காட்வா
கார்வா அல்லது காட்வா (Garhwa), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்த காட்வா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மாநிலத் தலைநகரான ராஞ்சியிலிருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் கார்வா நகரம் உள்ளது. இதன் அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 10 கிலோ மீட்டர் தொலைவில், பலாமூவில் உள்ள கார்வா ரோட்டில் அமைந்துள்ளது.[2] இது கிழக்கு மத்திய இரயில்வேயில் அமைந்துள்ளது. தில்லி, கொல்கத்தா, ராஞ்சி, கயா, பாட்னா, லக்னோ, ஜபல்பூர், போபால், வாரணாசி, கோட்டா போன்ற நகரங்களுக்குச் செல்லும் அனைத்து விரைவு வண்டிகளும் மற்றும் பாசஞ்சர் வண்டிகளும் கார்வா ரோடு தொடருந்து நிலையத்தில் நின்று செல்லும்.
காட்வா | |
---|---|
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் காட்வா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°07′N 83°49′E / 24.11°N 83.81°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்கண்ட் |
மாவட்டம் | காட்வா |
ஏற்றம் | 203 m (666 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 46,059 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 822114[1] |
வாகனப் பதிவு | JH-14 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 20 வார்டுகளும், 8,635 வீடுகளும் கொண்ட கார்வா நகராட்சியின் மக்கள் தொகை 46,059 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6736 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,740 மற்றும் 1,204 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 79.06%, இசுலாமியர் 20.22%, கிறித்தவர்கள் 0.56%) மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Garhwa Pincode". pin-code.net. Archived from the original on 9 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 4 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Garwa Road Junction railway station
- ↑ Garhwa Population, Religion, Caste, Working Data Garhwa, Jharkhand - Census 2011