காடில்வெசுகி காட்டுச்சில்லை

பறவை இனம்
காடில்வெசுகி காட்டுச்சில்லை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எம்பெரிசிடே
பேரினம்:
எம்பெரிசா
இனம்:
எ. காடில்வெசுகி
இருசொற் பெயரீடு
எம்பெரிசா காடில்வெசுகி
கசனோவ்ஸ்கி, 1874

காடில்வெசுகி காட்டுச்சில்லை (Godlewski's bunting)(எம்பெரிசா காடில்வெசுகி) என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது போலந்து பறவைச் சேகரிப்பாளர் விக்டர் காடில்வெசுகியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் பெற்ற, பறவை மாதிரியின் அடிப்படையில் இது டாக்சானோவ்சுகியால் விவரிக்கப்பட்டது.

பரவலும் வாழ்விடமும்

தொகு

காடில்வெசுகி காட்டுச்சில்லை சீனா, பாக்கித்தான், இந்தியா, கஜகஸ்தான், மங்கோலியா, மியான்மர் மற்றும் உருசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

விளக்கம்

தொகு

காடில்வெசுகி காட்டுச்சில்லையின் முதிர்ச்சியடைந்த பறவையின் தலை, கழுத்து மற்றும் மார்பகம் முழுவதும் சாம்பல் நிறத்திலும், பழுப்பு அல்லது கருப்பு கண் பட்டையுடன், "மீசை" மற்றும் தலை காணப்படும். இதன் அடிப்பகுதி மற்றும் பிடரி ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதன் பின்புறம் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளது. வால் மேலே கருப்பு மற்றும் ஆரஞ்சு மற்றும் கீழே வெள்ளை நிறத்தில் உள்ளது. சிட்டுக்குருவி போன்ற அலகினைக் கொண்டுள்ளது. இதன் மேற்புறம் கருப்பாகவும் கீழே வெளிர் நிறத்திலும், கால்களும் பாதங்களும் இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

வாழ்விடம்

தொகு

காடில்வெசுகி காட்டுச்சில்லையின் இயற்கை வாழ்விடம் மிதமான புதர் நிலமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Emberiza godlewskii". IUCN Red List of Threatened Species 2018: e.T22720899A132004461. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22720899A132004461.en. https://www.iucnredlist.org/species/22720899/132004461. பார்த்த நாள்: 12 November 2021.