கிர்ரான் கெர்
கிர்ரான் கெர் (Kirron Kher), எனப்படும் கிர்ரான் அனுபம் கெர் ( கிரண் [1] அல்லது, கிரோன் [2][3][4] எனவும் அழைக்கப்படுகிறார்.) ஜூன் 14, 1955இல் பிறந்த ஓர் இந்திய நாடக, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். மேலும், இவர் ஒரு தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராவார். மே 2014 இல், சண்டிகரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடும்பம்
தொகுகிர்ரான் கெர், ஜூன் 14, 1955 அன்று ஜாட் சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். சண்டிகரில் வளர்ந்தார்.[5][6] அவரது பெற்றோரால் அவருக்கு 'கிரண்' என்று பெயரிடப்பட்டது. மற்றும் அவரது முழு பெயர் 'கிரண் தாக்கர் சிங்' என்பதாகும். கௌதம் பெர்ரியுடனான முதல் திருமணத்தின் போது, அவர் 'கிரண் பெர்ரி' என்று அழைக்கப்பட்டார். அவர் அனுபம் கெர் ஐ மணந்தபோது, அவர் தனது முதல் பெயரை மீண்டும் பயன்படுத்த தொடங்கினார். மேலும் தனது சமீபத்திய கணவரின் குடும்பப் பெயரையும் சேர்த்தார். இதனால் அவரது பெயர் 'கிரண் தாக்கர் சிங் கெர்' என்று அறியப்பட்டது. பிற்கால வாழ்க்கையில், அவர் எண் கணிதத்தில் உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். மேலும் 2003 ஆம் ஆண்டில் தனது 48வது வயதில், அவர் தனது பெயரை "கிரண்" என்பதிலிருந்து "கிர்ரான்" என்று எண்ணியல் கணக்கீடுகளின் அடிப்படையில் மாற்றினார்.[7] அதனால் தனது முதல் பெயர்களை பயன்படுத்தாமல் 'கிர்ரான் கெர்' என அறியப்பட்டார்.
கிர்ரானுக்கு ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவரது சகோதரர், கலைஞர் அமர்தீப் சிங், 2003 இல் இறந்தார்.[8] அவரது சகோதரிகளில் ஒருவர், அர்ஜுனா விருது வென்ற பேட்மிண்டன் வீரர் கன்வால் தாக்கர் கவுர் ஆவார். அவரது மற்றொரு சகோதரி, ஷரஞ்சித் கவுர் சந்து, இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரியின் மனைவி ஆவார்.
திருமணங்கள்
தொகுகிர்ரான் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பள்ளிக்குச் சென்றார்.[9] சண்டிகரில் பள்ளி கல்வியை முடித்தார், பின்னர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இந்திய நாடகத் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபர் கௌதம் பெர்ரியை 1979 மார்ச் முதல் வாரத்தில் திருமணம் செய்து கொண்டார், அவருக்கு ஒரு மகன், சிக்கந்தர் கெர் பிறந்தார்.[10]
மும்பையில், திரைத்துறையில் கால் பதிக்க கிரண் 1980 களில் முயன்றார். ஆனால் வெற்றி பெறவில்லை. திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, தயாரிப்பாளர்களை அணுகும்போது, கிர்ரான் அனுபம் கெர் உடனான தனது அறிமுகத்தை புதுப்பித்தார். அவரும் இதேபோல் திரைப்படத்தில் நடிப்பதற்காக போராடிக் கொண்டிருந்தார். மேலும், சண்டிகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, அனுபம் கெர், கிர்ரான் கெர்ருக்கு தெரிந்தவர். அதனால், இருவரும் ஒன்றாக திரை அரங்கு வட்டங்களில் வாய்ப்புத் தேடி, சந்த்புரி கி சம்பபாய் என்ற நாடகத்தில் ஒன்றாக வேலை செய்தனர். 1985 ஆம் ஆண்டில், சாரன்ஷுடனான படங்களில் அனுபம் கெர், ஒரு இடைவெளியைப் பெற்ற பிறகு, கிர்ரான் தனது கணவரை விவாகரத்து செய்தார்.
தொழில்
தொகுகிர்ரான் கெர் 1983 ஆம் ஆண்டில் பஞ்சாபி திரைப்படமான ஆஸ்ரா பியார் டா திரைப்படத்தில் அறிமுகமானார். இதற்குப் பிறகு, அவர் 1996 வரை படங்களில் இருந்து இடைவெளி எடுத்தார்.[11] 1983 மற்றும் 1996 க்கு இடையில், அவர் பெஸ்டன்ஜி (1987) என்ற ஒரு படத்தில் தோன்றினார். அதில் அவர் தனது இரண்டாவது கணவர் அனுபம் கெருடன் இணைந்து ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார்.
1990 களின் நடுப்பகுதியில், திரை அரங்கு மூலம், நாடக ஆசிரியர் ஜாவேத் சித்திகி எழுதிய ஃபெரோஸ் அப்பாஸ் கான் இயக்கிய சல்கிரா நாடகத்துடன் அவர் நடிப்புக்கு திரும்பினார்.[2] ஜீ தொலைக்காட்சியில் குறுகிய கால புருஷ்கேத்ராவுடன் தொடங்கி மூன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கினார், இது முதல் முறையாக மாற்று பாலியல் பற்றிய விவாதத்தை வெளிக்கொணர்வதில் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில் பெண்களின் பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டுகிறது.[12] கிரண் கெர் டுடே மற்றும் ஜக்தே ரஹோ, போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் கிரோன் கெர் தொகுத்து வழங்கினார்.[13]
அவரது மறுபிரவேச திரைப்படம் ஷியாம் பெனகலின், சர்தாரி பேகம் (1996) ஆகும். இது 1997 தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதை வென்றது.
குறிப்புகள்
தொகு- ↑ "Always there, from tiny steps to big leaps". Archived from the original on 10 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-11-29. Indian Express, 12 May 2002.
- ↑ 2.0 2.1 "Once more, with feeling". Archived from the original on 10 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-09-20.. desimatch.com
- ↑ 'Art knows no boundary' பரணிடப்பட்டது 10 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் Daily Star, 3 December 2003.
- ↑ Kiron Kher in the middle of controversy பரணிடப்பட்டது 10 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் apunkachoice.com. 12 August 2000 .
- ↑ "Sikandar is blessed to have Anupam as his stepfather: Kiran Kher". The Times of India. 25 February 2014. Archived from the original on 27 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 February 2014.
- ↑ "Distinguished Alumni". Panjab University. Archived from the original on 4 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
- ↑ Numerology: Bust or boom? பரணிடப்பட்டது 2013-06-28 at Archive.today Times of India, 20 August 2003.
- ↑ All love and Kher பரணிடப்பட்டது 10 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் The Hindu, 19 August 2004.
- ↑ "Shifting roles, yet 'keeping it real'". Hindustan Times (in ஆங்கிலம்). 2014-04-03. Archived from the original on 7 February 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-06-04.
- ↑ Kiran Kher on her son, Sikander பரணிடப்பட்டது 10 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் Rediff.com, 2 June 2008.
- ↑ "Films are to entertain, not preach: Kirron Kher". Archived from the original on 30 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-11-29. The Peninsula, 28 April 2008.
- ↑ The Making of Neoliberal India: Nationalism, Gender, and the Paradoxes of Globalization, by Rupal Oza, Published by CRC Press, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-95186-0. Page 63.
- ↑ Kirron Kher’s stock zooms higher! பரணிடப்பட்டது 26 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம் Times of India, 22 September 2008.