காக்களூர் (ஆங்கில மொழி: Kakkalur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] காக்களூரில், ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று உள்ளது.[4] காக்களூரில் பலவித தொழிற்சாலைகள் இயங்கும் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது.

காக்களூர்
Kakkalur
காக்களூர் Kakkalur is located in தமிழ் நாடு
காக்களூர் Kakkalur
காக்களூர்
Kakkalur
காக்களூர், திருவள்ளூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°07′36″N 79°55′08″E / 13.1267°N 79.9188°E / 13.1267; 79.9188
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம்
ஏற்றம்
101 m (331 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
602003
அருகிலுள்ள ஊர்கள்திருவள்ளூர், புட்லூர், தொழுவூர்
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிதிருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கே. ஜெயக்குமார்
சட்டமன்ற உறுப்பினர்வி. ஜி. ராஜேந்திரன்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 101 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காக்களூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°07′36″N 79°55′08″E / 13.1267°N 79.9188°E / 13.1267; 79.9188 ஆகும். காக்களூர் கிராமமானது காக்களூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்டதாகும். திருவள்ளூர், புட்லூர், தொழுவூர் ஆகியவை காக்களூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

காக்களூருக்கு அருகில் காக்களூர் சிவா விஷ்ணு கோயில் ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.

காக்களூர் பகுதியானது, திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் வி. ஜி. ராஜேந்திரன் ஆவார். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கே. ஜெயக்குமார், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Tamil Nadu (India) Legislature Legislative Council (1978). Debates, Official Report. Legislative Council Department.
  2. Kamala Krishnamoorthy (2022-03-29). Aanmeega Payanangal. Pustaka Digital Media.
  3. "Torrential rain cripples MSME operations in Chennai". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). 2021-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  4. "Aavin's plant for fermented products getting ready at Kakkalur". The Hindu (in Indian English). 2022-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்களூர்&oldid=3755954" இலிருந்து மீள்விக்கப்பட்டது