காரோண வளையம்

காரோண வளையம் இது எதிர் காரோண வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கடத்தும் பொருளின் மின்புலமாகும். இப் பொருள் பொதுவாக உயர் மின்னழுத்த ஒழுங்கற்ற வன்பொருளுடன் அதன் நுனிபகுதியில் இணைக்கப்படும். இதன் பயன் ஒளிவட்ட மின்னிறக்கம்[1][2][3] ஏற்படுவதை தடுத்தல், ஒளிவட்ட மின்புலத்தை ஏற்படுத்துதல், காரோண வளையங்கள் மிக அதிக மின்னழுத்த ஆற்றல் பரிமாற்றிகள் மற்றும் முடுக்கிகள், உயர் மின்னழுத்தங்களை உருவாக்குகின்ற அறிவியல் ஆராய்ச்சி கருவியில் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் ஒத்த தொடர்புடைய சாதனம், தரவரிசை வளையங்களை சுற்றிதரவரிசை வளையம் பயன்படுத்தப்படுகிறது.[4] [5]

Grading ring on Russian surge arrester
Grading rings on transformer bushings
Corona rings on switchgear
500 கிலோ வாட் கொண்ட மின் இணைப்பில் வெளிப்படும் ஒளிவட்ட மின்னிறக்கம்
பிரான்சு நாட்டில் 225 கிலோ வாட் கொண்ட மின் இணைப்பில் உள்ள காரோண வளையங்கள்

ஒளிவட்ட மின்னிறக்கம்

தொகு
 
வார்டன்பெர்க் சக்கரத்தில் ஒளிவட்ட மின்னிறக்கம்

ஒளிவட்ட மின்னிறக்கம் (ஆங்கிலம்:Corona discharge) என்பது மின்னிறக்கத்தால் ஏற்படும் ஒரு நிகழ்வாகும். மின்னோட்டம் பாயும் கடத்தியைச் சுற்றியுள்ள மின்னூட்டம் பெற்ற பாய்மப் பொருட்களால் ஒளிவட்ட மின்னிறக்கம் நிகழ்கிறது. அதிக மின்னழுத்தம் உள்ள கம்பிகளில் மின் புலச் செறிவைக் குறைக்காவிட்டால், கம்பிகளில் தானாகவே மின்னிறக்கம் நடைபெறுகிறது.

மின்னோட்டம் பாயும் கடத்தியில் உருவாகும் மின்னிலை சரிவின் (Potential gradient) செறிவு அதிகமாக இருக்கும் போது மின்னிறக்க வட்டம் (Corona) உருவாகிறது. மின்னிலை சரிவின் (Potential gradient) செறிவின் அளவு மிக அதிகமாகும் போது மின் முறிவு (Electrical breakdown) அல்லது மின்வில் (Electric arc) உருவாகிறது. வாயு விளக்குகள் நீல நிறத்தில் ஒளியை உருவாக்குவது போல், மின்னழுத்தம் அதிகமுள்ள இடங்களில் மின்னிறக்க வட்டம் உருவாகிறது.

மின்னிறக்கம் என்பது அதிக மின்னழுத்தம் உள்ள கம்பிகளில் மின் ஆற்றல் இழக்கச் செய்யும் ஒரு நிகழ்வாகும். மின் ஆற்றலை உற்பத்தியாகும் இடத்திலிருந்து பயன்படுத்துமிடம் வரை கடத்தும் போது, மின்னிறக்கம் காரணமாக ஒரு குறிப்பிடத்தக்க அளவில் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. அதிக மின்னழுத்தத்தில் வேலை செய்யக்கூடிய தொலைக்காட்சி, ரேடியோ பரப்பிகள் (Radio transmitter), X கதிர் எந்திரம், துகள் முடுக்கிகள்ஆகியவற்றில் மின்னிறக்கம் காரணமாக ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.

மின்னிறக்கத்தால் காற்றில், ஓசோன் (O3), நைட்ரிக் ஆக்சைடு (NO), நைட்ரசன் டை ஆக்சைடு (NO2) ஆகிய வாயுக்கள் உருவாகின்றன. இவற்றின் மூலம் காற்றிலுள்ள ஈரப்பதத்தால் நைட்ரிக் அமிலம் உருவாகிறது. இவ்வாயுக்கள் தமக்கருகிலுள்ள பொருட்களைச் சிதைவுறச் செய்வதுடன், நச்சுத்தன்மையுள்ள வாயுக்களையும் உருவாக்குகிறது.

அதிக மின்னழுத்தம் உள்ள கம்பிகளைக் மின் காப்பிடுவதன் மூலமும், வழுவழுப்பான வட்ட வடிவில் கம்பிகளை உருவாக்குவதன் மூலமும் மின்னிறக்கம் உருவாவதைக் குறைக்கலாம். எனினும் காற்று வடிகட்டிகள், ஒளிநகல் சாதனங்கள் (photocopier) மற்றும் ஓசோன் இயற்றிகள் ஆகியவற்றில் கட்டுபடுத்தப்பட்ட முறையில் மின்னிறக்கம் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kaiser, Kenneth L. (2005). Electrostatic Discharge. CRC Press. pp. 2.73–2.75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0849371882.
  2. Hurley, Morgan J.; Gottuk, Daniel T.; Hall, John R. Jr. (2015). SFPE Handbook of Fire Protection Engineering. Springer. p. 683. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1493925650.
  3. Lüttgens, Günter; Lüttgens, Sylvia; Schubert, Wolfgang (2017). Static Electricity: Understanding, Controlling, Applying. John Wiley and Sons. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527341283.
  4. Electric power generation, transmission, and distribution, Volume 1 By Leonard L. Grigsby, CRC Press, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-9292-6
  5. aerials for metre and decimetre wave-lengths, CUP Archive
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரோண_வளையம்&oldid=3355777" இலிருந்து மீள்விக்கப்பட்டது