காலியம் அசிட்டேட்டு
காலியம் அசிட்டேட்டு (Gallium acetate) என்பது Ga(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை கொண்டிருக்கும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். காலியம் நேர்மின் அயனிகள் மூன்றும் அசிட்டேட்டு எதிர்மின் அயனிகள் மூன்றும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. காலியம் அசிட்டேட்டு சேர்மத்தில் காலியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. சுருக்கமாக இது GaAc என்ற வாய்பாட்டாலும் குறிக்கப்படுவது உண்டு. காலியம் நீரில் மிதமாகக் கரைகிறது. சுமார் 70 பாகை செல்சியசு வெப்பநிலை வரை சூடாக்கப்படும் போது காலியம் ஆக்சைடாக சிதைகிறது. மற்ற அசிடேட்டு சேர்மங்களைப் போலவே, காலியம் அசிடேட்டும் அதி-தூய்மையான சேர்மங்கள், வினையூக்கிகள் மற்றும் நானோ அளவிலான பொருட்கள் தயாரிப்பதற்கான ஒரு நல்ல முன்னோடி சேர்மமாகும்..[2] கால்சியம் குளோரைடு மற்றும் மெக்னீசியம் குளோரைடு போன்ற குளிரூட்டும் சேர்மங்களுக்கு மாற்றாகக் காலியம் அசிடேட்டு கருதப்படுகிறது.[3]
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
டெட்ரா-μ2-அசிட்டாட்டோடையாகுவாடிகாலியம்(III), ஈரசிட்டைலாக்சிகால்லைனல் அசிட்டேட்டு
காலியம்(3+) மூவசிட்டேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
2571-06-4 | |
ChemSpider | 144647 |
EC number | 219-915-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16704853 |
| |
பண்புகள் | |
Ga(O2C2H3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 246.85[1] |
தோற்றம் | வெண் படிகங்கள் |
அடர்த்தி | 1.57 கி/செ.மீ/3 |
உருகுநிலை | N/A |
கொதிநிலை | 117.1C |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H314, H335 | |
P261, P280, P305+351+338, P304+340, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |

தயாரிப்பு
தொகுஅசிட்டிக் அமிலமும் காலியம் ஆக்சைடு அல்லது காலியம் ஐதராக்சைடும் வினைபுரிந்து நடுநிலையாக்கல் வினையின் மூலமாக காலியம் அசிட்டேட்டு உருவாகிறது.
- 6CH3COOH + Ga2O3 → 2Ga(CH3COO)3 + 3H2O
- 3CH3COOH + Ga(OH)3 → Ga(CH3COO)3 + 3H2O
அசிட்டிக் அமிலத்தில் காலியம் சேர்த்து பல வாரங்களுக்கு மீள் கொதிப்புக்கு உட்படுத்தினாலும் காலியம் அசிடேட்டை உற்பத்தி செய்யலாம்.[4]
பயன்கள்
தொகுமூளைக்கட்டியை படமெடுக்க காலியம் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்ககாலியம்-அசிட்டைலசிட்டொனேட்டு பிசு(தயோசெமிகார்பசோன்) அணைவுச் சேர்மத்தை உருவாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Gallium acetate".
- ↑ Elements, American. "Gallium Acetate". American Elements (in ஆங்கிலம்). Retrieved 2022-05-05.
- ↑ "Gallium acetate, 99.9% 2571-06-4 - Manufacturers & Suppliers in India with worldwide shipping". www.ottokemi.com. Retrieved 2022-05-05.
- ↑ Funk, H.; Paul, A. Chemistry of gallium. II. Reactions between gallium and organic compounds. Zeitschrift für Anorganische und Allgemeine Chemie (1965), 337(3-4), 142-4.
- ↑ Jalilian, Amir R.; Yousefnia, Hassan; Garousi, Javad; Novinrouz, Aytak; Rajamand, Amir A.; Shafaee, Kamaledin (2009). "The development of radiogallium-acetylacetonate bis(thiosemicarbazone) complex for tumour imaging". Nuclear Medicine Review 12 (2): 65–71. பன்னாட்டுத் தர தொடர் எண்:1644-4345. https://journals.viamedica.pl/nuclear_medicine_review/article/view/15208.