குபவர் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) | ||||||||||
தடங்கள் | ஆரஞ்சு வழித்தடம் | ||||||||||
நடைமேடை | தீவு நடைமேடை
நடைமேடை-1 → கலங்கரைவிளக்கம் நடைமேடை-2 → பூந்தமல்லி | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | நிலத்தடி, இரட்டைவழித்தடம் | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | கட்டுமானம் நடைபெறுகிறது | ||||||||||
மின்சாரமயம் | ஒற்றை முனை 25 கிவோ, 50 ஹெர்ட்சு மாற்று மின் உயர்மட்ட பாதை | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
வரலாறு
தொகுநிலையத்தின் கட்டுமானம் 2021-ல் தொடங்கியது. ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.[1]
கட்டுமானம்
தொகுநிலையம்
தொகுகலங்கரை விளக்கம் என்பது வழித்தடம் 4-ல் அமைந்துள்ள ஒரு நிலத்தடி மெற்றோ நிலையம். இது தரையிலிருந்து சுமார் 18 முதல் 20 மீட்டர் ஆழத்தில் கட்டப்படும். இது இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் காமராசர் சாலை சந்திப்பில், மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குக் கீழே கட்டப்படுகிறது.[2]
நிலைய அமைப்பு
தொகுகலங்கரை விளக்கம் மெற்றோ நிலையத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் இருக்கும். அதில் ஒன்று கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இருக்கும்.[2]
பயன்பாடு
தொகு2025ஆம் ஆண்டில், பயன்பாட்டிற்கு வரும் கலங்கரைவிளக்கம் மெற்றோ நிலையத்தை தினமும் சுமார் 5,000 பேர் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kodambakkam to Poonamalee Chennai Metro stretch to be operational by June 2024". The New Indian Express (Chennai: Express Publications). 13 August 2021. https://www.newindianexpress.com/cities/chennai/2021/aug/13/kodambakkam-to-poonamalee-chennai-metro-stretch-to-be-operational-by-june-2024-2344207.html.
- ↑ 2.0 2.1 Sekar, Sunitha (26 April 2019). "Soon, Marina on the Metro map". The Hindu (Chennai: Kasturi & Sons). https://www.thehindu.com/news/cities/chennai/soon-marina-to-be-on-the-metro-map/article26950476.ece. பார்த்த நாள்: 2 May 2019.
வெளி இணைப்புகள்
தொகு- நகர்ப்புற ரயில். நிகர - உலகில் உள்ள அனைத்து மெட்ரோ அமைப்புகளின் விளக்கங்கள், ஒவ்வொன்றும் அனைத்து நிலையங்களையும் காட்டும் திட்ட வரைபடத்துடன்.