பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ
பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ (Poonamallee Bypass metro station) என்பதுசென்னை மெட்ரோவின் ஆரஞ்சு பாதையில் உள்ள ஒரு மெற்றோ நிலையம் ஆகும். இது சென்னை மெற்றோ, பூந்தமல்லி புறவழிச்சாலை கலங்கரைவிளக்கம் நீட்டிப்பின் பாதை IV-ல் உள்ள 30 தொடருந்து நிலையங்களில் ஒன்றாகவும், 18 உயர்த்தப்பட்ட நிலையங்களில் ஒன்றாகவும் இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் பூந்தமல்லியின் சுற்றுப்புறங்களில் சேவை செய்கிறது.
சென்னை மெற்றோ நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | பூந்தமல்லி, சென்னை, தமிழ்நாடு 600056 இந்தியா | ||||||||||
உரிமம் | சென்னை மெட்ரோ | ||||||||||
இயக்குபவர் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) | ||||||||||
தடங்கள் | Orange Line | ||||||||||
நடைமேடை | தீவு நடைமேடை நடைமேடை-1 → கலங்கரை விளக்கம் மெற்றோ நிலையம் நடைமேடை-2 → பரந்தூர் வானூர்தி நிலைய மெற்றோ நிலையம் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்மட்ட, இரட்டைத் தடம் | ||||||||||
தரிப்பிடம் | இல்லை | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | கட்டுமான நிலையில் | ||||||||||
மின்சாரமயம் | ஒற்றை முனை 25 கிவா, 50 ஹெர்ட்சு மாற்று மின்சாரம் உயர்மட்டப் பாதை | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
வரலாறு
தொகுஇந்நிலையத்தின் கட்டுமானம் 2021-ல் தொடங்கியது. இந்த கட்டுமானத்திற்கு ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியளிக்கிறது.[1]
பணிமனை
தொகுபூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ நிலையத்தில் ஒரு பணிமனை இடம்பெறும். இது சென்னை மெற்றோவின் ஐந்து பணிமனைகளுள் ஒன்றாக இருக்கும்.[1] ₹ 2,250 மில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்த பணிமனையில் 24 தடங்கள் உள்ளன.[2] மேலும் இது தொடருந்துகளின் பழுது, பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மற்றும் பூந்தமல்லி-கலங்கரை விளக்கப் பகுதியில் இயக்கப்படும் தொடருந்துகளுக்குப் பிரத்தியேகமாக சேவை செய்யும்.[3] அடிச்சுமை ஏற்று, நிலைப்படுத்தச்செய்யக்கூடிய பாதையினை அமைப்பதற்குக் கூடுதல் ₹ 800 முதல் 900 மில்லியன் வரை செலவாகும் என்பதால், மூலதனச் செலவைச் சேமிப்பதற்காக இந்த நிலையம் நிலைப்படுத்தச்செய்யக்கூடிய பாதைகளைக் கொண்டிருக்கும்.[2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kodambakkam to Poonamalee Chennai Metro stretch to be operational by June 2024". The New Indian Express (Chennai: Express Publications). 13 August 2021. https://www.newindianexpress.com/cities/chennai/2021/aug/13/kodambakkam-to-poonamalee-chennai-metro-stretch-to-be-operational-by-june-2024-2344207.html.
- ↑ 2.0 2.1 "CMRL may decide to build ballast tracks at Poonamallee depot". The Hindu (Chennai: Kasturi & Sons). 28 January 2021. https://www.thehindu.com/news/cities/chennai/cmrl-may-go-for-ballast-tracks-at-poonamalle-depot/article33679919.ece.
- ↑ "Metro finalises contractor for phase II's Poonamallee depot". The Hindu (Chennai: Kasturi & Sons). 24 September 2021. https://www.thehindu.com/news/cities/chennai/metro-finalises-contractor-for-phase-iis-poonamallee-depot/article36640878.ece.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- UrbanRail.Net – descriptions of all metro systems in the world, each with a schematic map showing all stations.