காதல் – தி கோர்

மலையாளத் திரைப்படம்

காதல் – தி கோர் (Kaathal – The Core) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி ஓரினச்சேர்க்கைத் திரைப்படமாகும் [2] ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியா எழுத ஜியோ பேபி இயக்கியுள்ளார். மம்முட்டி கம்பனி தயாரித்த இப்படத்தில் மம்மூட்டி, ஜோதிகா ஆகியோர் முதன்மைப் பாத்திரத்திரங்களை ஏற்று நடித்தனர். மலையாள திரையுலகில் 14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா மீண்டும் இப்படத்தில் நடித்தார்.

காதல் – தி கோர்
சுவரிதழ்
இயக்கம்ஜியோ பேபி
தயாரிப்புமம்மூட்டி
கதை
  • ஆதர்ஷ் சுகுமாரன்
  • பால்சன் சகரியா
இசைமேத்யூஸ் புலிக்கான்
நடிப்பு
ஒளிப்பதிவுசாலு கே. தாமஸ்
படத்தொகுப்புபிரான்சிஸ் லூயிஸ்
கலையகம்மம்முட்டி கம்பனி
விநியோகம்துல்கர் சல்மான்
வெளியீடுநவம்பர் 23, 2023 (2023-11-23)
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹9.10 crore[1]

இப்படம் 2022 அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே மாததத்தில் படத்தின் முதன்மைப் படப்பிடிப்பு தொடங்கி 2022 நவம்பரில் முடிவடைந்தது . இப்படத்திற்கு மேத்யூஸ் புலிக்கன் இசையமைத்துள்ளார். சாலு கே. தாமஸ் ஒளிப்பதிவு செய்ய, பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பைக் கையாண்டார்.

காதல் – தி கோர் 23 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது. ஜோதிகா, மம்முட்டி ஆகியோரின் நடிப்பைப் பாராட்டி விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்கள் வந்தன. இது 54வது இந்திய திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் இடம்பெற்றது. [3]

கதை தொகு

சிற்றூரில் மதிப்புமிக்க ஒரு நடுத்தரக் குடும்பத்தின் ஒரு அங்கம் மேத்யூ தேவஸ்சி. அவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். ஊரில் நல்ல பெயர் பெற்றவராக உள்ளார். மேத்யூவுக்கு அழகான மனைவியும், கல்லூரியில் படிக்கும் மகளும் உண்டு. இவர்களுடன் மனைவியை இழந்த மேத்யூவின் தந்தையும் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கிராமத்தின் உள்ளாட்சி இடைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மேத்யூ முடிவு செய்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக, அவரது மனைவி ஓமனா, மேத்யூ ஒரு தன்பால் உறவாளர் என்று கூறி மணவிலக்கு கோரி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த மணவிலக்கு வழக்கை மேத்யூ எப்படி ஏற்றுக்கொள்கிறார் மேலும் அவரது பாலுணர்வின் போராட்டத்தை எப்படி சமாளித்தார் என்பது படத்தின் மையக்கருவாக அமைகிறது.

நடிகர்கள் தொகு

  • ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் மேத்யூ தேவஸ்சியாக மம்மூட்டி,
  • மேத்யூவின் மனைவி ஓமனா மேத்யூவாக ஜோதிகா
  • மேத்யூவின் தன்பால் உறவு நண்பர் தங்கனாக சுதி கோழிக்கோடு
  • தங்கனின் தங்கையாக பூஜா மோகன்ராஜ்
  • மேத்யூவின் தந்தை தேவஸ்ஸியாக ஆர். எஸ். பணிக்கர்
  • மேத்யூவின் மைத்துனர் டாமியாக ஜோஜி ஜான்,
  • வழக்கறிஞர் அமீராவாக முத்துமணி
  • வழக்கறிஞர் சஜிதாவாக சின்னு சாந்தினி
  • குட்டையாக அலெக்ஸ் அலிஸ்டர்
  • நீதிபதியாக கலாபவன் ஹனீப்
  • மேத்யூ மற்றும் ஓமனாவின் மகள் ஃபெமி மேத்யூவாக அனகா மாயா ரவி
  • சிபின் டீகோயாக ஜோசி சிஜோ

