கிரிப்டான் இருபுளோரைடு
கிரிப்டான் இருபுளோரைடு (Krypton difluoride) என்பது KrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கிரிப்டான் மற்றும் புளோரின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மமே முதலில் கண்டறியப்பட்ட கிரிப்டான் சேர்மமாகும்.[2] நிறமற்ற திண்மமான இச்சேர்மம் துரிதமாக ஆவியாகும் தன்மை கொண்டதாகும். கிரிப்டான் இருபுளோரைடின் மூலக்கூற்று வடிவமைப்பில் மூலக்கூறுகள் நேரியல் வடிவில் காணப்படுகின்றன. Kr−F பிணைப்புகளுக்கு இடையில் 188.9 பை.மீ இடைவெளி உள்ளது. வலிமையான இலூயிக் அமிலங்களுடன் கிரிப்டான் இருபுளோரைடு வினைபுரிந்து KrF+ உப்புகள் மற்றும் Kr2F+3 நேர்மின் அயனிகளை உருவாக்குகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
கிரிப்டான்(II) புளோரைடு
| |||
வேறு பெயர்கள்
கிரிப்டான் புளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
13773-81-4 | |||
ChemSpider | 75543 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 83721 | ||
| |||
பண்புகள் | |||
F2Kr | |||
வாய்ப்பாட்டு எடை | 121.79 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் (திண்மம்) | ||
அடர்த்தி | 3.24 கி செ.மீ−3 (திண்மம்) | ||
வினைபுரியும் | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | Body-centered tetragonal[1] | ||
புறவெளித் தொகுதி | P42/mnm, No. 136 | ||
Lattice constant | a = 0.4585 nm, c = 0.5827 nm | ||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு முறை
தொகுமின்கசிவு முறை, ஒளிவேதியியல் முறை, சூட்டுக் கம்பி முறை மற்றும் புரோட்டன் மோதல் முறை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிக்க முடியும். -265 பாகை செல்சியசு வெப்பநிலையில் புளோரின் – ஆர்கான் வாயுக் கலைவையில், கிரிப்டான் புற ஊதாக்கதிர் வீச்சுக்குள்ளாக்கப்பட்டாலும் கிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிக்க முடியும். விளை பொருளை -78 பாகை வெப்பநிலையில் சிதைவடைதலின்றிச் சேமிக்க முடியும்.
மின்கசிவு முறை
தொகுகிரிப்டான் இருபுளோரைடைத் தயாரிப்பதற்காக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட முறை மின்கசிவு முறையாகும். கிரிப்டான் நான்குபுளோரைடு தயாரிப்பதற்கான முறையாக மின்கசிவு முறை கருதப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டச் சேர்மம் கிரிப்டான் நான்குபுளோரைடு எனத் தவறுதலாக அடையாளம் காணப்பட்டது எனப் பின்னர் உணரப்பட்டது. இம்முறையில் 1:1 முதல் 2:1 வரையிலான F2 , Kr வாயுக்கலவை 40 முதல் 60 டோர் அழுத்தத்தில் உண்டாகும் மின்வில்லுக்கு இடையில் அதிகமான ஆற்றல் உண்டாகிறது. கிட்டத்தட்ட 0.25 கி/ம விளைபொருள் உருவாகிறது. உருவாகும் விளைபொருளின் அளவு உறுதியாக நம்புவதற்கில்லை என்பதுதான் இம்முறையில் உள்ள குறைபாடாகும்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ R. D. Burbank, W. E. Falconer and W. A. Sunder (1972). "Crystal Structure of Krypton Difluoride at −80 °C". Science 178 (4067): 1285–1286. doi:10.1126/science.178.4067.1285. பப்மெட்:17792123.
- ↑ Grosse, A. V.; Kirshenbaum, A. D.; Streng, A. G.; Streng, L. V. (1963). "Krypton Tetrafluoride: Preparation and Some Properties". Science 139 (3559): 1047–8. doi:10.1126/science.139.3559.1047. பப்மெட்:17812982.
- ↑ Lehmann, J (2002). "The chemistry of krypton". Coordination Chemistry Reviews 233-234: 1. doi:10.1016/S0010-8545(02)00202-3.
- ↑ Kinkead, S. A.; Fitzpatrick, J. R.; Foropoulos, J. Jr.; Kissane, R. J.; Purson, D. (1994). "3. Photochemical and thermal Dissociation Synthesis of Krypton Difluoride". Inorganic Fluorine Chemistry: Toward the 21st Century. San Francisco, California: American Chemical Society. pp. 40–54. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/bk-1994-0555.ch003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8412-2869-6.
புற இணைப்புகள்
தொகுஉசாத்துணை
தொகு- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.