கவந்த் விழா
கவந்த் திருவிழா என்பது சோட்டா உதய்பூர் பகுதியின் ரத்வா பழங்குடியினரின் திருவிழாவாகும். இது ஹோலி பண்டிகை முடிந்தபின் உடனடியாக கவந்த் கிராமத்தில் நடைபெறுகிறது. [1]
கவந்த் விழா | |
---|---|
ரத்வா பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய உடையில் கவந்த் விழாவில் | |
வகை | பழங்குடியினர் திருவிழா |
காலப்பகுதி | வருடத்திற்கு ஒரு முறை |
அமைவிடம்(கள்) | கவந்த் கிராமம், சோட்டா உதய்பூர் , குசராத்து |
ஆள்கூறுகள் | 22°05′33″N 74°03′23″E / 22.09259°N 74.05648°E |
நாடு | இந்தியா |
பங்கேற்பவர்கள் | ரத்வா பழங்குடியினர் |
கவந்த் திருவிழாவில் பழங்குடி இளைஞர்கள் செவிப்பறைகள் மற்றும் பிற இசைக்கருவிகளுடன் நடனமாடுவதைக் காணலாம். பழங்குடியின ஆண்களும் பெண்களும் பறவைகள் மீதுள்ள தங்களின் அன்பை வெளிப்படுத்த தங்கள் தலையில் மயிலிறகுகள்கொண்ட பூங்கொத்தை அணிந்துகொள்கின்றனர்.
நேரம் மற்றும் இடம்
தொகுரத்வா பழங்குடியினரின் சொந்த ஊரான சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள கவந்த் கிராமத்தில் ஹோலி நாள் முடிந்த பின் ஐந்தாவது நாளில் கவந்த் நடைபெறுகிறது.இவ்விடம் வதோதராவில் இருந்து 114 கி.மீ. தொலைவில் உள்ளது. [2]
விழா
தொகுஇருபத்தைந்து வெவ்வேறு கிராமங்களிலிருந்தும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலிருந்தும் ஏராளமான பழங்குடியின மக்கள் வண்ணமயமான உடைகளில் இவ்விழாவிற்கு வருகை புரிகின்றனர். பழங்குடி கலாச்சாரத்தை ரசிக்க பிற நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இவ்விழாவிற்கு வருகிறார்கள். [1][3]
ரத்வா பழங்குடியின மக்கள் புதர்கள் சூழ்ந்த வனப்பகுதியில் மூங்கில், புல்-இலைகள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். மண் மற்றும் சாணம் தடவிய சுவர்களில் பித்தோராவின் படங்களை இவர்கள் வரைகின்றனர். இந்த பித்தோராக்களை வரைவதன் மூலம் கடவுள் அவர்களின் வீட்டில் வசிக்கிறார் என்ற நம்பிக்கை அம்மக்களுக்கு இருந்துவருகிறது.[3]
இதேபோன்ற ஓவியங்களை விழாவில் பங்குபெறும் இளைஞர்கள் தங்கள் உடல் முழுவதும் வெள்ளை புள்ளிகளுடன் வரைந்துகொள்கிறார்கள். மேலும் மயில் இறகுகள், வண்ணமயமான மூங்கில் தொப்பிகள், கழுத்தில் எருதுவடிவ குக்ராவையும் அணிந்து கொள்கின்றனர். பின் செவிப்பறைகள் இசைக்கப்படுகின்றன. இளைஞர்கள் அவ்விசைக்கேற்ப நடனமாடி இளம் பெண்களைக் கவர்கின்றனர். பழங்குடியினர்கள் தங்கள் சமூக வாழ்க்கையின் முக்கிய அங்கமான இந்த விழாவில் திருமணமும் செய்து கொள்கிறார்கள்.[2]
விழாவில், பழங்குடியினர் குதிரைகளின் களிமண் சிலைகளையும் மற்ற தெய்வங்களின் சிலைகளையும் கிராமத்திற்கு வெளியே உள்ள தெய்வத்தின் சன்னதியில் வைப்பார்கள். அவ்வாறு செய்வதால் கடவுள் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறார்கள். கவந்த் விழாவில் இசை மற்றும் நடனம் சிறப்பு மிக்கது. ஜோடியா பாவா, தோல் மற்றும் பிஹோ போன்ற பல்வேறு இசைக்கருவிகளால் திருவிழாக் காட்சி உற்சாகமூட்டப்படுகிறது. கவந்த் விழா பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் ஒரு கண்காட்சியாகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kwant Fair". www.gujaratsamachar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
- ↑ 2.0 2.1 2.2 Kalariya, Ashok (2019–20). ગુજરાતના લોકોત્સવો અને મેળા. Gandhinagar: Directorate of Information/ GujaratState. pp. 46–47.
- ↑ 3.0 3.1 "બારમી માર્ચે ક્વાંટમાં આદિવાસીઓનો ગેર મેળો યોજાશે, દેશ-વિદેશમાંથી લોકો આ મેળામાં આવશે". Gujarati News (in குஜராத்தி). 2020-03-07. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.