கல்லாக்கோட்டை பாளையம்

பாளையக்காரர்


கல்லாக்கோட்டை பாளையம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வக்கோட்டை, நம்புரான்பட்டி பகுதியில் "தின்னக்குளம்" என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட பாளையம் ஆகும். இது சிங்கப்புலியார் என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.[1]

வரலாறு தொகு

1846 ஆம் ஆண்டு விஜயரகுநாத முத்துவிஜய சிங்கபுலியார் என்பவர் ஜமீன்தாராக இருந்தார்.[2] 1879 ஆம் ஆண்டு, விஜயரகுநாத அரங்கசாமி சிங்கபுலியார் அவர்களின் கீழ் 17 கிராமங்கள் இருந்தன (16481 ஏக்கர் பரப்பளவு). அப்பொழுது அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 1701 ரூபாய் 13 அணா 6 பைசா ஆகும். இவர்களின் அரண்மனை தின்னகுலம் கிராமத்தில் இருந்தது, இப்பொழுது முழுமையாக சிதைந்து காணப்படுகிறது. இவர்களுக்கு என்று தனி கொடியை மற்றும் தனி சின்னம் இருந்தது. இவர்களுடைய சின்னத்தில் சிங்கம் மற்றும் புலியும், கொடியில் முருக கடவுளின் வேல் மற்றும் மயில் கொண்டுள்ளது.[3][4]

புதுக்கோட்டை அரச குடும்பத்துடன் திருமண உறவு மூலம் கந்தர்வகோட்டை ஜமீன்கள் இணைந்திருந்தார்கள்.[5]

முடிவுரை தொகு

கல்லாக்கொட்டை ஜமீன் பகுதியானது சுதந்திரத்திற்கு பிறகு கலைக்கப்பட்டு கந்தர்வகோட்டை வட்டமாக மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாக்கோட்டை_பாளையம்&oldid=3769681" இலிருந்து மீள்விக்கப்பட்டது