ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

AIIBMap.svg

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank, AIIB) சீனாவால் முன்மொழியப்பட்ட பன்னாட்டு நிதி நிறுவனமாகும். இது ஆசிய வலய நாடுகளுக்கு இடையேயான, உள்கட்டமைப்பு நிதி உதவிகளை வழங்கும் பன்முக வளர்ச்சி வங்கியாகும். இதில் சீனா மட்டுமல்லாது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என மொத்தம் 21 நாடுகள் உறுப்பினர்கள் ஆவர். வளரும் நாடுகளின் கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்ற இது போன்ற புதிய நிறுவனங்களை வரவேற்பதாக உலக வங்கி[1] மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர்கள் கூறியுள்ளனர்.[2]பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட இதன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் $ 100 பில்லியன் ஆகும்.

நோக்கம்தொகு

ஆசியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளியல்நிலை ஒன்றிணைப்பை ஊக்குவிப்பதும் சீன மக்கள் குடியரசிற்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையே கூட்டுறவை வளர்ப்பதும் ஆகும்.

வரலாறுதொகு

அக்டோபர் 2, 2013இல் இந்தோனேசியாவின் அரசுத்தலைவர் சுசீலோ பாம்பாங் யுதயோனோவுடன் ஜகார்த்தாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது சீன அதிபர் சீ சின்பிங் ஆசியாவின் உளகட்டமைப்பு முதலீட்டிற்கான வங்கிக்கான முன்மொழிவை அறிவித்தார். இதனையடுத்து சீனப் பன்னாட்டு முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் ஜின் லிகுன் முன்னேற்பாடு அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் 24, 2014 அன்று வங்காளதேசம், புரூணை, கம்போடியா, சீன மக்கள் குடியரசு, இந்தியா, கசக்ஸ்தான், குவைத், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியான்மர், நேபாளம், ஓமான், பாக்கித்தான், பிலிப்பீன்சு, கத்தார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, உசுபெக்கிசுத்தான் and வியட்நாம் இதில் முன்னோட்ட உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்து 2015இல் பட்டய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இறுதி உடன்பாடு காண்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015இன் இறுதியில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி செயற்படத் தொடங்கும் என மதிப்பிடப்படுகிறது. [3]

வரலாறுதொகு

அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஆதிக்கம் நிறைந்த உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுக்கு மாற்றாக புதிய வங்கியைத் தொடங்க 2013ல் சீனா முன்மொழிந்தது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 24, 2014 அன்று சீன தலைநகர் பீஜிங்கில் வங்கி அமைப்பதற்கான உடன்பாட்டில் 21 நாடுகளின் சார்பாளர்கள் கையெழுத்திட்டனர்.

உறுப்பினர் நாடுகள் சேர்ந்தது
  வங்காளதேசம் 2014
  புரூணை 2014
  கம்போடியா 2014
  சீனா 2014
  இந்தியா 2014
  கசக்ஸ்தான் 2014
  குவைத் 2014
  லாவோஸ் 2014
  மலேசியா 2014
  மங்கோலியா 2014
  மியான்மர் 2014
  நேபாளம் 2014
  ஓமான் 2014
  பாக்கித்தான் 2014
  பிலிப்பீன்சு 2014
  கத்தார் 2014
  சிங்கப்பூர் 2014
  இலங்கை 2014
  தாய்லாந்து 2014
  உசுபெக்கிசுத்தான் 2014
  வியட்நாம் 2014

மேற்கோள்கள்தொகு

  1. 'World Bank welcomes China-led infrastructure bank', Reuters, July 8, 2014.
  2. David Pilling, 'Japanese head of ADB welcomes rival Chinese fund', The Financial Times, May 29, 2014.
  3. "பெய்ஜிங்கில் கையெழுத்திடப்பட்ட 21 நாடுகளில் ஆசியா உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அமைக்க முடிவு". people.cn (24 அக்டோபர் 2014). பார்த்த நாள் 26 அக்டோபர் 2014. (சீன மொழியில்)

வெளி இணைப்புகள்தொகு