தயாரிப்பு தொகு

வளர்ச்சி தொகு

2022 ஆகத்தில், மம்மூட்டியும், ஜோதிகாவும் முக்கிய வேடங்களில் நடிக்கும் படத்தை ஜியோ பேபி இயக்குவதாக செய்தி பரவியது. ஆனால், இது வதந்தி என அவர் மறுத்தார். [4] செப்டம்பரின் பிற்பகுதியில், மம்முட்டி கம்பனி தயாரிக்கும் ஒரு படத்தில் மம்முட்டியை இயக்கப் போவதாக பேபி உறுதிப்படுத்தினார். அதற்கான முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்றார். நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஜோதிகா இன்னும் ஒப்பந்தமாகியிருக்கவில்லை. [5] [6] அக்டோபர் 18 அன்று, படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. மேலும் ஜோதிகா நடிப்பது உறுதி செய்யப்பட்டது, இதன் மூலம் அவர் 12 வருட இடைவெளிக்குப் பிறகு அதாவது சீதா கல்யாணம் (2009) படத்துக்குப் பிறகு மலையாளத் திரைப்படத்துறைக்கு மீண்டும் வந்தார். தான் எழுதாத திரைக்கதையை படமாக்குவது இதுவே முதல் முறை என்று இயக்குநர் ஜியோ கூறினார். ஆனால் கதையைக் கேட்டவுடன், அவருக்கு அது அவருக்குப் பிடித்திருந்தது. பின்னர் மம்மோட்டியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டி அணுகினார். மனைவி பாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகையை நடிக்கவைக்கலாம் என்று விரும்பியபோது, ஜோதிகாவை நடிக்க வைக்க மம்முட்டி பரிந்துரைத்தார். ஜோதிகாவுக்கு மலையாள நடிகை ஜோமோல் பின்னணி குரல் கொடுத்தார். [7] எழுத்தாக்கக் குழுவில் ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்கரியா ஆகியோர் இடம்பெற்றனர். ஒளிப்பதிவை சாலு கே. தாமசும், படத்தொகுப்பை ஃபிரான்சிஸ் லூயிசும், இசையமைப்பாளராக மேத்யூஸ் புலிக்கனும் பணியாற்றினர். இந்த பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள் ஜியோவின் தி கிரேட் இந்தியன் கிச்சன் (2021) படத்தில் பணிற்றியவர்களே ஆவர். [8]

படப்பிடிப்பு தொகு

2022 அக்டோபர் 20 அன்று கொச்சியில் வழக்கமான பூசையுடன் படப்பிடிப்பபுத் தொடங்கியது. [9] [10] ஜோதிகா அக்டோபர் 27 அன்று படப்பிடிப்பில் இணைந்தார். [11] மம்முட்டி தான் நடிக்கவேண்டிய காட்சிகளை நடித்து நவம்பர் 18 [12] அன்று முடித்தார், ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நவம்பர் 20 அன்று நிறைவடைந்தது. [13] 34 நாட்கள் நடந்த படப்பிடிப்பு 2022 நவம்பர் 22 அன்று முடிவடைந்தது . [14]

தயாரிப்பிற்குப் பிந்தைய பணி தொகு

2023 சனவரி பிற்பகுதியில் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் தொடங்கப்பட்டன. [15] 2023 மார்ச்சில், கே. எஸ். சித்ரா மேத்யூஸ் புலிக்கன் இசையமைப்பில் பாடலைப் பாடி பதிவு செய்தார். [16]

வெளியீடும் வரவேற்பும் தொகு

காதல் – தி கோர் 23 நவம்பர் 2023 அன்று வெளியானது [17] [18]

கதல் - தி கோர் பெரும்பாலும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [19]

