கானா பாடல்
வேகமான தாளத்துடன் எளிமையான சொற் சேர்ப்புக்களுடனும் ஒலிகளுடனும் பாடப்படும் பாடல்களை கானா பாடல்கள் எனலாம். கானா பாடல்கள் அடித்தள மக்களின், குறிப்பாக சென்னைச் சேரி மக்களின் பாடல்களாக இருந்து, பின்னர் பச்சையப்பன் கல்லூரி, பிற கல்லூரி மாணவர்களால் பரவத் தொடங்கின.
கானா பாடல்கள் வரலாறு
தொகு"கானாவின் வேர்கள் சென்னை நகரின் இறுக்கமான சேரிகளில் இருந்தாலும், அதை சென்னை நகரத்து (கலைக்)கல்லூரிகளே பிரபலப்படுத்தியது. பச்சையப்பா கல்லூரி, அதன் தலித் மாணவர்கள் இந்த பிரபலப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தனர்." [1]
சமூக பின்புலம்
தொகு" கானா ஒரு கலாச்சார அடையாளம். அடித்தட்டு மக்களின் குதூகலம்."
கானா பாடல்கள் தன்மை
தொகு"கானாவின் மிக முக்கிய அம்சமே பங்கேற்பு. தனிநபர் கானா பாடினாலும், சுற்றியிருப்பவர்கள், கை தட்டியும், ஊடாக பாடிக்கொண்டும், சில சமயங்களில் தாளம் போட்டுக் கொண்டிருத்தலும், வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லை. எல்லோரின் பங்குதலும் உண்டு. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லை. மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிபன்பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு பாடல்கள் அமைய வேண்டும். மிக எளிமையான சந்தங்கள் அடங்கியிருக்க வேண்டும்" [2]
பாடல் எடுத்துக்காட்டுகள்
தொகுகடவுள் படைத்த கடலைக்கூட அசுத்தப்படுத்திறான்... அந்த பணத்திமிருல, பணத்தாசையில ஏமாத்திறான்... வேலை கொடுப்போம், வேலை கொடுப்போம்னு பொய்ய சொல்லுறான்... அந்த நிலைத்தை கொடுத்த பாமரனையே ரிவிட்டு அடிக்கிறான்...
கானா கட்டியவர்: மரண காணா விஜி
எத்தனை பேரு வந்திட்டாலும் திருத்த முடியலே... அந்த கஞ்சா போதை, அபின் இல்லாம இருக்க முடியலே... குப்பை பொறுக்க குனிஞ்சு, குனிஞ்சு உடம்பு வளைஞ்சுதே... எங்க மேலே ஊத்தும் வேர்வை கூவ நாத்தம் நாறுதே... உசுரு இருக்கும்போதும் உடலு பொணக் கவுச்சி அடிக்குது... காயம்பட்டா ஊத்தும் ரத்தம் கறுப்பாத்தான் வருது... பிளாட்பாரத்துல தூங்கும்போது உசுரு மாண்டு போச்சுதுன்னா கூடி அழ ஆளில்லாம எங்க ஒடம்பு வாடிது... கார்ப்பரேஷன் வண்டி ஒண்ணு எங்கள சுமக்க வருது... சவக்கிடங்குல இருக்கும் எலிக்கு உடல் உணவாத்தான் போகுது...
கானா கட்டியவர்: மரண காணா விஜி
மேற்கோள்கள்
தொகு- ↑ கானா - ஒப்பாரியாய் கொண்டாட்டம்! - ரோசவந்த்
- ↑ கானா - சென்னை நகர்ப்புற இசை வடிவம் - பகுதி 1 பரணிடப்பட்டது 2007-10-15 at the வந்தவழி இயந்திரம் - நாராயணன்