காடர் (Kadar) எனப்படுவோர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வாழுகின்ற ஒரு பழங்குடியினர் ஆவர். இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஆனைமலை, பரம்பிக்குளம், கங்கடவு, பெரும்பாறை போன்ற இடங்களிலும் மற்றும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் மொழி கன்னட மொழிக் கலப்புள்ளது.

காடர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கேரளா[1]
மொழி(கள்)
காடர் மொழி[1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்

இவர்களின் உடலமைப்பினை கொண்டு இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து, இந்தியா வந்திருக்கக் கூடும் என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். எட்கர் தர்ஸ்டன் எனும் மானிடவியலாளர் இவர்களை நீக்ராய்ட் இனமாக வகைப்படுத்துகிறார்.

கேரள மாநிலத்தின், கொச்சியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஏலமலைப் பகுதி தென்கேரள மலைப்பகுதி மற்றும் தமிழகத்தில் கோவை மாவட்ட ஆனைமலையின் பிரமன்கடவு, பன்னிக்குழி, சவமலை, நெடுங்குன்றம், கருங்குன்றம், அயன்குளம், வாகைமலை போன்ற இடங்களில் பலநூறாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.[சான்று தேவை] இவர்களின் வாழ்வாதாரமாக இருப்பது வேட்டையாடுதலும், தேன் சேகரிப்பதும் ஆகும்.[2][3]

உசாத்துணை

தொகு

அ.கா.பெருமாள். (2005). தமிழகப் பழங்குடிகள். மனோரமா இயர்புக் 2005, 302-318.


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

  1. 1.0 1.1 "Kadar". Ethnologue. 2016-02-20. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
  2. "Data" (PDF). egyankosh.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
  3. by totem (2014-12-18). "Tribal Communities of Kerala | totem". Totemngo.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடர்&oldid=2964399" இலிருந்து மீள்விக்கப்பட்டது