காச்சிகுடா, ஐதராபாத்
காச்சிகுடா (Kachiguda) இந்தியாவின் தெலங்கானா மாநிலத் தலைநகரமான ஐதராபாத் பெருநகரத்தின் பழமையான பகுதியாகும். ஐதராபாத் நகரத்தின் மூன்றாவது பெரிய தொடருந்து நிலையம் காச்சிகுடா தொடருந்து நிலையம் ஆகும். இத்தொடருந்து நிலையத்தை ஐதராபாத் நிசாம் கட்டினார்.
காச்சிகுடா
கச்சேகுடா | |
---|---|
தெலுங்கானா மாநிலத்தில் காச்சிகுடாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 17°23′29″N 78°29′43″E / 17.391269°N 78.49524°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
மாவட்டம் | ஐதராபாத் |
பெருநகரம் | ஐதராபாத் |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத் மாநகராட்சி |
Languages | |
• Official | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 500 027 |
மக்களவைத் தொகுதி | செகந்திராபாத் |
சட்டமன்றத் தொகுதி | அம்பர்பேட் |
Planning agency | GHMC |
பெயர்க்காரணம்
தொகுகாச்சிகுடா தொடருந்து நிலையப் பகுதியில் காச்சி இன மக்கள் அதிகம் வாழ்வதால் இப்பகுதிக்கு காச்சிகுடா எனப்பெயராயிற்று. [1]
பொருளாதாரம்
தொகுகாச்சிகுடா பகுதியில் மார்வாரிகள், ஜெயினர்கள், குஜராத்திகள் மற்றும் தெலுங்கு வணிகர்களின் பெரிய வணிக வளாகங்கள் அதிகம் உள்ளது. ஷா மியான் மசூதி இங்குள்ளது.[2]
போக்குவரத்து
தொகுகாச்சிகுடா தொடருந்து நிலையம், வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களுடன இருப்புப் பாதை மூலம் இணைக்கிறது. தெலங்கான அரசு சாலைப்போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள், மாநிலத்திற்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kachiguda Railway Station: Hundred years of history and connectivity". தி டெக்கன் குரோனிக்கள். http://www.deccanchronicle.com/lifestyle/travel/020616/hundred-years-of-history-and-connectivity.html. பார்த்த நாள்: 8 July 2016.
- ↑ "Masjid Shah Miyan". Fullhyd.com. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.