கிரேயின் சிற்றோடைத் தவளை
கிரேயின் சிற்றோடைத் தவளை Gray's stream frog | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பிக்சிசெபாலிடே
|
பேரினம்: | இசுட்ராங்கைலோபசு
|
இனம்: | இ. கிரேயி
|
இருசொற் பெயரீடு | |
இசுட்ராங்கைலோபசு கிரேயி (சுமித், 1849) |
கிரேயின் சிற்றோடைத் தவளை (Gray's stream frog; Strongylopus grayii) மிகவும் சிறிய இனமாகும். இது பைக்சிசெபாலிடே குடும்பத்தினை சார்ந்த தவளையாகும்.[2] [3] தரையில் தாவர இனங்களுக்கிடையே வாழக்கூடிய பழுப்பு நிறமான, மெல்லிய, சுறுசுறுப்பான, நீளமான கால்விரல்களுடன் விரல்களுக்கு இடையே சவ்வு இல்லாமல் காணப்படும்.
விளக்கம்
தொகுஇசுட்ராங்கைலோபசு கிரேயி என்பது மிகச் சிறிய தவளை இனமாகும் (உடல் நீளம் 25 முதல் 50 மிமீ வரை. தலையின் முன்பகுதி பெரும்பாலான தவளை இனங்களைப் போல குறுகி இல்லாமல், கேப் நதி தவளையை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. வயிற்றுப்புற தோல் மென்மையானது, வெளிர் நிறமாகவோ, வெண்மையாகவோ இருக்கும். முதுகுபுற தோல் நிறம் மாறுபடுகிறது. பொதுவாக இது பழுப்பு நிறத்தில் அடர் நிற கரைகளுடன் காணப்படும். இதேபோன்ற கறைகள் தொடைகளின் மேல் மேற்பரப்புகளில் பட்டைகள் போல காணப்படும். பெரும்பாலும் முதுகெலும்பு பகுதியில் மாறுபட்ட நிறத்தில் மெலிதான கோடுபோல தோற்றம் காணப்படும். வண்ண வேறுபாடுகளும் காணப்படுகின்றன. முதுகெலும்பு தோல் சிதறிய சிறிய, உயர்த்தப்பட்ட முகடுகளுடன், பெரும்பாலும் நீளவாக்கில் அமைந்ததாக உள்ளது. செவிப்பறை கண்ணின் விட்டத்தினை விடச் சிறியது. செவிப்பறை தெளிவாகத் தெரியக்கூடியதாக இருந்தாலும், கண்ணுக்குப் பின்னால் உள்ள அடர் நிற முகப் பட்டையானது மறைப்பதுபோல் உள்ளது. முகப் பட்டை நாசியிலிருந்து, கண்ணின் கீழ்ப் பகுதி முழுவதும், செவிப்பறையின் பின்புறமாக, முன் காலின் அடிப்பகுதி வரை நீண்டுள்ளது. கண்ணுக்குக் கீழே இருந்து, வெளிர் கோடு முகப்பட்டைக்கு கீழ்புறமாக வழியாக தோள்பட்டை வரை நீண்டுள்ளது. இப்பட்டைக்கு மேலே வெளிர் கோடு முக முன்பகுதியில் தொடங்கி கருமணி மேலாகத் தோள்பட்டை வரைச் செல்கிறது. ஆணின் கீழ் தாடையில் காணப்படும் தங்க நிறம் பெண் தவளையினை வேறுபடுத்தி அறிய உதவுகிறது.
கால்விரல்கள் நன்கு வளர்ச்சியடைந்தவை. விரலிடை சவ்வுகளற்று காணப்படும். முன் கால்விரல்கள் மெலிதானவை, பின்புற கால்விரல்களை விட நீளமாகவும் உள்ளன, நீளமான (நான்காவது) கால்விரல் தோள்பட்டை குந்துகையில் முன் கால்விரல்கள் வரை முன்னோக்கி நீண்டுள்ளது.
வரம்பு மற்றும் வாழ்விடம்
தொகுலெசோதோ, தென்னாப்பிரிக்கா, சுவாசிலாந்து, மற்றும் போட்ஸ்வானா மற்றும் நமீபியாவின் சில பகுதிகளில் இந்த இனங்கள் காணப்படுகின்றன. இது தொலைதூரத்தில் அமைந்த அட்லாண்டிக் தீவான செயிண்ட் ஹெலினாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு பொதுவான இனம். [1]
கிரேயின் சிற்றோடை தவளை பரவலான வாழ்விடங்களில் காணப்படுகிறது. இந்த வறண்ட பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் காணப்படுகின்றன. காடுகள், ஃபைன்போஸ் தரிசுநிலம், அடர் காடுகள், சவானா மற்றும் புல்வெளிகள், மாற்றி அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் காணப்படுகிறது. எந்தவொரு ஆழமற்ற தண்ணீர் தேக்கங்களில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. [1]
பழக்கவழக்கம்
தொகுசாம்பல் சிற்றோடை தவளை அதன் வாழிடப்பகுதியில் பொதுவாகக் காணப்படும் நீரோடைகள் மற்றும் அணைகளைச் சுற்றியுள்ள புல்வெளி அல்லது புதர் தாவரங்கள் அல்லது சாலையோர குளங்கள் அல்லது பருவகால நீர்த் தேக்க இடங்களில் காணப்படுகின்றது. இனப்பெருக்க காலத்தில், அதன் குரல் ஒரு குளத்தில் விழும் தண்ணீரைப் போலல்லாமல், உரத்த, தொடர்ச்சியான சத்தமாக இருக்கும். ஆண்கள் இரவில் மட்டுமின்றி பகல் வேளைகளிலும் குறிப்பாக மேகமான வானிலையின் போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். பெரும்பாலான தவளைகளைப் போலவே, இந்த தவளை இனமும் தேங்கிநிற்கும் தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. இத்தவளைகள் விரைவாகவும் சுறுசுறுப்புடனும் நீந்தும் தன்மையுடையது. ஆனால் தண்ணீரை விட்டு வெளியேற முடியாவிட்டால், சில மணி நேரத்தில் இறந்துவிடும். நீரில் மூழ்கி இறப்பதைவிட, சருமத்தின் வழியாக உறிஞ்சப்படும் தண்ணீர் மூலமே இத்தவளை மரணமடைகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2013). "Strongylopus grayii". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2013: e.T58767A3073333. doi:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T58767A3073333.en. http://www.iucnredlist.org/details/58767/0. பார்த்த நாள்: 11 January 2018.
- ↑ Du Preez, L. H.; Carruthers, Vincent. A Complete Guide to the Frogs of Southern Africa. Cape Town, South Africa: Struik Nature. 2009
- ↑ Carruthers, Vincent. Frogs and Frogging in Southern Africa. Struik Nature. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86872-607-X, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781868726073