காட்டுநாயக்கர்
காட்டுநாயக்கர் என்போர் ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளை பூர்விகமாகக் கொண்ட பழங்குடியினர் ஆவர். இவர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் மலை பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் பரவளாக பரவி வாழ்கிறார்கள.கன்னடம் கலந்த தெலுங்கு மொழியை இவர்கள் தங்கள் மொழியாக கொண்டுள்ளனர்.
இவர்கள் ஒரிடத்திலும் நிலையாக இருப்பதில்லை. ஓரிடத்தில் தங்கி, அங்குள்ள பொருட்கள் தீர்ந்தால், கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்கின்றனர். இவர்கள் தேனையும் காட்டுக்கிழங்குகளையும் காய்களையும் உண்கின்றனர். இறைச்சியும் சாப்பிடுகின்றனர். அம்பையும் வில்லையும் பயன்படுத்தி காட்டில் உள்ள ஆடுகளையும் கிளிகளையும் வேட்டையாடுகின்றனர்.
யாரி, மஸ்திதைவம், ஹெந்தப்பின்(முத்தப்பன்) என்ற பெயர்களைக் கொண்ட குல தெய்வங்களை வணங்குகின்றனர். இந்தக் கடவுளர்க்கு சிலைகளோ, கோயில்களோ இல்லை.
சான்றுகள்
இணைப்புகள்
- http://www.mathrubhumi.com/wayanad/news/918569-localnews-Wayanad.html[தொடர்பிழந்த இணைப்பு]
- http://lsgkerala.in/meenangadipanchayat/history/ பரணிடப்பட்டது 2014-10-24 at the வந்தவழி இயந்திரம்
- http://kif.gov.in/ml/index.php?option=comcontent&task=view&id=201&Itemid=29[தொடர்பிழந்த இணைப்பு]
கேரளத்தில் ஆதிவாசிகள் |
---|
• அடியர் • அரணாடர் • ஆளார் • எரவள்ளர் • இருளர் • காடர் • கனலாடி • காணிக்காரர் • கரவழி • கரிம்பாலன் • காட்டுநாயக்கர் • கொச்சுவேலன் • கொறகர் • குண்டுவடியர் • குறிச்யர் • குறுமர் • சிங்கத்தான் • செறவர் • மலையரயன் • மலைக்காரன் • மலைகுறவன் • மலைமலசர் • மலைப்பண்டாரம் • மலைபணிக்கர் • மலைசர் • மலைவேடர் • மலைவேட்டுவர் • மலையடியர் • மலையாளர் • மலையர் • மண்ணான் • மறாட்டி • மாவிலர் • முடுகர் • முள்ளுவக்குறுமன் • முதுவான் • நாயாடி • பளியர் • பணியர் • பதியர் • உரிடவர் • ஊராளிக்குறுமர் • உள்ளாடர் • தச்சனாடன் மூப்பன் • விழவர் • சோலநாயக்கர் |