கால்சியம் சல்பைட்டு
கால்சியம் சல்பைட்டு (Calcium sulfite) என்பது CaSO3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியத்தின் சல்பைட்டு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. இரண்டு படிக வடிவங்கள் அறியப்படுகின்றன. எனவே இதன் மூலக்கூற்று வாய்ப்பாடை CaSO3 ·x(H2O) என்றும் எழுதலாம். வாய்ப்பாட்டிலுள்ள x = 1/2, 4 என்ற எண்களுகுச் சமமாகும். அதாவது முறையே கால்சியம் சல்பைட்டு அரைநீரேற்று CaSO3·½(H2O) என்றும் கால்சியம் சல்பைட்டு நான்குநீரேற்று CaSO3·4(H2O) என்றும் குறிக்கப்படுகின்றன.[2] இவை இரண்டுமே வெண்மை நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படுகின்றன. வாயு அல்லது வெப்பக்காற்றை வெளியேற்றும் குழாய்களில் கால்சியம் சல்பைட்டு விளைபொருளாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் சல்பைட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
10257-55-3 (நீரிலி) 72878-03-6 (நான்குநீரேற்று) 29501-28-8 (அரை நீரேற்று) | |
ChemSpider | 8329549 |
EC number | 233-596-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10154041 |
| |
UNII | 7078964UQP |
பண்புகள் | |
CaSO3 | |
வாய்ப்பாட்டு எடை | 120.17 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 600 °C (1,112 °F; 873 K) |
4.3 மி.கி/100 மி.லி (18 °செல்சியசு) | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
3.1×10−7[1] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் சல்பைட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅனல் வாயு கந்தகநீக்கச் செயல்முறையின் மூலம் கால்சியம் சல்பைட்டு பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி அல்லது பிற புதைபடிவ எரிபொருளை எரிக்கும்போது, அதன் துணை விளைபொருளாக அனல் வாயு உருவாகிறது. அனல் வாயுவில் பெரும்பாலும் கந்தக டை ஆக்சைடு கலந்திருக்கும். இதன் உமிழ்வு பெரும்பாலும் அமில மழையைத் தடுக்க ஒழுங்குபடுத்தப்படுகிறது. புகைபோக்கி அடுக்கு வழியாக மீதமுள்ள வாயுக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு கந்தக டை ஆக்சைடு துப்புரவாக்கப்படுகிறது. அனல் வாயுவிலிருந்து கந்தக டை ஆக்சைடை நீக்குவதற்கான ஒரு சிக்கனமான வழி, கழிவுநீரை Ca(OH)2 நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு அல்லது CaCO3 சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு சுத்திகரிப்பதாகும்.[3]
சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு சுரண்டி துப்புரவாக்குதல் பின்வரும் சிறந்த வினையைப் பின்பற்றுகிறது:
- SO2 + CaCO3 → CaSO3 + CO2
நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு கொண்டு சுரண்டி துப்புரவாக்குதலில் பின்வரும் வினை நிகழ்கிறது.[4][5]
- SO2 + Ca(OH)2 → CaSO3 + H2O
இதன் விளைவாக உருவாகும் கால்சியம் சல்பைட்டு காற்றில் ஆக்சனேற்றப்பட்டு ஜிப்சத்தைக் கொடுக்கிறது:
- 2 CaSO3 + O2 → 2 CaSO4
சிப்சம், போதுமான அளவு தூய்மையாக இருப்பதால் கட்டுமானப் பொருளாக சந்தைப்படுத்தப்படுகிறது.
பயன்கள்
தொகுசிப்சம் பலகை
தொகுகால்சியம் சல்பைட்டு சிப்சம் உற்பத்தியில் இடைநிலையாக உருவாக்கப்படுகிறது. இது சிப்சம் பலகையின் முக்கிய அங்கமாகும். ஒரு பொதுவான அமெரிக்க இல்லத்தில் 7 மெட்ரிக் டன்கள் சிப்சம் பலகை உள்ளது.[6]
உணவு சேர்பொருள்
தொகுஉணவு சேர் பொருளாக கால்சியம் சல்பைட்டு ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ226 என்ற எண்ணின் கீழ் ஓர் உணவு பாதுகாப்பாளராகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற ஆக்சிசனேற்ற சல்பைட்டுகளுடன் சேர்ந்து இது பொதுவாக ஒயின் எனப்படும் திராட்சை மது, சைடர் எனப்படும் ஆப்பிள் மது, பழச்சாறு, புட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாப்பதில் பயன்படுத்தப்படுகிறது. சல்பைட்டுகள் கரைசலில் வலுவான குறைப்பான்களாகும். இவை உணவைப் பாதுகாக்க ஆக்சிசன் துப்புரவு ஆக்சிசனேற்றிகளாக செயல்படுகின்றன. ஆனால் சில நபர்களுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கலாம் என்பதால் அடையாளமிடல் தேவைப்படுகிறது.
