காயான் மொழி
காயான் மொழி, (மலாய்: Bahasa Kayan; ஆங்கிலம்: Kayan Language); என்பது மலேசியா. இந்தோனேசியா நாடுகளில் பேசப்படும் மொழியாகும். மலாய-பொலினீசிய மொழிகளில் காயான்-மூரிக் மொழி துணைப் பிரிவுகளில் ஒன்றான காயான் மொழி, மலேசியா, சரவாக் மாநிலத்தின் காயான் இன மக்களின் முதன்மை மொழியாக உள்ளது.
காயான் மொழி Kayan Language | |
---|---|
Bahasa Kayan - Kajan | |
நாடு(கள்) | இந்தோனேசியா மலேசியா |
பிராந்தியம் | போர்னியோ |
இனம் | காயான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 35000 (2007)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | Variously: xay — Kayan Mahakam kys — Baram Kayan bfg — Busang Kayan xkn — Kayan River Kayan xkd — Mendalam Kayan ree — Rejang Kayan whu — Wahau Kayan bhv — பகாவ் மொழி |
மொழிக் குறிப்பு | kaya1333 (Kayanic)[2] |
காயான் மொழி உள்ளூர் வணிக மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் பகாவ் மொழி பேச்சுவழக்கு மொழிகளின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
காயான் மக்கள்
தொகுகாயான் மக்கள் (Kayan People) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் வாழும் பழங்குடிகள் மக்களாகும். காயான் மக்கள் தங்களின் அண்டைய பகுதி மக்களான கென்னியா பழங்குடியினரை (Kenyah Tribe) போன்று, ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.[3]
காயான் மக்கள்; அப்போ காயான் மக்கள் (Apo Kayan People) குழுவின் கீழ், மற்றொரு குழு மக்களான பகாவ் மக்கள் (Bahau People) எனும் இனக் குழுவினருடன் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளனர்.
மனிதர் தலை வேட்டையாடுதல்
தொகுமற்ற சில தயாக்கு மக்கள் இனத்தவரைப் போலவே, காயான் மக்கள் திறமையான போர்வீரர்கள்; முன்னர் காலத்தில் இவர்கள் மனிதர் தலை வேட்டையாடுபவர்கள் (Headhunters); மலைசார் நெல் சாகுபடியில் (Upland Rice Cultivation) திறமையானவர்கள் என அறியப் படுகிறார்கள்.
மேலும் ஆண் பெண் இரு பாலரும் அதிகமாய்ப் பச்சை குத்திக் கொள்பவர்கள் (Extensive Tattoos); மற்றும் பெரிய அளவிலான காது வளையங்களை அணிந்து கொள்பவர்கள் ஆகும்.[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்
தொகு- ↑ Kayan Mahakam at Ethnologue (18th ed., 2015)
Baram Kayan at Ethnologue (18th ed., 2015)
Busang Kayan at Ethnologue (18th ed., 2015)
Kayan River Kayan at Ethnologue (18th ed., 2015)
Mendalam Kayan at Ethnologue (18th ed., 2015)
Rejang Kayan at Ethnologue (18th ed., 2015)
(Additional references under 'Language codes' in the information box) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Kayanic". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Kayan in the Encyclopædia Britannica பரணிடப்பட்டது 14 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம், retrieved on 12 August 2006, from Encyclopædia Britannica Premium Service.
- ↑ Monthly Packet, Volume 12. J. and C. Mozley. 1857. p. 370.
மேலும் படிக்க
தொகு- Richards, Anthony (1981). An Iban-English Dictionary. New York: Oxford University Press.
- Asmah Haji Omar (1969). The Iban Language of Sarawak: A Grammatical Description (PhD thesis). SOAS University of London.
- Indigenous Communities and Languages of Sarawak, Malaysia; Coauthored by ASMAH HAJI OMAR dan NORAZUNA NORAHIM (2020); ISBN: 9789834926144
வெளி இணைப்புகள்
தொகு