மேற்கோள்கள் தொகு

  1. "Kaathal The Core Box Office : മമ്മൂട്ടിക്ക് അടുത്ത ഹിറ്റ്? 'കാതല്‍' കേരളത്തില്‍ നിന്ന് 11 ദിവസം കൊണ്ട് നേടിയ കളക്ഷനും ഷെയറും". www.asianetnews.com. Archived from the original on 5 December 2023. பார்க்கப்பட்ட நாள் 5 December 2023.
  2. "Mammootty-Jyothika starrer 'Kaathal' barred in middle east countries". 21 November 2023. Archived from the original on 21 November 2023.
  3. "Indian Panorama 2023 Announces Official Selection for 54th IFFI, 2023". பத்திரிகை தகவல் பணியகம். 23 October 2023 இம் மூலத்தில் இருந்து 21 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231121185238/https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1970040. 
  4. "Is Jeo Baby directing Mammootty in his next? The director reacts - EXCLUSIVE". 2022-08-12 இம் மூலத்தில் இருந்து 3 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230203010520/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/is-jeo-baby-directing-mammootty-in-his-next-the-director-reacts-exclusive/articleshow/93522239.cms. 
  5. "EXCLUSIVE! 'The Great Indian Kitchen' director Jeo Baby confirms his next with Mammootty". 2022-09-29 இம் மூலத்தில் இருந்து 8 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221008233844/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/exclusive-the-great-indian-kitchen-director-jeo-baby-confirms-his-next-with-mammootty/articleshow/94525254.cms. 
  6. "Exclusive! Mammootty-Jeo Baby movie to be a family drama, Jyothika's yet to sign". 2022-09-30. Archived from the original on 26 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-04-16.
  7. "Exclusive: Mammootty-Jyothika together for first time in Jeo Baby film". 2022-10-22 இம் மூலத்தில் இருந்து 25 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221125213450/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/exclusive-mammootty-jyothika-together-for-first-time-in-jeo-baby-film/articleshow/95028606.cms. 
  8. "Mammootty and Jyotika to star in Jeo Baby's 'Kaathal - The Core'". 2022-10-19 இம் மூலத்தில் இருந்து 7 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221107151727/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mammootty-and-jyotika-to-star-in-jeo-babys-kaathal-the-core/articleshow/94958013.cms. 
  9. "Kaathal: Mammootty suggested Jyotika's name for the film, says Jeo Baby" (in ஆங்கிலம்). 2022-10-20. Archived from the original on 27 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-16.
  10. "Mammootty - Jeo Baby's 'Kaathal - The Core' begins with a pooja function, see pics". 2022-10-20 இம் மூலத்தில் இருந்து 25 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221125082959/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mammootty-jeo-babys-kaathal-the-core-begins-with-a-pooja-function-see-pics/articleshow/94985330.cms. 
  11. "Jyotika joins the sets of 'Kaathal - The Core'". 2022-10-28 இம் மூலத்தில் இருந்து 12 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221112145042/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/jyotika-joins-the-set-of-kaathal-the-core/articleshow/95137762.cms. 
  12. "Mammootty completes his portions for 'Kaathal - The Core'". 2022-11-19 இம் மூலத்தில் இருந்து 18 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230418124421/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mammootty-completes-his-portions-for-kaathal-the-core/articleshow/95619700.cms?from=mdr. 
  13. "Jyotika wraps up her portions for 'Kaathal - The Core'". 2022-11-21 இம் மூலத்தில் இருந்து 27 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221127073724/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/jyotika-wraps-up-her-portions-for-kaathal-the-core/articleshow/95657402.cms. 
  14. "It's a wrap for Mammootty-Jyotika starrer 'Kaathal - The Core'". 2022-11-23 இம் மூலத்தில் இருந்து 2 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221202234017/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/its-a-wrap-for-mammootty-jyotika-starrer-kaathal-the-core/articleshow/95704337.cms. 
  15. "Post-production works of 'Kaathal: The Core' starring Mammootty and Jyotika progressing". 2023-01-27 இம் மூலத்தில் இருந்து 10 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230210020154/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/post-production-works-of-kaathal-the-core-starring-mammootty-and-jyotika-progressing/articleshow/97365964.cms. 
  16. Madhu, Vignesh (2023-03-29). "KS Chithra records song for 'Kaathal'". Archived from the original on 12 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-16.
  17. Menon, Akhila (2023-03-21). "Kaathal - The Core: Mammootty and Jyotika's film gets a release date; Read details" (in ஆங்கிலம்). Archived from the original on 15 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-16.
  18. "Kaathal - The Core: Mammootty-Jyothika starrer gets a release date" (in ஆங்கிலம்). 2023-03-22. Archived from the original on 24 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-16.
  19. Sebastian, Meryl (9 December 2023). "Kaathal: When Malayalam superstar Mammootty plays a gay character". Archived from the original on 9 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_–_தி_கோர்&oldid=3851921" இலிருந்து மீள்விக்கப்பட்டது