மரக் கூழ் உற்பத்தி
தொகுஇரசாயன மரக் கூழ் என்பது செல்லுலோசை மரத்துடன் ஒன்றாக இணைக்கும் இலிக்னினைக் கரைப்பதன் மூலம் மரத்திலிருந்து செல்லுலோசை அகற்றுவதாகும். சல்பைட்டுகளுக்குப் பதிலாக ஐதராக்சைடுகள் மற்றும் சல்பைடுகளைப் பயன்படுத்தும் கிராஃப்ட் செயல்முறைக்கு மாற்றாக, கால்சியம் சல்பைட்டை சல்பைட்டு செயல்முறை மூலம் மரக் கூழ் உற்பத்தியில் பயன்படுத்தலாம்.
சிப்சம்
தொகுமாங்கனீசு (Mn2+) நேர்மின் அயனி அல்லது கந்தக அமில வினையூக்கிகளுடன் நீர் கலவையில் ஆக்சிசனேற்றம் (O2 சேர்த்து) சிப்சம் உற்பத்தி செய்ய கால்சியம் சல்பைட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.[7][8]
கட்டமைப்பு
தொகு-
கால்சியம் சல்பைட்டு நான்குநீரேற்றில் [Ca3(SO3)2(H2O)12]2+ இன் கட்டமைப்பு .
-
நீரற்ற CaSO3 சேர்மத்தின் கட்டமைப்பு.
நீரற்ற கால்சியம் சல்பைட்டு சிக்கலான பல்லுருவ அமைப்பைக் கொண்டிருப்பதை எக்சுகதிர் படிகவியல் காட்டுகிறது.[9] இந்த நான்குநீரேற்று Ca3(SO3)2(SO4).12H2O மற்றும் Ca3(SO3)2(SO3).12H2O ஆகியவற்றின் திண்மக்கரைசலாக படிகமாகிறது. கலப்பு சல்பைட்டு-சல்பேட்டு சிப்சம் உற்பத்தியில் நடைமுறையில் உள்ளபடி, சல்பைட்டின் ஆக்சிசனேற்றத்தில் சல்பேட்டிற்கு ஓர் இடைநிலையாக உள்ளது. திண்மக்கரைசலில் [Ca3(SO3)2(H2O)12]2+ நேர்மின் அயனிகளும் சல்பைட்டு அல்லது சல்பேட்டு எதிர்மின் அயனிகளும் உள்ளன.[2][10] இந்த படிக ஆய்வுகள் சல்பைட்டு அயனி ஒரு பிரமிடு எனப்படும் பட்டைக்கூம்பு வடிவவியலை ஏற்றுக்கொள்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இயற்கைத் தோற்றம்
தொகுகால்சியம் சல்பைட்டு(III) அரைநீரேற்று இயற்கையில் ஓர் அரிய கனிமமான அன்னேபாகைட்டாக காணப்படுகிறது.[11][12]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1138561632.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 Abraham Cohen; Mendel Zangen (1984). "Studies On Alkaline Earth Sulfites. Structure and Stability of the New Compound Ca3(SO3)2SO4.12H2O and Its Solid Solution In Calcium Sulfite Tetrahydrate". Chemistry Letters 13 (7): 1051–1054. doi:10.1246/cl.1984.1051.
- ↑ Wirsching, Franz (2005), "Calcium Sulfate", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a04_555
- ↑ Hudson, JL (1980). Sulfur Oxidation in Scrubber Systems. University of Virginia.
- ↑ Miller, Bruce (2004). Coal Energy Systems. Elsevier Science Technology. pp. 294–299.
- ↑ "USGS Gypsum Statistics and Information". USGS. பார்க்கப்பட்ட நாள் June 26, 2016.
- ↑ Li, Yuran; Zhou, Jinting; Zhu, Tingyu; Jing, Pengfei (2014-02-01). "Calcium Sulfite Oxidation and Crystal Growth in the Process of Calcium Carbide Residue to Produce Gypsum" (in en). Waste and Biomass Valorization 5 (1): 125–131. doi:10.1007/s12649-013-9206-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1877-2641. Bibcode: 2014WBioV...5..125L.
- ↑ "How can we convert calcium sulfite into calcium sulfate after..." ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-18.
- ↑ Yasue, Tamotsu; Arai, Yasuo (1986). "Crystal Structure of Calcium Sulfite". Gypsum & Lime (Jap. Language) 203: 235–44.
- ↑ Matsuno, Takashi; Takayanagi, Hiroaki; Furuhata, Kimio; Koishi, Masumi; Ogura, Haruo (1984). "The Crystal Structure of Calcium Sulfite Hemihydrate". Bulletin of the Chemical Society of Japan 57 (4): 1155–6. doi:10.1246/bcsj.57.1155.
- ↑ "Hannebachite".
- ↑ "List of Minerals". 21 March 2011.